Word |
English & Tamil Meaning |
---|---|
நரைக்கொம்பு | narai-k-kompu, n. <>id.+. Lit., White stick, Bone; [வெள்ளைக் கழி] எலும்பு. (சங். அக.) |
நரைக்கொள்ளு | narai-k-koḷḷu, n. <>id.+. A kind of gram; கொள்ளுவகை. (மலை.) |
நரைச்சல் | naraiccal, n. <>நரை-. Faded condition of growing crops; பயிர் முதலியவற்றின் வெளிறின தன்மை. (W.) |
நரைஞர் | naraiar, n. <>நரை. Aged persons, as grey-haired; வயது சென்றவர். நரைஞரை யிளைஞராக்கி (குற்றா. தல. திருமால். 73). |
நரைத்தை | naraittai, n. perh. id. Thin sage-leaved Indian linden. See அங்கோலம், 2. |
நரைப்பு | naraippu, n. <>நரை-. Getting grey-haired; மயிர் வெண்மையாகை. நரைப்பு மூப்பொடு நடலையு மின்றி நாதன்சேவடி நண்ணுவர் (தேவா. 462, 10). |
நரைமாடு | narai-māṭu, n. <>நரை +. Greyish or ash-coloured cattle; மங்கின வெண்மை நிறமுள்ள மாடு. (W.) |
நரைமை | naraimai, n. <>id.+. Grey-haired oldage; மூப்பு. நரைமையிற் றிரைதோற் றகையின்றாயது (மணி. 20, 44). |
நரையல்லி | narai-y-alli, n. <>id.+. White Indian water-lily; See வெள்ளாம்பல். (சங். அக.) |
நரையன் | naraiyaṉ, n. <>id. (W.) 1. A grey-haired person; நரைத்தவன். 2. A person prematurely grown grey; 3. Greyish beast; 4. A kind of hawk; |
நரையான் 1 | naraiyāṉ, n. <>id. 1. Pelican; நாரை. Colloq. 2. King-fisher; 3. Crow; 3. A kind of paddy; |
நரையான் 2 | naraiyāṉ, n. prob. நருங்கு-. 1. Small, insignificant thing, as a child; சின்னது. (w.) 2. Child of stunted growth; |
நரையுந்திரையுமில்லான் | naraiyuntiraiyum-illāṉ, n. <>நரை+. Crow, believed not to grow old; [மூப்படையாதது] காகம். (சங். அக.) |
நல் 1 | nal, adj. <>நன்-மை. [K. nal.] Good; நல்ல. கச்சையங்களி நல்யானை. (சூளா. அரசியற். 27). |
நல் 2 | nal, n. Abbrev. of நல்குரவு. See நல்குரவு. கல்குயின் றன்னவென்னல் கூர்வளிமறை (புறநா. 190) . |
நல்கல் | nalkal, n. <>நல்கு-. 1. Bestowing, granting; கொடுக்கை. நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே (புறநா. 312). 2. Liberal gift; 3. Love; 4. Favour, kindness; |
நல்கு - தல் | nalku-, 5 v. tr. 1. [M. nalkuka.] To bestow, grant, give; கொடுத்தல். இல்லோர் புன்கண் டீர நல்கும் (பதிற்றுப். 86, 6). 2. To desire, like; 3. To show deep love; 4. To create; 5. To train, bring up, as a child; 1. To delay; 2. To be useful; 3. To rejoice; 4. To show favour; to bestow grace; |
நல்குரவு | nalkuravu, n. <>நல்கூர்-. Poverty, indigence, destitution; வறுமை. நல்குரவென்னு நசை (குறள், 1043). |
நல்கூர் - தல் | nalkūr-, 4 v. intr. prob. நல்கு-+ஊர். 1. To be poor, indigent, destitute; வறுமைப்படுதல். நல்கூர்ந்த மக்கட்கு (நாலடி, 242).) 2. To be wearied; 3. To suffer; |
நல்கூர் | nalkūr, n. <>நல்கூர்-. Poverty; எளிமை. நல்கூர்ச் கட்டழ னலிந்துகை யறுப்ப (பெருங். வத்தவ. 2, 21). |
நல்கூர்ந்தோன் | nalkūrntōṉ, n. <>id. Poor, indigent man; வறியவன். (திவா.) |
நல்ல | nalla, adj. <>நன்-மை. [K. M. nalla.] 1. Good, fine, excellent; நன்மையான. 2. Abundant, copious; 3. Intense, severe; |
நல்லகாரை | nalla-kārai, n. <>நல்ல+. Spinous honey-thorn. See காரை1, 1. (L.) |