Word |
English & Tamil Meaning |
---|---|
நறை | naṟai n. <>நறு-மை. [K. M. naru.] 1. Honey ; தேன். முறுக்கவிழ் நறைக்கமலம் (தணி கைப்பு. பிரமனருள். 2.) 2. Toddy ; 3. Fragrance; 4. Incense; 5. Spices; 6. A fragrant creeper; 7. cf. நரை. Fault, defect; |
நறைக்காய் | naṟai-k-kāy n. <>நறை+. Nutmeg; சாதிக்காய். பைங்கொடி நறைக்கா யிடையிடுபு (திருமுரு.190). |
நறைக்கொடி | naṟai-k-koṭi . See நறை, 6. . |
நறையால் | naṟaiyāl n. A creeper ; பகன்றைக்கொடி. (திவா.) |
நன்கலந்தருநன் | naṉ-kalan-tarunaṉ n.<>நல்1+கலம்+தரு. Jeweller ; இரத்தினப்பணித்தட்டான். பொன்செய் கொல்லரு நன்கலந் தருநரும் (சிலப், 5, 31). |
நன்கனம் | naṉkaṉam adv. <>id. Well ; நன்றாக. நாவிடை நன்னூ னன்கன நவிற்றி (மணி.13, 24). |
நன்காடு | naṉ-kāṭu n. <>id. +. Cremation ground, used euphemistically ; சுடுகாடு. சுடுகாட்டை நன்காடு என்றலும் (தொல்.சொல்.17, இளம்பூ.). |
நன்கு | naṉku <>நன்-மை. n. 1. That which is good; நல்லது. நல்லவையு ணன்கு செலச்சொல்லுவார் (குறள், 719) 2. Abundance; 3. Beauty; 4. Health, welfare; 5. Steadiness, stability; 6.Good omen; 7. Happiness; Thoroughly well; |
நன்குமதி - த்தல் | naṉku-mati v. tr. <>நன்கு +. To respect, hold in high esteem ; கௌரவித்தல். (குறள், 195, உரை.) |
நன்கொடை | naṉ-koṭai n. <>நன்-மை+. 1. Donation, gratuity, benefaction, present; வெகுமதி. Mod. 2. (Legal.) Gift with full power of disposal conferred on the donee; |
நன்செய் | naṉ-cey n.<>id.+. Wet lands, opp. to Puṉ-cey; நெற்பயிர் உண்டாம் கழனி. |
நன்செய்த்தரம்புன்செய் | naṉ-cey-taram-puṉ-cey n. <>நன்செய்+. (C.G.) 1. Wet land so poorly irrigated that it does not produce wet crops and is assessed at lower rates ; புன்செய்ப்பயிர் சாகுபடி செய்யப்படும் நன்செய்நிலம். 2. Mixed descent; Mixed breed; |
நன்செய்மேற்புன்செய் | naṉ-cey-mēṟpuṉ-cey n. <>id. +. See நன்செய்த்தரம்புன்செய். (C. G.) . |
நன்செய்வான்பயிர் | naṉ-cey-vāṉ-payir n. <>id. Special products, such as betel, sugarcane, cultivated in wet land ; நன்செயில் பயிராகும் வெற்றிலை கரும்பு முதலியன. (Rd. M. 287.) |
நன்சொல் | naṉ-col n. <>நன்-மை+. (W.) 1. Compliment; civil words ; இன்சொல். 2. Good advice, profitable discourse, words of comfort; |
நன்ஞானம் | naṉ-āṉam m. <>id. +. (Jaina.) Right knowledge, one of irattiṉa-t-tirayam, q.v.; சைனமதத்து வழங்கும் இரத்தினத்திரயத்தொன்று. (சீவக.2813, உரை.) |
நன்பகல் | naṉ-pakal n. <>id. +. See நன்பகலந்தி. நன்பக லவணீத்து (கலித். 74, 10). . |
நன்பகலந்தி | naṉ-pakal-anti n. <>நன்பகல் +. High noon ; உச்சிக்காலம். நன்பகலந்தி நடையிடை விலங்கலின் (பொருந.46). |
நன்பால் | naṉ-pāl n. <>நன்-மை +. Moral conduct ; நல்லொழுக்கம். நன்பால் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர் பார்ப்பார் (சீவக.443). |
நன்பு | naṉpu <>id [T. nanupu.] Goodness, excellence; நன்மை. நன்புளோர் வியந்தாரில்லை (திருவாலவா.16 12). Well; |
நன்பொருள் | naṉ-poruḷ n. <>id. +. 1. Fundamental doctrines of a religion; தத்துவார்த்தம். மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும் (மணி 1,11) 2. Son; |
நன்மக்கள் | naṉ-makkaḷ n. <>id. +. 1. Good children ; சற்புத்திரர். (குறள், அதி. 7, அவ). 2. The good, the virtuous, the eminent; |