Word |
English & Tamil Meaning |
---|---|
நன்மொழிபுணர்த்தல் | naṉ-moḻi-puṇarttal n. <> நன்மொழி+. Use of appropriate and elegant words, one of ten nūl-aḻaku, q.v.; நூலழகு பத்தனுள் இனிய மொழிகளைச் சேர்த்து வழங்குகை. (நன்.13.) |
நன்றாக | naṉṟāka, <> நன்று. adv. Well, satisfactorily; A term of benediction; செம்மையாக. நன்றாக நால்வர்க்கு . . . அறம் உரைத்தான் (திருவாச. 12, 16). - A term of benediction; |
நன்றாய் | naṉṟāy, adv. <>id. 1. See நன்றாக. . 2. Liberally; |
நன்றாயிரு - த்தல் | naṉṟāy-iru-, v. intr. <>id.+. 1. To be good, beautiful; நல்ல நிலைமையிலிருத்தல். 2. To prosper, flourish, fare well; to be in health; |
நன்றி | naṉṟi, n. <> நன்-மை. 1. Goodness; நன்மை. (சூடா.) 2. Help, kindness, benefit, favour; 3. Gratitude; 4. Virtue, merit; |
நன்றிகூறு - தல் | naṉṟi-kūṟu-, v. intr. <> நன்றி+. See நன்றிசொல்-. Mod. . |
நன்றிகெட்டவன் | naṉṟi-keṭṭavaṉ, n. <>id.+. Ungrateful person; நன்றியறிவில்லாதவன். |
நன்றிகெடு - தல் | naṉṟi-keṭu-, n. <>id.+. To be ungrateful; செய்ந்நன்றி மறத்தல். (W.) |
நன்றிகேடு | naṉṟi-kēṭu, n. <>id.+. Ingratitude; செய்ந்நன்றிமறக்கை. |
நன்றிகொல்(லு) - தல் | naṉṟi-kol-, v. intr. <>id.+. See நன்றிகெடு-. செய்ந்நன்றி கொன்ற மகற்கு (குறல், 110). . |
நன்றிகோறல் | naṉṟi-kōṟal, n. <>id. +. See நன்றிகேடு. (W.) . |
நன்றிசொல்(லு) - தல் | naṉṟi-col-, v. intr. <>id. +. To acknowledge benefits, thank; செய்ந்நன்றியறிவித்தல். (W.) |
நன்றியற்றவன் | naṉṟi-y-aṟṟavaṉ, n. <>id. +. Ungrateful person; செய்ந்நன்றிமறந்தவன். (W.) |
நன்றியறி - தல் | naṉṟi-y-aṟi-, v. intr. <>id. +. To be grateful, thankful; செய்ந்நன்றியுணர்தல். (W.) |
நன்றியறிவு | naṉṟi-y-aṟivu, n. <>id. +. Gratitude; செய்ந்நன்றியறிகை. |
நன்றியில்செல்வம் | naṉṟi-y-il-celvam, id. +. Riches not used in doing good, useless wealth; உபகாரமற்ற செல்வம். (குறள், 101-ஆம் அதி.) |
நன்றியீனம் | naṉṟi-y-iṉam, n. <>id. +. See நன்றிகேடு. (W.) . |
நன்று | naṉṟu, n. <>நன்-மை. 1. That which is good, goodness; நல்லது. அங்கிது நன்றிது நன்றெனு மாயை யடங்கிடு மாகாதே (திருவாச. 49, 8). (சூடா.); 2. Excellence; 3. Greatness, largeness; 4. Virtue, merit ; 5. Happiness, felicity; 6. Good deed; 7. Benefit; 8. Prosperity; 9. Heaven; 10. Expr. signifying approval; |
நன்னடத்தை | naṉṉaṭattai, n. <>நல்1 +. See நன்னடை. Colloq. . |
நன்னடத்தைஜாமீன் | naṉṉaṭattai-jāmīṉ, n. <>நன்னடத்தை+. (Legal.) Security for good behaviour; நல்லொழுக்கமாய் நடந்துகொள்ளுவதற்குக் கொடுக்கும் பிணை. |
நன்னடவடிக்கைஜாமீன் | naṉ-ṉaṭavaṭik-kai-jāmīṉ, n. <>நல்1+நடவடிக்கை+. See நன்னடத்தைஜாமீன். . |
நன்னடை | naṉ-ṉaṭai, n. <>id. +. Good conduct; நல்லொழுக்கம். (யாழ். அக.) |
நன்னயம் | naṉ-ṉayam, n. <>id. +. 1. Gratifying words or deeds, acts of kindness; இன்சொற் செயல்கள். இன்னாசெய் தாரை யொறுத்தலவர்நாண நன்னயஞ் செய்து விடல் (குறள், 314); 2. Civility, politeness, complaisance; 3. Goodness, excellence; 4. Thought; 5. (Jaina.) The doctrine of qualified predication. |
நன்னர் | naṉṉar, n. <>id. Goodness; that which is good; நன்மை. பலவுட னன்னர் நெஞ்சத்தின்னகை வாய்ப்ப (திருமுரு. 64). |
நன்னருக்கல் | naṉṉarukkal, n. <>id. +. (w.) 1. Slight, internal pains, as in the first stages of pregnancy; pain from hunger indigestion or fever; பசி மந்தம் முதலியவற்றால் வயிற்றில் விட்டுவிட்டு வலியுண்டாகை; 2. First labour pains; |