Word |
English & Tamil Meaning |
---|---|
நன்னல் | naṉṉal, n. Red ceder. See மதகரிவேம்பு, 3. (L.) |
நன்னன் | naṉṉaṉ, n. The chief of Ceṅkaṇmā and hero of Malai-paṭu-kaṭām; செங்கண் மாத்துவேளும் மலைபடுகடாத்தின் பாட்டுடைத்தலைவனுமாகிய சிற்றரசன். செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னனை (மலைபடு. இறுதித்தொடர்). |
நன்னன்வேண்மான் | naṉṉaṉ-vēṇmāṉ, n. <>நன்னன்+. See நன்னன். நறவுமகி ழிருக்கை நன்னன்வேண்மான் (அகநா. 97). . |
நன்னாட்கொள்(ளு) - தல் | naṉṉāṭ-koḷ-, v. intr. <>நல்1+நாள்+. To appoint an auspicious day; மங்கலமான தினத்தைக் குறிப்பிடுதல். நன்னாட் கொண்டு பெரும்பயண மெழுகவென்று நலஞ்சாற்ற (பெரியபு. சேரமான்பெரு. 46). |
நன்னாரி | naṉṉāri, id. + prob. நாறு-. [M. nannāri.] Indian sarsaparilla, m. cl., Hemidesmus indicus; கொடிவகை. (பதார்த்த. 492.) |
நன்னாள் | naṉṉāḷ, n. <>id. +. Festive occasion, festival day; விழவு நாள். தீவகச்சாந்தி செய்தரு நன்னாள் (மணி. 1, 35). Auspicious day; |
நன்னி | naṉṉi, n. <>T. nanna. That which is small, short; சிறியது. நன்னிக் குரங்குங் கொசுகும் பகையோ நமக்கென்றானே பிரகஸ்தன் (இராமநா. உயுத்.1). |
நன்னிக்கல் | naṉṉi-k-kal, n. <>நன்னி +. A grinding stone for preparing medicine; மருந்து அரைக்கும் அம்மி. (தைலவ. பாயி. 12, உரை.) |
நன்னிநூல் | naṉṉi-nūl, n. <>id. +. Short ends of threads in cloth badly woven; துணியின் நூற்குறை. (W.) |
நன்னிப்பயறு | naṉṉi-p-payaṟu, n. <>id. +. Aconite-leaved kidney bean. See துலக்கப்பயறு. (W.) |
நன்னிப்பையல் | naṉṉi-p-paiyal, n. <>id. +. Small boy; சிறுபையன். (W.) |
நன்னிலம் | naṉ-ṉilam, n. <>நல்1 +. Wet land; நன்செய். (W.) |
நன்னிலமிதித்தல் | naṉṉila-mitittal, n. <>id. + நிலம் +. The ceremony in which a royal bridegroom first steps out of his palace and goes to his audience-chamber, after marriage; மணமகனான அரசன் தன் மனையைவிட்டு முதன்முதல் அத்தாணிமண்டபத்திற்கு அடிவைக்கும் சடங்கு. திருமால் நள்ளிலமிதித்தற்குப் போந்தான் (சீவக. 2369, உரை) |
நன்னிலை | naṉṉilai, n. <>id. +. 1. Good position or condition; நல்லநிலைமை. நன்னிலைக் கட் டன்னை நிறுப்பானும் (நாலடி, 248). 2. Moral conduct; 3. Religious austerities, penance; 4. The world; |
நன்னிறம் | naṉṉiṟam, n. <>id. +. White colour; வெண்ணிறம். (யாழ். அக.) |
நன்னீர் 1 | naṉṉīr, n. <>id. +. 1. Pure or wholesome water fit to be drunk; சுத்த சலம். 2. Rose-water; |
நன்னீர் 2 | naṉṉīr, n. <>id.+ நீர்-மை. Good nature or disposition; நல்ல இயற்கை. நன்னீரை வாழி யனிச்சமே (குறல், 1111). |
நன்னீர்க்கடல் | naṉṉīr-k-kaṭal, n. <>நன்னீர்1+. Ring-shaped ocean of fresh water, one of eḻu-kaṭal, q.v.; எழுகடலுள் சுத்தசலங்கொண்ட கடல். |
நன்னு - தல் | naṉṉu, 5 v. tr. (J.) To nibble, as rats or squirrels; to bite or nibble off anything, as nails; பல்லாற் கடித்தல். |
நன்னுதல் | naṉṉutal, n. <>நல்1+நுதல். Damsel, lady, as having a beautiful forehead; [அழகிய நெற்றியை உடையாள்] பெண். நன்னுதல் கணவ (பதிற்றுப். 42, 7). |
நன்னூல் | naṉṉūl, n. <>id. +. A Tamil grammar by Pavaṇanti-muṉivar, early in the 13th c.; 13-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்த பவணந்தி முனிவர் இயற்றிய இலக்கணநூல். |
நன்னெருக்கல் | naṉṉerukkal, n. <>id. +. See நன்னருக்கல், 2. (J.) . |
நன்னெல் | naṉṉel, n. <>id. +. A superior paddy of yellowish hue; செஞ்சாலி. (பிங்.) |
நன்னெறி | naṉṉeṟi, n. <>id. +. 1. Righteous conduct, path of virtue, moral life; சன்மார்க்கம். ஏமஞ்சார் நன்னெறியுஞ் சேர்கலார் (நாலடி, 327). 2. A didactic poem of 40 stanzas composed by Civa-p-pirakāca-muṉivar, 17th c.; |
நன்னை | naṉṉai, n. Mimicking, mocking, ridiculing; பரிகாசம். Collq. |
நனந்தம் | naṉantam, n. 1. Indian beech. See புன்கு. (மலை.) 2. Sunn hemp. |