Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாசம்வருவான் | nācam-varuvān, n. (நாசம்+. See நாசமற்றுப்போவான். (W.) . |
| நாசமற்றுப்போவான் | nācam-aṟṟu-p-pōvān, n.<>id. + அறு-+. Accursed person, used in imprecation; ஒரு வகைச்சொல் Colloq. |
| நாசமறுவான் | nācam-aṟuvāṉ, n.<>id. +. See நாசமற்றுப்போவான். (W.) . |
| நாசமிலி | nācam-ili, n.<>id. + இல் neg. šiva, as imperishable; (கேடற்றவன்) சிவபிரான். (யாழ்.அக.) |
| நாசமோசம் | nāca-mōcam, n.<>id. +. Peril, jeopardy, danger of life; அபாயம். (W.) |
| நாசயோகம் | nāca-yōkam, n.<>id. +. (Astrol.) Inauspicious conjunction of naksatra and vāram: கேடுவிளைக்கும் வார நட்சத்திரங்களின் சேர்க்கை. (பெரியவரு.) |
| நாசன் | nācaṉ, n.<>id. 1. Destroyer; அழிப்பவன். என்பிறவி நாசனே (திருவாச. 5,51). 2. Yama, as God of Death; |
| நாசனம் | nācaṉam, n.<>nāšana. See நாசம். . |
| நாசனன் | nācaṉaṉ, n.<>id. Destroyer; நாசஞ்செய்பவன். திமிரநாசனன் (பாரத.சூது.141). |
| நாசனி | nācaṉi, n. Fem of நாசனன். Destroyer; அழிப்பவள். கன்மநாசனி (நாமதீப.). |
| நாசாக்கிரம் | nācākkiram, n. <>nāsāgra. See நாசிகாக்கிரம். (யாழ். அக.) . |
| நாசி - த்தல் | nāci-, 11 v. <>nāša. (J.) 1. To perish; to be destroyed; அழிதல். 2. To be reduced to primitive elements; |
| நாசி | nāci, n. <>nāsikā. 1. Nose; மூக்கு. நாமகணாசி சிரம்பிரமன்பட (திருவாச. 14, 37). 2. Nostril; 3. Passage through the arch of a drain; 4. A component part of the upper storey of a mansion, as a base for a flagstaff; 5. The top of a door-frame; 6. (Mus.) A defect in singing; |
| நாசிக்கனப்பு | nāci-k-kanappu, n. <>நாசி+ghana. Inflammation of the nose from cold or mucus; சனி முதலியவற்றால் மூக்குவிங்கியிருக்கை. (W.) |
| நாசிகாக்கிரம் | nācikākkiram, n. <>nāsikā + agra. Tip of the nose; நுனிமூக்கு. விழித்துணைக ணாசிகாக்கிரத்தினுற (பிரபோத. 44, 14). |
| நாசிகாசூரணம் | nācikā-cūraṇam, n. <>id.+cūrṇa. Snuff; மூக்குப்பொடி. Mod. |
| நாசிகாபரணம் | nācikāparanam, n. <>id + ābharaṇa. Nose-jewel; மூக்குத்தி. நாசிகாபரணமாகச் சொல்லருங் குன்றிதேடிச் சூடியதென்னை (திருவாலவா. 45, 6). |
| நாசிகாபீடம் | nācikā-piṭam, n. <>id.+. Tubercle in the nose; மூக்குள் வளரும் சதைவகை. (W.) |
| நாசிகாமலம் | nācikā-malam, n. <>id.+mala. 1. Mucous matter in the nose; மூக்குச்சளி. (W.) 2. Fetid matter in the nose; |
| நாசிகாரோகம் | nācikā-rōkam, n. <>id.+. Nasal catarrh, Coryza; நாசியில் வரும் நோய். (தைலவ. தைல. 53.) |
| நாசிகை | nācikai, n. <>nāsikā. 1. Nose; மூக்கு. 2. See நாசி, வாரணங் கேழல் சீயமென்றவை நிரைத்து நாசிகை யிருத்தியே (கலிங். 88, புதுப்.). 3. See நாசி, 5. (W.) |
| நாசித்தலை | nāci-t-talai, n. <>நாசி+. Figured head of the yāli or lion on the walls of a temple or upper part of a tower; கோயிற்றிருமதில் கோபுரங்களில் அமைந்த யாளி அல்லது சிங்கத்தின் தலை. (J.) |
| நாசித்துவாரம் | nāci-t-tuvāram, n. <>id.+. Nostrils, Nasal fossae; மூக்குத்துளை. |
| நாசிதாரு | nāci-tāru, n. <>id.+. See நாசி, 5. (யாழ். அக.) . |
| நாசிப்பொடி | nāci-p-poti, n. <>id.+. See நாசிகாசூரணம். (யாழ். அக.) . |
| நாசியடைப்பு | nāci-y-ataippu, n. <>id.+. The stuffy stage in cold, when, the mucous membranes being swollen, the nasal passage is blocked; ஜலதோஷத்தில் உண்டான சளியினால் மூக்கு அடைத்துக்கொள்ளுகை. Loc. |
| நாசியம் | nāciyam, n. <>nāsya. Nose-string, as of a draught-ox; மூக்கணாங்கயிறு. (W.) |
| நாசியாபீடம் | nāciyā-pitam, n. <>nāsikā+. See நாசிகாபீடம். (W.) . |
| நாசியுடைவு | nāci-y-utaivu, n. <>நாசி+. Nosebleeding, Epistaxis; பொன்னாசியுடைகை. Loc. |
| நாசியெலும்பு | nāci-y-elumpu, n. <>id.+. Nasal bones; மூக்கெலும்பு. (C. E. M.) |
