Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாட்டுப்பெண் | nāṭṭu-p-peṇ, n. prob. மணாட்டுப்பெண். Daughter-in-law; மகன் மனைவி. |
| நாட்டுப்பொட்டு | nāṭṭu-p-poṭṭu, n.<>நாடு +. Marriage badge tied on a Kaikkōḷa girl by the headman of the caste, making her a tāci; கைக்கோள மகளிரணியும் பொட்டுத்தாலி. |
| நாட்டுப்போக்கு | nāṭṭu-p-pōkku, n.<>id. + போ-. 1. Country style, fashion or manners; நாட்டுவழக்கம். (யாழ். அக.) 2. Prevailing fashion or style; |
| நாட்டுப்போங்கு | nāṭṭu-p-pōṅku, n.<>id. +id. 1. See நாட்டுப்போக்கு. . 2. Rusticity, coarseness; |
| நாட்டுபாதி | nāṭṭupāti, n.<>id. + உபாதி. An ancient tax; ஒரு பழைய வரி. (S. I. I. ii, 115.) |
| நாட்டுமஞ்சட்சீனக்கிழங்கு | nāṭṭu-ma-caṭ-cīṉa-k-kiḻaṅku n<>.id. +. Rhubarb, Rheum emodi; கிழங்குவகை. |
| நாட்டுமட்டம் | nāṭṭu-maṭṭam, n.<>id. +. Country pony, opp. to paikō-maṭṭam; குதிரை வகை. |
| நாட்டுமரவட்டை | nāṭṭu-maravaṭṭai, n.<>id. +. A kind of maravaṭṭai மரவட்டை வகை. (சீவரட். 358.) |
| நாட்டுமானிடம் | nāṭṭu-māṉiṭam, n.<>id. +. The common people of a country, proletariate; சாமானிய மக்கள். நாட்டு மானிடத்தோடெனக்கரிது (திவ்.பெரியாழ்.5, 1, 5). |
| நாட்டுமானியம் | nāṭṭu-māṉiyam, n.<>id. +. Land held rent-free, as by the headman of a village; கிராமத்தலைவன் அனுபவிக்கும் இனாம் பூமி |
| நாட்டுமூப்பன் | nāṭṭu-mūppaṉ, n.<>id. +. The headman of the Paḷḷar caste; பள்ளர் தலைவன். Tp. |
| நாட்டுவர்த்தமானம் | nāṭṭu-varttamāṉam, n.<>id. +. The mofussil news; தலைநகர்க்கு வெளியிடங்களினின்றுவருஞ் செய்தி. (W.) |
| நாட்டுவழக்கம் | nāṭṭu-vaḻakkam, n.<>id. +. Customs of a country; நாட்டின் ஆசாரம். (யாழ். அக.) |
| நாட்டுவளப்பம் | nāṭṭu-vaḷappam, n.<>id. +. 1. See நாட்டுவளம் . 2. See நாட்டுவழக்கம். கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன். |
| நாட்டுவளம் | nāṭṭu-vaḷam, n.<>id. +. 1. Fertility of a country; தேசச்செழிப்பு. 2. Good condition of a country, as regards its inhabiants, animals, etc; |
| நாட்டுவன் | nāṭṭuvaṉ, n.<>id. Leading ryot or cultivator; பெரிய குடித்தனக்காரன். (G. Tp. D. i, 212). |
| நாட்டுவாதுமை | nāṭṭu-vātumai, n.<>id. +. Indian almond. See வாதாமரம். |
| நாட்டுவெள்ளரி | nāṭṭu-veḷḷari, n.<>id. +. Cucumber. See வெள்ளரி. (W.) |
| நாட்டெரிவண்டு | nāṭṭerivaṇṭu, n.<>id. +. Telini fly, mylabris cichorii, எரிவண்டுவகை. |
| நாட்டை | nāṭṭai, n. <>nāṭa. (Mus.) A musical mode; ஓர் இராகம். (பரத.இராக.56.) |
| நாட்டைக்குறிஞ்சி | nāṭṭai-k-kuṟici, n. <>நாட்டை+. (Mus.) A musical mode; ஓர் இராகம் |
| நாட்டையர் | nāṭṭaiyar, n. <>நாடு+ஐயர். Indian christian minister, pastor; கிறிஸ்தவப் போதகர். Chr. |
| நாட்பட்டிரு - த்தல் | nāṭ-paṭṭiru-, v. intr. <>நாள்+படு-+. To stay for a long time; நெடுங்காலமிருத்தல். நாட்பட்டிருந் தின்ப மெய்தலுற்று (தேவா. 29, 3) |
| நாட்படு - தல் | nāṭ-paṭu-, v. intr. <>id.+. To be long-standing as a chronic disease; நெடுங்காலந் தங்குதல். நாட்பட்ட வியாதி. 2. To become old, stale; 3. To become out of data; |
| நாட்பணிவிடை | nāṭ-paṇiviṭai, n. <>id. +. (யாழ். அக.) 1. Daily work; அன்றாட வேலை; 2. Work done in an auspicious hour; |
| நாட்பறை | nāṭ-paṟai, n. <>id. +. Hourdrum, நாழிகைப்பறை. (சிலப்.3, ¢27, உரை.) |
| நாட்பார் - த்தல் | nāṭ-pār-, n. <>id. +. To fix an anspicious day, as for a marriage; மங்கல காரியங்கட்குச் சுபதினங் குறித்தல். |
| நாட்பு | nāṭpu, n. <>ஞாட்பு. See ஞாட்பு. விழுமியோர் துவன்றிய வகன்க ணாட்பின் (பதிற்றுப்.45, 5). . |
| நாட்பூ | nāṭ-pū, n. <>நாள்+. See நாட்போது (யாழ். அக.) . |
| நாட்பொருத்தம் | nāṭ-poruttam, n. <>id.+. 1. (Astrol.) Correspondence between the nakṣatras of the prospective bride and bridegroom. See நட்சத்திரப்பொருத்தம். நாட்டுகின்ற சோதிடத்தி னாண்பொருத்த நாட்பொருத்தம் (ஏரெழு. 9). 2. (Poet.) Rule of propriety which enjoins that the nakṣatra of the initial letter of a poem and that of the initial letter of its hero's name should agree, judged by established rules, one of ten ceyyuṇ-wntaṉ-moḻi-p-poruttam, q.v.; 3. The auspicious lunar mansions connected with one's nakṣatra; |
