Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாட்போது | nāṭ-pōtu, n. <>id. +. New blown, iresh flower; அன்றலர்ந்த பூ. தாமரை முகிழ்விரி நாட்போது (சிறுபாண்.183). |
| நாடகக்கணிகை | nāṭaka-k-kaṇikai, n. <>nāṭaka+. Actress, dancing-girl; நாட்டியப் பெண். நாடகக்கணிகையர் தகுதியென்னார் தன்மையள்மையின் (மணி.24, 23) |
| நாடகக்கவி | nāṭaka-k-kavi, n. <>id. +. See நாடகக்காப்பியம். நாடகக் கவிசெய்யவல்ல நல்ல நூலைவல்ல புலவனும் (சிலப்.3, 44, உரை. . |
| நாடகக்காப்பியம் | nāṭaka-k-kāppiyam, n. <>id. +. Dramatic work, drama; நாடகத்தமிழ் நூல். நாடகக்காப்பிய நன்னூ னுனிப்போர் (மணி.19, 80) |
| நாடகக்காரன் | nāṭaka-k-kāran, n. <>id. +. 1. Actor in a drama; நாடகமாடுவோன்; 2. Profligate; 3. Hypocrite, pretender; |
| நாடகச்சந்தி | nāṭaka-c-canti, n. <>id. +. Juncture or division of a drama, reckoned to be five in number, viz., mukam, piratimukam, karuppam, vilaivu, tuyttal; முகம், பிரதிமுகம், கருப்பம், வளைவு, துய்த்தல் என்று ஐவகைப்பட்ட நாடகக் கதைப்பொருத்து. (சிலப்.3, 13, உரை.) |
| நாடகசாலை | nāṭaka-cālai, n. <>id. +. 1. Stage, plavhcuse, theatre; கூத்து நிகழ்த்தும் அரங்கம். (சிலப்.25, 14, அரும்.) Dancing girl; 3. Honour done to a donor to a temple, by which he is received with nautch as he approaches the temple; |
| நாடகசாலையர் | nāṭaka-cālaiyar. n. <>id. +. Dancers; கூத்தர். (தொல்.பொ.168, உரை, டக்.741.) |
| நாடகத்தமிழ் | nāṭaka-t-tamiḻ n. <>id. +. The class of Tamil literature which pertains to dances or to dramatic representation of puranic stories, one of mu-t-tamiḻ, q.v.; முத்தமிழுள் கூத்துப்பற்றி வழங்குந் தமிழிலக்கியப்பகுதி. இனி நாடகத் தமிழில் தேவபாணி வருங்கால் (சிலப். 6, 35, உரை). |
| நாடகத்தரம்பையர் | nāṭakattarampaiyar, n. <>id. +. Celestial dancing-girls, tour in number, viz., Mēṉakai, Arampai, Uruppaci, Tilōttamai; மேனகை, அரம்பை, உருப்பசி, திலோத்தமை என்ற தேவகணிகையர். (பிங்.) |
| நாடகத்தரு | nāṭaka-t-taru, n. <>id. +. A king of song in drama; நாடகப்பாடல்வகை. |
| நாடகத்தி | nāṭakatti, n. <>id. +. 1. Actress; கூத்துநிகழ்த்தும் பெண். (யாழ். அக.) 2. Immodest woman; |
| நாடகத்துறை | nāṭaka-t-tuṟai, n. <>id. +. Dramatic art; நடனவித்தை. (W.) |
| நாடகநடி - த்தல் | nāṭaka-naṭi-, v. intr. <>id. +. See நாடகமடி-. (W.) . |
| நாடகநூல் | nāṭaka-nūl, n. <>id. +. Work on dramaturgy; நாடகவிலக்கணத்தைக்கூறும் நூல். நாடக நூல்களி னமைந்த முறைமையாகலான் (சிலப்.3, 146, உரை). |
| நாடகநூலார் | naṭaka-nūlār, n. <>id. +. Writers on dramaturgy; நாடகநூல் இயற்றிய ஆசிரியர். இனி நாடகநூலார் இவ்விருப்பை ஐம்பதென விரிவரையறையாற் கூறி (சிலப், 8, 25, உரை). |
| நாடகப்பண் | nāṭaka-p-paṇ, n. <>id. +. A tune sung on the stage; நாடகத்தில் வழங்கும் பண்வகை. (W.) |
| நாடகப்பரத்தை | nāṭaka-p-parattai, n. <>id. +. See நாடகக்கணிகை. (சீவக. அரும்.) . |
| நாடகப்பெண் | nāṭaka-p-peṇ, n. <>id.+. See நாடகக்கணிகை. (யாழ். அக.) . |
| நாடகபாத்திரம் | nāṭaka-pāttiram, n. <>id. +. Actor in a drama, Dramatis persona; நாடகமேடையில் நடிப்போன். Colloq. |
| நாடகம் | nāṭakam, n. <>nāṭaka. 1. Measured dance; தாளவொத்துக்கு இயைய நடிக்கும் நடம். (பிங்.) 2. Play, drama, comedy; 3. See நாடகத்தமிழ். இயலிசைநாடகங்கள். |
| நாடகம்விளையாடு - தல் | nāṭakam-viḷaiyāṭu-, v. intr. <>id. +. See நாடகமாடு-. (W.) . |
| நாடகமகள் | nāṭaka-makaḷ, n. <>id. +. Dancing-girl; நாடகமாடுங் கணிகை. நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த யோவியச் செந்நூல் (மணி. 2, 30). |
