Word |
English & Tamil Meaning |
---|---|
ஆணம் 3 | āṇam n. cf. āṇaka. Smallness, meanness; சிறுமை. ஆணமில் சிந்தை வீரன் (கந்தபு. வீரவாகு.கந்.39). |
ஆணலி | āṇ-ali n. <>ஆண்+. Hermaphrodite human being in whom masculine features predominate; ஆண்தோற்றம் மிக்க அலி. (தொல்.பொ.605, உரை.) |
ஆணவம் 1 | āṇavam n. <>āṇava. 1. Pride, arrogance, egotism; செருக்கு. (தாயு.சின்.3.) 2. See ஆணவமலம். |
ஆணவம் 2 | āṇavam n. A mineral poison; கோளகபாஷாணம். (மூ.அ.) |
ஆணவமலம் | āṇava-malam n. <>āṇava+. (Saiva.) Matter which is eternally encasing the soul and lasting till its final liberation, one of mu-m-malam; மும்மலங்களு ளொன்று. (சி.சி.2, 80, மறைஞா.) |
ஆணவமறைப்பு | āṇava-maṟaippu n. <> id.+. Ignorance in which souls are enveloped because of āṇavam; ஆணவமலத்தால் ஆன்மாவுக் குண்டாகும் அஞ்ஞானம். (W.) |
ஆணன் | āṇaṉ n. <>ஆண். Manly person; ஆண்மையுடையவன். அரவாட்டிய வாணனே (சிவதரு. சுவர்க்கநரக.222). |
ஆணாடு - தல் | āṇ-āṭu- v,intr. <> id.+. To do as one pleases; இஷ்டப்படி நடத்தல். அசோதையாணாடவிட்டிட் டிருக்கும் (திவ்.நாய்ச்.3, 9). |
ஆணாப்பிறந்தோன் | āṇ-ā-p-piṟantōṉ n. <> id. 1. Man, one born a male; மனிதன். 2. Tanner's cassia. See ஆவிரை. |
ஆணாள் | āṇāḷ n. <> id.+. நாள். (Astrol.) Male nakṣatras, viz., பரணி, கார்த்திகை, உரோகிணி, புனர்பூசம், பூசம், அத்தம், அனுஷம், திருவோணம், பூரட்டாதி, உத்தரட்டாதி; ஆண் நக்ஷத்திரங்கள். (விதான.பஞ்சாங்க.17.) |
ஆணாறு | āṇ-āṟu n. <> id.+. Westward-flowing rivers, as skt. masc. nada, opp. to பெண்ணாறு; மேற்குநோக்கியோடும் ஆறு. ஆணாறு பெண்ணாறுகள் ஒன்றின்றிக்கே (ஈடு, 4, 4, ப்ர). |
ஆணி 1 | āṇi n. <>āṇi. 1. Nail, small spike; இரும்பாணி. அடிப்பேன் கவியிருப் பாணிகொண்டே (தனிப்பா.i, 170, 22). 2. Linch-pin; 3. Style for writing; 4. Peg, plug, wooden spike; 5. Pin of gold for testing the standard of other gold; 6. Core of an ulcer; 7. Excellence, superiority; 8. Support, basis, foundation,protection; 9. Wish, desire; |
ஆணி 2 | āṇi part. Suffix in words like உச்சாணி, சிரிப்பாணி, சின்னாணி, having an intensive force. . |
ஆணிக்கல் | āṇi-k-kal n. <>ஆணி1+. Standard weight for gold; கச்சிப்பேட்டு ஆணிக்கல்லால் நிறை இருபதின்கழஞ்சு பொன் (S.S.I.i, 117). |
ஆணிக்குருத்து | āṇi-k-kuruttu n. <> id.+. Heart or prime part of a palmyra shoot; பனையின் அடிக்குருத்து. (W.) |
ஆணிக்கொள்(ளு) - தல் | āṇi-k-koḷ- v.intr. <> id.+. 1. To make one's position firm; இருப்பிடத்தை ஸ்திரம் செய்து கொள்ளுதல். இங்கே ஆணிக்கொண்டு பிறகு மற்றக் காரியங்களை நீ பார்க்க வேண்டும். Loc. 2. To remain fixed, as the eyes before death; |
ஆணிக்கோவை | āṇi-k-kōvai n. <> id.+. String of gold pins for testing the quality of other gold; உரையாணி கோத்த மாலை. (W.) |
ஆணிச்சவ்வு | āṇi-c-cavvu n. <> id.+. Cornea of the eye; விழிப்படலம். |
ஆணிச்சிதல் | āṇi-c-cital n. <> id.+. Core of a suppurating ulcer; சீப்பிடித்த புண்ணாணி. (W.) |
ஆணிச்செருக்கம் | āṇiccerukkam n. A prepared arsenic; இலவணபாஷாணம்.(மூ.அ.) |
ஆணித்தரம் | āṇi-t-taram n. <>āṇi+tara. 1. Finest quality, standard; முதற்றரம். 2. Firmness; |
ஆணிதை - த்தல் | āṇi-tai- v.intr. <> id.+. 1. To nail, fasten with nails,as reapers; பொருத்த ஆணியடித்தல். 2. To pierce as nail in one's foot; |
ஆணிப்புண் | āṇi-p-puṇ n. <> id.+. Carbuncle; உள்ளாணியுள்ள சிலந்தி. |
ஆணிப்பூ | āṇi-p-pū n. <> id.+. White opacity of the cornea of the eye, leucoma; கண்ணில் விழும் வெள்ளை. (மூ.அ.) |
ஆணிப்பூடு | āṇi-p-pūṭu n. <> id.+. See ஆணிப்பூ. (மூ.அ.) |
ஆணிப்பொன் | āṇi-p-poṉ n. <> id.+. Gold of the finest quality; உயர்மாற்றுப்பொன். ஆணிப்பொன்னாற் செய்த . . . தொட்டில் (திவ்.பெரியாழ்.1, 3, 1). |
ஆணிமுத்து | āṇi-muttu n. <> id.+. Pearl of the finest quality; உயர்தரமான முத்து. |