Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிடூதனம் | niṭutaṉam, n. <>niṣūdana. Slaughter, murder; கொலை. (யாழ்.அக.) |
| நிடூதனன் | niṭūtaṉaṉ, n. <>id. Murderer; கொலைஞன். (சது.) |
| நிடேகம் | niṭēkam, n. <>niṣēka. Ceremony of consummation of marriage; வதூவரர் முதன்முறை கூடுஞ்சடங்கு. |
| நிடேதம் | niṭētam, n. See நிஷேதம். விடுகமதுபானாதிகளென்கை நிடேதம் (வேதா. சூ. 116). . |
| நிடேதி - த்தல் | niṭēti, 11 v. tr. See நிஷேதி-. . |
| நிண்ணம் | niṇṇam, n. See நிர்ணயம். (சங். அக.) . |
| நிண்ணயம் | niṇṇayam, n. See நிர்ணயம். நிண்ணயந் தெரிவிவேகம் (கைவல். தத். 8). . |
| நிண்ணயி - த்தல் | niṇṇayi-, 11 v. tr. See நிர்ணயி-. Colloq. . |
| நிண்ணி - த்தல் | niṇṇi-, 11 v. tr. See நிர்ணயி-. (யாழ். அக.) . |
| நிண - த்தல் | niṇa-, 11 & 12 v. <>நிணம். intr. To grow fat; கொழத்தல்.-tr. 1. To tie up, fasten; 2. To braid; |
| நிணக்கழலை | niṇa-k-kaḷalai, n. <>id. +. Fatty tumour, Lipoma; கொழுப்புக்கட்டி. (M. I.,) |
| நிணச்செருக்கு | niṇa-c-cerukku, n. <>id. +. Pride in one's own muscular strength; தேகக்கொழப்பா லாகிய கருவம். நிணச்செருக்கு அவனை ஆட்டுகிறது. (W.) |
| நிணத்திசு | niṇa-t-ticu, n. <>id.+E. tissue. Adipose tissue; இரத்தச்சவ்வு. |
| நிணநரம்புகள் | niṇa-narampukaḷ, n. <>id. +. Lymphatic vessels; absorbents; ஊன் நரம்புகள். (M. L.) |
| நிணநெய் | niṇa-ney, n. <>id. +. Synovia; மணிக்கட்டுகளிலுண்டாகும் பசை. (M. L.) |
| நிணம் | niṇam, n. [K. niṇe.] 1. Fat; கொழுப்பு. நிணங்குடர் நெய்த்தோர் நிறைத்து (பு. வெ. 3, 5). 2. Flesh; 3. Serum; |
| நிணர் - தல் | niṇar-, 4 v. cf.நிண்-.tr. To tie, fasten; கட்டுதல். பட்டுநிணர் கட்டில் (சீவக. 2030).-intr. To crowd, gather thick; |
| நிணவுதி | niṇavuti, n. See நிணத்திசு. Loc. . |
| நிணவை | niṇavai, n. <>நிண-.1 1. Tying, bondage; பிணிப்பு. (பெருங். உஞ்சைக். 34, 144). 2. That which is plaited; |
| நிணறு | niṇaṟu, n. <>T. nenaru. 1. Affection, love; உருக்கம். அவன் நெஞ்சம் நிணறு கொண்டு பேசினான். (W.) 2. Benefit, good; |
| நித்தக்கட்டளை | nitta-k-kaṭṭaḷai, n. See நித்தியக்கட்டளை. (W.) . |
| நித்தக்கத்தரி | nitta-k-kattari, n. Turkey berry; See மலைச்சுண்டை. (W.) |
| நித்தக்காய்ச்சல் | nitta-k-kāyccal, n. <>நித்தம்+. Quotidian fever; தினமும் அடிக்கும் சுரநோய். (W.) |
| நித்தகருமம் | nitta-karumam, n. <>id. +. See நித்தியகருமம். . |
| நித்தத்துவம் | nittattuvam, n. <>nitya-tva. Eternity; என்றுமுளதாந்தன்மை. நிராமயமான நித்தத்துவம். (உத்தரரா. திக்குவி.248). |
| நித்தநிமந்தம் | nitta-nimantam, n. <>nitya+nibandha. Daily offerings in a temple; கோயில் நித்தியக்கட்டளை. மஹதேவர்க்கு நித்த நிமந்தஞ் செலுத்துகைக்கு (S. I. I. ii, 392). |
| நித்தம் 1 | nittam, <>nitya. n. 1. Eternity; என்றும் அழியாதுள்ள நிலை. நேரினித்தமு மொட்டின னாகுமே (மேருமந். 652). 2. Sacrificial pit; 3. See நித்தியகருமம். கருமநித்தநைமித்தங் காமியங்கள் (பிரபோத. 39, 13). 4. Waterthorn. Constantly, perpetually, eternally; |
| நித்தம் 2 | nittam, n. <>nṟita. Dancing; நடனம். நித்தந் திகழு நேரிழை முன்கையார் (பரிபா. 12, 43). |
| நித்தரங்கசமுத்திரம் | nittaraṅka-camuttiram, n. <>nis-taraṅga+. Still, unruffled sea; அலையற்றகடல். (W.) |
| நித்தல் | nittal, adv. <>nitya. See நித்தலும். நித்தல் பழி தூற்றப்பட்டிருந்து (இறை. கள. 1, 14). . |
| நித்தல்விழா | nittal-viḷā, n. <>நித்தல்+. Daily procession of the cīpali idol. See சீபலி. நித்தல்விழாவணி நிகழ்வித்தோனே (சிலப், உரைபெறு கட்.4). |
