Word |
English & Tamil Meaning |
|---|---|
| நியோகதர்மம் | niyōka-tarmam, n. <>id. +. The system of appointing a kinsman to raise up seed to a childless person by consorting with his wife (R. F.); மகப்பேறில்லாத வனுடைய மனையாள் மகப்பெறுதற்கு ஞாதியொருவனை நியமிக்குமுறை |
| நியோகம் | niyōkam, n. <>ni-yōga. 1. Command, order, authority; கட்டளை. (S.I.I. vi,13.) 2. Appointed task, commission, charge; 3. Certainty; 4. Exertion; 5. See நியோகதர்மம். |
| நியோகி - த்தல் | niyōki-, 11 v. tr. <>நியோகம். To command, order, direct; கட்டளையிடுதல். (W.) |
| நியோகி | niyōki, n. perh. niyōgin. See நியோகிப்பிராமணன். பிரசண்ட நியோகிகளும் (விறலிவிடு.). . |
| நியோகிப்பிராமணன் | niyōki-p-pirāma-ṇaṉ, n. <>நியோகி+. A class of secular āndhra Brahmins, as distinguished from Vaidika Brahmins; இலௌகிகனான தெலுங்கப் பிராமணன். |
| நியோசனம் | niyōcaṉam, n. <>niyōjana. (யாழ். அக.) 1. Order, command கட்டளை. Fastening, joining |
| நிர்க்கததண்டனம் | nirkkata-taṇṭaṉam, n. <>nirgata-daṇdana. Releasing or saving one from punishment, one of 14 tayāvirutti, q.v; தயாவிருத்தி பதினான்கனுள் தண்டனையினின்று பிறனை விடுவிக்கை. (W.) |
| நிர்க்கதி | nirkkati, n. <>nir-gati. Complete absence of refuge, utter helplessness; கதியின்மை |
| நிர்க்கந்தவாதி | nirkkanta-vāti, n. <>nigrantha+. A Jaina sect; சைனரில் ஒரு பிரிவினராகிய நிகண்டவாதி. (மணி.27, 167, அடிக்குறிப்புரை) |
| நிர்க்கந்தன் | nirkkantaṉ, n. <>ni-grantha. Arhat; அருகக்கடவுள். |
| நிர்க்குண்டி | nirkkuṇṭi, n. <>nirguṇdi. A species of chaste tree. See நொச்சி. (திவா.) |
| நிர்க்குணசைவம் | nirkkuṇa-caivam, n. <>nir-guna+. A šaiva sect which holds that šiva should be contemplated as the attributeless Being, one of 16 caivam, q.v.; சைவம் பதினாறனுள் சிவனைக் குணமற்றவனாகத் தியானிக்கவேண்டும் என்று கூறும் சமயம். |
| நிர்க்குணம் | nirkkuṇam, n. <>nir-guṇa. 1. Being devoid of qualities, attributes, etc; குணமில்லாமை. சுத்த நிர்க்குணமான பரதெய்வமே (தாயு. சுகவாரி. 1) 2. Being devoid of evil qualities; |
| நிர்க்குணன் | nirkkuṇaṉ, n. <>id. 1. God as without attributes; [குணமற்றவன்] கடவுள். 2. One who is beyond all attributes; |
| நிர்க்கோத்திரம் | nirkkōttiram, n. <>nir-gōtra. The state of belonging to no family; See கோத்திரமின்மை. (சிலப். 10, 188, உரை.) |
| நிர்ச்சரம் | nirccaram, n. <>nir-jara. (Jaina.) A kind of penance which consists in lying down on a hot rock, uprooting the hair on the head, etc. சுடுபாறையிற்கிடத்தல், தலைமயிர்பறித்தல் முதலிய சைனவிரதம். (சி.போ.ப.அவைய.12) |
| நிர்ச்சரை | nirccarai, n. <>nir-jarā. (Jaina.) The principle which reduces or destroys accumulated karma, one of nava-patārttam, q.v.; நவபதார்த்தத்துளொன்றும் சஞ்சிதகர்மத்தை அழிக்கவல்லதுமான சைனதத்துவம். (சீவக.2814, உரை) |
| நிர்ச்சலம் 1 | nirccalam, n. <>nir-jala. 1. Being waterless; நீரின்மை. நிர்ச்சலமான பிரதேசம். 2. Fasting without even drinking water, as in ēkātaci; |
| நிர்ச்சலம் 2 | nirccalam, n. <>niš-cala. State of rest or inactivity; அசைவின்மை. நிர்ச்சல நிஸ்தரங்கபோதப்பிரவாக சமாதியிலும் (சி.சி.8, 22, ஞானப்) . |
| நிர்ச்சலயோகி | nirccala-yōki, n. <>id. +. An ascetic in deep meditation, forsaking all karma; கருமங்களைவிடுத்துச் சலனமற்ற சமாதிநிலையிலுள்ள சந்நியாசி. (சங்.அக) |
| நிர்ச்சலை | nirccalai, n. <>niš-calā. Calm or undisturbed Energy of šiva; சலனமற்ற சிவசத்தி. நிர்ச்சலைகளாயிருக்கின்ற ஈசான்னியாதி மூர்த்தியந்த பஞ்சசத்தி (சி.சி.1, 47, ஞானப்) |
| நிர்ச்சீவனா - தல் | nirccīvaṉ-ā-, v. intr. <>nir-jīva+. To become lifeless, utterly devoid of vitality or strength; முற்றும் சத்தியற்றுப் போதல். |
| நிர்ணயம் | nirṇayam, n. <>nir-ṇaya. Determination. See நிருணயம். |
| நிர்ணயி - த்தல் | nirṇayi-, 11 v. tr. <>id. To determine, resolve முடிவுபடுத்துதல். |
