Word |
English & Tamil Meaning |
|---|---|
| நிரம்ப | nirampa, adv. <>நிரம்பு-. 1. Fully, நிறைய. 2. Abundantly, highly; |
| நிரம்பரன் | niramparaṉ n. <> nir-ambara. 1.Unclothed person; naked man; உடையிலான். (நிகண்டு.) 2. Arhat; 3. šiva |
| நிரம்பவழகியர் | nirampa-v-aḻakiyar, n. <>நிரம்பு-+. 1.Exquisitely beautiful person; பேரழகுள்ளவர். நித்தமணாளர் நிரம்பவழகியர் (திருவாச.17, 3). 2. The author of cētupurāṇam, Tirupparaṅkuṉṟa-p-puṟaṇam and other works, 16th c.; |
| நிரம்பாச்சொல் | nirampā-c-col, n. <>id. + ஆ neg. +. See நிரம்பாமென்சொல் (யாழ். அக.) . |
| நிரம்பாத்துயில் | nirampā-t-tuyil, n. <>id. + id. +. See நிரம்பாத்தூக்கம். (பிங்.) . |
| நிரம்பாத்தூக்கம் | nirampā-t-tūkkam, n. <> id. + id. +. Unsound sleep; broken sleep; அரைத்தூக்கம். (திவா.) |
| நிரம்பாநோக்கு | nirampā-nōkku n. <> id. + id. +. Look with eyes contracted; இடுக்கிப் பார்க்கும் பார்வை. நிரம்பாநோக்கி னிரயங் கொண்மார் (அகநா.67.) |
| நிரம்பாமென்சொல் | nirampā-meṉ-col, n. <>id. + id. +. Indistinct prattle; lisping; மழலைச்சொல். (திவா.) |
| நிரம்பாமொழி | nirampā-moḻi, n. <>id. + id. +. See நிரம்பாமென்சொல். (யாழ். அக.) . |
| நிரம்பிப்பாய் - தல் | nirampi-p-pāy-, v. intr. <>id. +. To overflow ; ததும்பிவழிதல். (W.) |
| நிரம்பியபுட்பம் | nirampiya-puṭpam, n. <>id. +. Plantain ; வாழை. (மலை.) |
| நிரம்பியம் | nirampiyam, n. <>id. See நிரம்பியபுட்பம் (சங். அக.) . |
| நிரம்பினபெண் | nirampiṉa-pen, n. <>id. +. Girl who has attained puberty; பருவமடைந்த பெண். (j.) |
| நிரம்பு - தல் | nirampu-, 5 v. intr. 1. To become full, complete, replete; நிறைதல். பருவ நிரம்பாமே (திவ்.பெரியாழ்.1, 2, 17). 2. To abound, be abundant, copious; 3. To be over, to end, terminate; 4. To attain puberty, as a girl; 5. [K. nera.] To mature, as grain; |
| நிரம்பையர்காவலன் | nirampaiyar-kāvalān, n. Aṭiyārkkunallār, the chief of Nirampai, a village in koṅku country; கொங்குநாட்டிலுள்ள நிரம்பை என்ற ஊர்த்தலைவரான அடியார்க்குநல்லார். காருந் தருவு மனையா னிரம்பையர் காவலனே (சிலப்.பக்.11). |
| நிரயப்பாலர் | niraya-p-pālar, n. <>niraya + pāla. See நிரயபாலர். அணங்கென்பன பெயும்....நிரயப்பாலரும் (தொல்.பொ.256, உரை). |
| நிரயபாலர் | niraya-pālar, n. <> id. +. Chiefs of the infernal regions ; நரகத்திலுள்ள தலைவர்.. நிரயபாலர் பலரும் (சீவக.2771, உரை). |
| நிரயம் | nirayam, n. <>nir-aya. Hell; நரகம். நீங்கா நிரயங் கொள்பவரொ டொன்றாது (புறநா.5) . |
| நிரயவட்டம் | niraya-vaṭṭam, n. <>நிரயம் +. The seven internal regions, viz., perukaḷaṟṟuvaṭṭam, maṇalvaṭṭam, eriparalvaṭṭam, aripaṭaivaṭṭam, pukaivaṭṭam, iruḷvaṭṭam, peruṅkīlvaṭṭam; பெருகளற்றுவட்டம், மணல்வட்டம், எரிபரல்வட்டம், அரிபடைவட்டம், புகைவட்டம், இருள்வட்டம், பெருங்கீழ்வட்டமாகிய ஏழு நரகங்கள். (பிங்) |
| நிரயனம் | nirayaṉam n. <>nir-ayana. Celestial longitudianl difference measured from the zero point of the fixed Hindu zodiac; மேஷராசியின் ஆரம்பஸ்தானத்திலிருந்து கணிக்கப்படும் வான்கதிதூரம். (செந்.viii, 67). |
| நிரர்த்தகம் | nirarttakam, n. <>nir-arthaka. See நிரர்த்தம். (W.) . |
| நிரர்த்தம் | nirarttam, n. <>nir-artha. That which is meaningless, worthless, useless; பயனற்றது. |
| நிரல் | niral n. <>நிரல்-. [K. Tu. niṟuge.] 1. (M. nira.] Row, order, arrangement; வரிசை. நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு (தொல். பொ. 482). 2. Equality, similarity; |
| நிரல் - (லு)-தல் | niral 3 v intr. <> நிரல் To be placed in a row, arranged in order; ஒழுங்குபடுதல். நேரின மணியை நிரலவைத்தாற்போல (தொல்.பொ.482, உரை) |
| நிரவ்வியயம் | niravviyayam, n. <>nir-avyaya. That which is eternal; நித்தியமானது. (யாழ்.அக.) |
| நிரவகாசவிதி | niravakāca-viti, n. <>niravakāša+. A rule or precept applicable only to the point in question, opp. to cāvakāca-viti; குறித்த இடந்தவிர வேறு இடத்திற் செல்லக்கூடாத விதி. (சிவசமவா.பக்.65.) |
