Word |
English & Tamil Meaning |
|---|---|
| படுபழி | paṭu-paḻi, n. <>படு3 +. Heinous crime ; கொடிய தீச்செயல் |
| படுபள்ளி | paṭu-paḷḷi, n. A masquerade dance ; வரிக்கூத்துவகை. (சிலப்.3, 13, உரை) |
| படுபனை | paṭu-paṉai, n. படு1- +. Fruitbearing palm ; காய்க்கும் பனை. படுபனையன்னர் பலர் நச்ச வாழ்வார் (நாலடி,96). |
| படுபாடர் | paṭu-pāṭar, n. <>id. +. Importunate or obstinate persons ; விடாப்பிடியுடையவர் படுபாடரான உங்களுக்கு நான் எத்தைச்சொல்லுவது (ஈடு,5,6,4). |
| படுபாதகன் | paṭu-pātakaṉ, n. <>படு3+. See படுபாவி. பதுபாதகனவன் கொடுங் கோலினது வெம்மை (பிரபோத.சந். 3, 28) . |
| படுபாவி | paṭu-pāvi, n. <>id. +. Heinous sinner; மிகக்கொடியவன். படுபாவிகட்கற மென்னிலெந்நாளு மதிகவிடமாம். (அறப். சத.44). |
| படுபுரளி | paṭu-puraḷi, n. <>id. +. See படுபொய். . |
| படுபொய் | paṭu-poy, n. <>id. +. Gross lie ; பெரும்பொய். |
| படுபொருள் | paṭu-poruḻ, n. <>படு1- +. 1. Buried treasure; புதையல். படுபொருள் வௌவிய பார்ப்பான் (சிலப்.23,102). 2. Amassed wealth, 3. That which happens; |
| படுபொழுது | paṭu-poḻutu, n. <>id. +. Sunset ; மாலைநேரம். Colloq. |
| படுபோர் | paṭu-pōr, n. <>id. +. 1.Sheaves of corn cut and kept unthreshed till the whole field is reaped; முதலில் அறுவடையாகி மற்றக்கதிர்களும் அறுக்கப்படும்வரை களத்திலடிக்கப்பெறாத தானியக் கற்றைகள். (W.G.) 2. A war involving heavy loss of lives; |
| படுமரம் | paṭu-maram, n. <>id. +. Dead tree ; பட்ட மரம். |
| படுமலை | paṭumalai, n. See படுமலைப்பாலை. படுமலை நின்ற பயங்கெழு சீறயாழ் (புறநா. 135). . |
| படுமலைப்பாலை | paṭu-malai-p-pālai, n. <>படுமலை +. 1. (Mus.) A secondary melody-type of the pālai class; பாலையாழ்த்திறவகை. படுமலைப் பாலை நிலைபெற்ற . . . சிறிய யாழை (புறநா. 135, உரை). 2. (Mus.) A secondary melody-type of the kuṟici class; |
| படுமுடிச்சு | paṭu-muṭiccu, n. <>படு3 +. 1. Hard knot ; கெட்டிமுடிச்சு. 2. Intricate plot or scheme, |
| படுமுதலாக | paṭu-mutal-āka, adv. <>படு1- +. Spontaneously; தன்னடைவே. குப்பையின்கண்படுமுதலாக எழுந்த கீரையினது (புறநா. 159, உரை.) |
| படுமுறை | paṭu-muṟai, n. <>id. +. Fine, penalty ; அபராதம். ஆடாகப் பொன்னினும் மளவினியன்ற பாவையாகும் படுமுறை (பெருங்.உஞ்சைக். 40, 373) |
| படுமோசம் | paṭu-mōcam, n. <>படு3 +. 1. Gross fraud. முழுமோசம். 2. Extreme danger; பெருங்கேடு. 3. Grievous mistake; பெருந்தவறு. |
| படுவக்கால் | paṭuva-k-kāl, n. <>படுவம் +. See படுவம். Nā . |
| படுவங்கீரை | paṭuvaṅ-kīrai, n. <>படுவன் +. A kind of greens ; கீரைவகை. (யாழ்.அக) |
| படுவசை | paṭu-vacai, n. <>படு3 +. Unbearable reproach, scandal, disgrace ; பெருநிந்தை . |
| படுவஞ்சனை 1 | paṭu-vacaṉai, n. <>id. +. Gross fraud ; பெருமோசம். |
| படுவஞ்சனை 2 | paṭu-vacaṉai, n. <>id. + bhajana. Destruction, complete disappearance, as of a disease ; முழுதும் அழிகை. (W.) |
| படுவதுபட்டவன் | paṭuvatu-paṭṭavaṉ, n. <>படு1-+. Miserable person, one who has suffered much ; மிகுதுன்பம் அடைந்தவன். (W.) |
| படுவநாயகி | paṭuva-nāyaki, n. perh. படுவன்+நாயகி. A plant . See பாற்சொற்றி. (மலை) . |
| படுவம் | paṭuvam, n. <>படு1-. Slushy field ; சேற்றுநிலம். Nā. |
| படுவன் | paṭuvaṉ, n. <>படு3. 1.Toddy seller ; கள்விற்போன். (திவா.) 2. [M. paṭuvan.] Boil, abscess; 3. See படுவங்கீரை. (யாழ். அக.) |
| படுவனெய் | paṭuvaṉey, n. <>படுவன் +. A preparation of ghee for sore throat; தொண்டைப்புண்ணுக்கிடும் மருந்துநெய். |
| படுவா | paṭuvā n. See படவா. . |
| படுவான் 1 | paṭu-vāṉ, n. <>படு1-+ வான். West, as the place of sunset, opp. to eḻuvāṉ,; மேற்கு எழுவான் தொடங்கிப் படுவான் மட்டும். (W.) |
| படுவான் 2 | paṭuvāṉ, n. <>id. + suff. ஆன். One who will go to ruin ; அழிந்துபோவான். |
