Word |
English & Tamil Meaning |
|---|---|
| படைகல் | paṭai-kal n. (படை-+. A large stone slab on which boiled rice is mixed with various ingredients; அமுதுபாறை Loc. |
| படைகூட்டு - தல் | paṭai-kūṭṭu- v. inr. <>படை +. To raise an army சேனைக்கு ஆள் திரட்டுதல் |
| படைச்சனம் | paṭai-c-caṉam n. <>id. +. Soldiers; troops போர்வீரர். (W.) |
| படைச்சாத்து | paṭai-c-cāttu n. <>id. + சாத்து3 Collection of armies சேனைக்கூட்டம். நடந்தது பெரும் படைச்சாத்து (திருவாலவா, 39, 20) |
| படைச்சால் | paṭai-c-cāl n. <>id. +. Furrow in ploughing உழவுசால். (சூடா.) |
| படைச்சிறுக்கன் | paṭai-c-ciṟukkan n. <>id. +. See படையுள்படுவோன் (சிலப், 8, 13, அரும்.பக்.224.) . |
| படைச்சிறுப்பிள்ளை | paṭai-c-ciṟu-piḷḷai n. <>id. +. See படையுள்படுவோன் (சிலப், 8, 13, அரும்.) . |
| படைச்செருக்கு | paṭai-c-cerukku n. <>id. +. High spirits of soldiers, military ardour; சேனையின் வீரம். (குறள். அதி.78.) |
| படைசாற்று - தல் | paṭai-cāṟṟu- v. ir. <>id. +. To challenge to battle; போருக்கழைத்தல் வாசநீலங் கழுநீர்குவளை படைசாற்றிவந்து (சீவக.1675) |
| படைசெய் - தல் | paṭai-cey- v. intr. <>id. +. To carry on War போர்புரிதல். சுறவ வேந்து நெடும்படை செய்ய (கல்லா.23, 26) |
| படைஞர் | paṭaiar n. <>id. Soldiers; படைவீரர். எயிற்படைஞ ரிகன்மிகுத்தன்று (பு.வெ 5, 6, கொளு) |
| படைத்தம்பூர் | paṭai-t-tampūr n. <>id. +. Kettle-drum; போர்ப்பறைவகை |
| படைத்தலைத்தெய்வம் | paṭai-t-talai-t-teyvam n. prob. id. +. A sea-god worshipped by fishermen of the Paṭṭaṇavar caste before setting out on a fishing expedition பட்டணவர் மீன்பிடிக்கச் செல்வதற்குமுன் கும்பிடுந்தெய்வம் Tj. |
| படைத்தலைவன் | paṭai-ttavaṉ, n. <>id. +. Captain, Commander, leader of troops சேனாபதி. (திவா.) |
| படைத்தவன் | paṭaittavaṉ n. <>படை- K. padedavanu.] 1. Brahmā; பிரமன் 2. Agent; 3. Father; |
| படைத்துக்கோட்பெயர் | paṭaittu-k-kōṭ-peyar n. <>id.+கொள்-+. Name assumed by an actor in a drama கூத்தில் நடனுக்கு இட்டு வழங்கும் பெயர். இவர்க்குப் படைத்துக்கோட் பெயரிடுவாள். (சிலப்.17, பக்.443) |
| படைத்துணை | paṭai-t-tuṇai n. <>படை+. 1. Aid in battle; போருதவி. 2. Ally in war; |
| படைத்துமொழி - தல் | paṭaittu-moḷi- v. ir. <>படை-+. (Akap.) To concoct, make false statements; ஒன்றனை ஏறிட்டுச் சொல்லுதல். அவற்றைச் செய்யப்பட்டனவாக இல்லாது படைத்து மொழிந்தமையால் (இறை.12, 86) |
| படைத்தோன் | paṭaittōṉ n. <>id. See படைத்தவன். (சுடா.) . |
| படைநர் | paṭainar n. <>படை. Soldiers; சேனைவீரர். படைநரைப் பயிர்ந்து (பெருங். இலாவாண.8, 100) |
| படைநாள் | paṭai-nāl n. <>id. +. The day of expedition of an army; படையெழுச்சி நாள், திருநாள் படைநாள் கடிநாளென்று (பெருங். இலாவாண.2, 32, ) |
| படைநிலை | paṭai-nilai n. <>id. +. Barracks; படையாளர் மகளிருடன் தங்குமிடம் (பதிற்றுப் 13, 21, உரை) |
| படைப்பவுஞ்சு | paṭai-p-pavucu n. <>id. +. Battle array; படையொழுங்கு (W.) |
| படைப்பற்று | paṭai-p-paṟṟu n. <>id. +. 1. Military station; பாளையம் (Insc.) 2. Ringworm; |
| படைப்பு | paṭaippu n. <>படை-. 1. Creation; சிருட்டி. படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் (திவ். திருவாய்.8,4,9.) 2. That which is created; 3. Acquiring, possessing; 4. Wealth 5. Offering of food, as to a god; 6. Serving of food; 7. Forest; |
| படைப்போன் | paṭaippōṉ n. <>id. Brahmā பிரமன். (திவா.) முழுவதும் படைப்போற்படைக்கும் பழையோன் (திருவாச. 3, 13) |
| படைபண்டாரம் | paṭai-paṇṭāram n. <>படை +. (W.) 1. Army and its appendages; சேனையும் அதன் தளவாடமும் 2. Dependants and servants; |
| படைபண்ணு - தல் | paṭai-paṇṇu- v. intr. <>id. +. See படைசெய்-. பஞ்சு கொண்டான் என்கிறவரிருந்து படைபண்ணிஅவர்களை நிறுத்த (கோயிலொ.22) . |
