Word |
English & Tamil Meaning |
|---|---|
| படைபோ - தல் | paṭai-pō v. intr. <>id. +. To go on an expedition போர்க்குப் போதல் படைபோனபேய் (தக்கயாகப்.241). |
| படைமடம் | paṭai-maṭam n. <>id. +. Violation of the Laws of war, such as attacking those who flee, slaying the wounded etc.; அறப்போர்நெறியினின்றும் மாறுபடுகை படைமடம் படான்பிறர் படைமயக் குறினே (புறாநா.142) |
| படைமயிர் | paṭai-mayir n. <>id. +. Brush of fibrous stick, used to clean and separate the threads of woof; பாவாற்றி.நாடா, துரீ அல்லது நுற்பாத் திருத்தும் படைமயிர் (விசாரசா.72) |
| படைமரம் | paṭai-maram n. <>id. +. Weaver's beam, weaver's rod for arranging the warp; நெசவுக்கருவிவகை. (சங்.அக) |
| படைமறுத்தல் | paṭai-maṟuttal n. <>id. +. Disloyalty or treachery of an army; கீழறுக்கை. (பிங்) |
| படைமுகம் | paṭai-mukam n. <>id. +. 1. Front or van of an army; சேனாமுகம் 2. Onset or meeting of armies in battle; |
| படைமுஸ்திப்பு | paṭai-mustippu n. <>id. +. Military accoutrements; சேனைக்குரிய சாதனங்கள் (W.) |
| படைமுஸ்தீது | paṭai-mustitu n. See படைமுஸ்திப்பு (W.) . |
| படையணி | paṭai-y-aṇi n. A kind of dance with torch-light in hand தீப்பந்தம் வைத்துகொண்டு ஆடும் ஆட்டவகை Nā |
| படையர் | paṭaiyar n. <> படை. [K. padaiya.] Those who maintain armies; சேனைகளையுடையவர். மண்மேற் படையராய் வாழ்வார் பயின்று (ஏலா.53) |
| படையல் | paṭaiyal n. <>படை-. (W.) 1. Offering; நிவேதனவுணவு 2. Beating, used in burlesque; |
| படையறு 1 - தல் | paṭai-y-aṟu- v. intr. <>படை+. To become powerless வலிமையிழத்தல். விரோதித்த இந்திரியங்களும் உன் பக்கலிலே படையற்றன (ஈடு, 2,7,9). |
| படையறு 2 - த்தல் | paṭai-y-aṟu- v. tr. <>id. +. 1. To behave treacherously, as an army; கீழறுத்தல். (பிங்) வினைத்தலையில் படையறுக்குமா போலே (ஈடு 7,3,4). 2. To captivate; |
| படையன் | paṭaiyan n. pob. படை-. 1. See படையல் . 2. Slave; |
| படையாச்சி | paṭaiyāṭcci, n. 8, See படையாச்சி, 3 . |
| படையாட்சி | paṭai-y-āṭci n. <>படை + ஆள்-. 1. Soldier, Warrior; படைவீரன் 2. Acts of bravery, as of a soldier 3. Title of the Vaṉṉiyar, Cavaḷaikkārar, etc.; |
| படையாள் | paṭai-y-āḷ n. <>id. +. [K. padeila.] . படையாளன். படையாளென்று புல்லியருளொடுந்திருக்கைச் சிறப்பு மிட்டுப் போவென்று விடை கொடுப்ப (திருவாலவா, 39, 4) |
| படையாளன் | paṭai-āḷaṇ n. <>id. +. [K. padevaḷa.] Soldier; போர்வீரன். (பிங்) நின் படையாளர்கள் மகளிரொடு உறையும் படைநிலைகாளாயின (பதிற்றுப்.13, 21, உரை) |
| படையிராசன் | paṭai-y-irācaṉ n. <>id. +. Saltpetre; வெடியுப்பு (மூ.அ) |
| படையிலார்முறைமை | paṭaiyilār-muṟaimai n. <>id. +. A kind of tax; ஒரு பழையவரி. (s. I.I. ii, 115.) |
| படையிறங்கு - தல் | paṭai-y-iṟaṅku v. intr. <>id. +. To encamp with one's army, as a king; பாளயந்தங்குதலை. (W.) |
| படையுடன்படாமை | paṭai-y-uṭaṉpaṭā-mai n. <>id. +. Determination not to take up arms in future; ஆயுதமெடேன் என்று வரைந்து கொள்ளுகை கொடைமடம்படுதல் படையுடன் படாமை (ஞானா, 17, 25) |
| படையுள்படுவோன் | paṭai-y-uḷpaṭuvōṉ n. <>id. +. Royal herald who proclaims the king's commands to his army with trumpets; சின்னமூதி படையுள்படுவோன் பணிமொழி கூற (சிலப், 8, 13) |
| படையுறை | paṭai-y-uṟai n. <>id. +. Sheath, as of a sword; ஆயுதவுறை. (பிங்) |
| படையெடு - த்தல் | paṭai-y-eṭu v. intr. <>id. +. To invade, lead a military expedition; தன்சேனையுடன் பகைப்புலத்தின்மேற் செல்லுதல். பஞ்சவன்மேற் படையெடுத்துச் செல்வேன் (திருவிளை. மெய்க்காட்.4) |
| படையெழுச்சி | paṭai-y-eḷucci n. <>id. +. Military expedition; படையெழுகை |
| படையோலை | paṭai-y-ōlai n. <>id. +. Palmyra leaf or leaves on which the fruits of the palmyra are kept when they are unhusked; தோலுரிக்காத பனம்பழங்களை வைக்க உதவும் பனையோலை. (W.) |
