Word |
English & Tamil Meaning |
|---|---|
| பண்டை 3 | paṇṭai, n. <> paṇdā. (யாழ். அக.) 1. Knowledge; ஞானம். 2. Learning; |
| பண்டைக்காலம் | paṇṭai-k-kālam, n. <> பண்டை +. See பண்டைநாள். . |
| பண்டைநாள் | paṇṭai-nāḷ, n. <> id. +. Former days, antiquity; முன்னாள். பண்டை நாளாலே நின் திருவருளும் (திவ். திருவாய். 9, 2, 1). |
| பண்டைப்பயில்வு | paṇṭai-p-payilvu, n. <> id. +. Practice gained in previous births; முற்பிறப்பின் பழக்கம். பண்டைப் பயில்வா லருச்சித்து (பெரியபு. சண்டே. 35). |
| பண்டையூழி | paṇṭai-y-ūḻi, n. <> id. +. The first of the four yugas; கிருதயுகம். பண்டையூழியிற் பார்மலி வுற்றதே (சீவக. 2581). |
| பண்டையோர் | paṇṭaiyōr, n. <> id. The ancients; முன்னோர். பண்டையோ ருரைத்த தண்டமிழ் நல்லுரை (சிலப். 28, 209). |
| பண்டைவினை | paṇṭai-viṉai, n. <> id. +. Past karma; முன்வினை. பண்டைவினைகள் பறியநின்ற (தேவா. 395, 2). |
| பண்ணத்தி | paṇṇatti, n. perh. Literary composition in mixed prose and verse; உரையும் பாட்டுமாகச் செய்யப்படும் ஒருவகைப்பனுவல். (தொல். பொ. 492.) |
| பண்ணப்பணை - த்தல் | paṇṇa-p-paṇai-, v. intr. Redupl. of பணை-. To branch out widely, as a flourishing tree; கப்புங்கிளையும்விட்டுச்செழித்தல். அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம். (நாலடி, 251). |
| பண்ணமை - த்தல் | paṇ-ṇ-amai-, v. tr. <> பண் +. To prepare; சித்தஞ்செய்தல். பண்ணமைத் தெழுதப்பட்ட பாவைபோல் (சிவக. 729). |
| பண்ணமைமுழவு | paṇṇamai-muḻavu, n. <> id. +. A kind of war drum; வீரமுழவுவகை. (சிலப். 3, 27, உரை.) |
| பண்ணல் | paṇṇal, n. <> பண்ணு-. At tuning the lute strings according to the required melody, one of eight kalai-t-toḻil, q.v.; கலைத்தொழில் எட்டனுள் பாட நினைத்த பண்ணுக்கு இணை, கிளை, பகை, நட்பான நரம்புகள் பெயருந் தன்மை மாத்திரையறிந்து வீக்குகை. (சீவக. 657 உரை.) |
| பண்ணவன் | paṇṇavaṉ, n. <> பண். 1. God; கடவுள். பண்ணவ னெண்குணன் (சிலப். 10, 188). (பிங்) 2. Deva or God, a superhuman being; 3. Arhat; 4. Sage; 5. Spiritual preceptor; 6. Strong man; 7. Bard, lyrist; |
| பண்ணவி | paṇṇavi, n. Fem. of பண்ணவன். Goddess; தேவி. பண்ணவித னருளினாலே (தாயு. சித்தர். 4). |
| பண்ணறை | paṇṇaṟai, n. <> பண் +. 1. Irregularity, disorder; அடைவுகேடு. (திவ். திருமாலை, 33, வ்யா, பக்.110.) 2. One without a sense of music; |
| பண்ணாடி | paṇṇāṭi, n. <> பண்ணையாளி. The owner of a farm, landed proprietor; பண்ணைக்கு உரியவன். Cm. |
| பண்ணாளத்தி | paṇ-ṇ-āḷatti, n. <> பண் +. Prolongation of a tune; இராக ஆலாபனம். (சிலப். 3, 26, உரை.) |
| பண்ணானவன் | paṇ-ṇ-āṇavaṉ, n. <> id. +. Man of good manners or habits; தன்னெறியாளன். (W.) |
| பண்ணிக்குறுவை | paṇṇi-k-kuṟuvai, n. perh. பன்றிக்குறுவை. A kind of kuṟuvai paddy; குறுவைநெல்வகை. (A.) |
| பண்ணிகாரம் | paṇṇiḵāram, n. <> பண்ணு-. [T. paṇyāramu.] 1. Stores, provisions; பலபண்டம். (திவா.) 2. Cakes, pastry; |
| பண்ணியக்காரன் | paṇṇiya-k-kāraṇ, n. prob. பண்ணை +. Headman among a class of Vaṇṇiyars; ஒருசார்வன்னியரின் தலைவன். (G. Sm. D. I. i, 144.) |
| பண்ணியக்குழம்பு | paṇṇiya-k-kuḻampu, n. <> பண்ணியம் +. A kind of semi-solid preparation; ஒருவகை நெகிழ்ச்சிப் பணியாரம். (இராசவைத்.139.) |
| பண்ணியசாலை | paṇṇiya-cālai, n. <> id. + சாலை. (W.) 1. Merchant's, warehouse; வியாபாரமாளிகை. 2. Pastry shop 3. Market; |
| பண்ணியபலத்துவம் | paṇṇiya-palattuvam, n. <> id. + phalatva. Gain, profit or success in trade; வியாபார ஊதியம். (W.) |
| பண்ணியம் 1 | paṇṇiyam, n. <> பண்ணு- + இயம். Musical instrument; இசைக்கருவி. குயிலுவர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழ (மணி. 7, 123). |
| பண்ணியம் 2 | paṇṇiyam, n. <> paṇya. 1. Stores, provisions; பண்டம். காம ருருவிற் றாம் வேண்டும் பண்ணியம் (மதுரைக். 422). 2. Cakes, pastry, confectionery; 3. Merchandise; |
