Word |
English & Tamil Meaning |
|---|---|
| பத்திக்குறடு | patti-k-kuṟaṭu, n. <>id.+. Raised platform in a temple; கோயிலுள் எழுப்பப் பட்டிருக்கும் திண்ணை. (கோயிலோ.17.) |
| பத்திகாண்டம் | patti-kāṇṭam, n. <>bhakti+. The portion of the Vēdas dealing with devotion; பத்திவிசயமான வேதப்பகுதி. (வேதா.சூ.12, உரை.) |
| பத்திகாண்டி | patti-kāṇṭi, n.<>பத்திகாண்டம். One absorbed in devotion; பத்திமார்க்கத்தை யனுஷ்டிப்போன் (வேதா.சூ. 13.) |
| பத்திகாண்டிகர் | patti-kāṇṭikar, n. <>பத்திகாண்டி. Those who are absorbed in devotion, one of three pakkuvar, q.v.; See பக்குவர் முவருள் பத்தி மார்க்கத்தில் ஈடுபடுவோர் (வேதா. சூ. 13.) (W.) . |
| பத்திச்சுவாலகர் | patti-c-cuvālakar, n. <>பத்தி +. See பத்திச்சுவாலையர். . |
| பத்திச்சுவாலையர் | patti-c-cuvālaiyar, n. <>id. +. Seraphim, a class of angels who burn like flame in their piety; பத்திவிசேடத்தால் சோதிமயமாக விளங்கும் வானோர்கணத்தினர். R. C. |
| பத்திசாரன் | patti-cāraṉ, n. <>id. +. A Vaiṣṇava saint. See திருமிசையாழ்வார். (குருபரம்.) |
| பத்திடை | pattiṭai, n. <>பத்து +இடை. A measure of weight=1, 000 palams; ஆயிரம் பலங்கொண்ட நிறுத்தலளவை. (நான்காம். பால.) |
| பத்திநடவு | patti-naṭavu, n. <>பத்தி +. Transplanting seedlings in a row; நாற்றை ஒரே யொழுங்கில் நடும் நடவு. Loc. |
| பத்திநெறி | patti-neṟi, n. <>பத்தி +. Path of salvation through devotion; பத்தியால் நற்கதியடையும் முறை. பத்திநெறி யறிவித்து (திருவாச. 51, 1). |
| பத்திபாய் - தல் | patti-pāy-, v. intr. <>பத்தி +. 1. To stream out, as pencils of rays; ஓலிவீசுதல் பிறங்கிய விலையு மிடமுறு பத்திபாய்தலும் (திருவாலவா. 25, 11). 2. To be reflected; |
| பத்திபாலன் | patti-pālaṉ, n. <>patti-pāla. Head of five or six infantry soldiers; ஐந்து அல்லது ஆறு காலாட்களின் தலைவன். (சுக்கிரநீதி, 73.) |
| பத்திமார்க்கம் | patti-mārkkam, n. <>bhakti + mārga. See பத்திநெறி. . |
| பத்திமாலை | patti-mālai, n. <>பத்தி +. Loc. 1. Garland of flowers worn round the neck by a bride and bridegroom and hanging down to the waist; இடுப்புவரை தொங்குவதும் மணமக்கள் அணிவதுமான மாலை. 2. An ornament worn round the neck; |
| பத்திமான் | pattimāṉ, n. <>bhakti-mān nom. masc. sing. of bhakti-mat. Pious man; பத்திமிக்கவன். |
| பத்திமுகம் | patti-mukam, n. <>பத்தி +. Top portion of a pandal or wall; பந்தல் அல்லது சுவரின் முன்பக்கநெற்றி. பவழக் கொடுங்காழ் பத்திமுகத் தழுத்தி (பெருங். உஞ்சைக். 34, 137). |
| பத்திமை | pattimai, n. <>பத்தி. 1. Devotion, devoutness, piety; தெய்வபத்தியுடைமை. பத்திமையாற் பணிந்தடியேன் (தேவா. 161, 3). 2. Affection, love; |
| பத்தியக்காரி | patiyakkāri, n. prob. pathyakāri. A species of amaranth. See சிறுகீரை, 1. (மலை.) . |
| பத்தியங்கா - த்தல் | pattiyaṅ-kā-, v. intr. <>பத்தியம் +. To observe a prescribed diet; கொடுக்கப்பட்ட மருந்துக்கேற்ற உணவெடுத்தல். |
| பத்தியத்தாழ்வு | pattiya-t-tāḻvu, n. <>id. +. Violation of dietary rules; பத்தியந் தவறுதலால் நேருங் குற்றம். |
| பத்தியம் 1 | pattiyam, n. <>pathya. 1. Prescribed diet for a patient; மருந்துக்கிசைந்த உணவு. அபத்தியம் பத்திமென வூணாய்ந் திடாமல் (கைவல். சந். 25). 2. That which is good or agreeable; 3. Seriousness, earnestness, attention; 4. cf. U. patta. Batta, subsistence allowance; 5. Bribe; 6. Chebulic myrobalan. 7. Indian indigo. 8. Tree that bears fruit without blossoming; |
| பத்தியம் 2 | pattiyam, n. <>padya. 1. Poetry, dist. fr. attiyam; செய்யுள். (¤வீரசோ. யாப். 6.) 2. A kind of musical composition in Telugu; |
| பத்தியம்பிடி - த்தல் | pattiyam-piṭi-, v. intr. <>பத்தியம் +. To be under prescribed diet; பத்தியமாக உண்ணுதல். (இராசவைத்.) |
| பத்தியம்போடு - தல் | pattiyam-pōṭu-, v. intr. <>id. +. 1. To prepare a prescribed diet; பத்தியவுணவு அமைத்தல். 2. To put a patient under diet; to diet one; 3. To give food to a woman in confinement on the third day of the delivery; |
