Word |
English & Tamil Meaning |
|---|---|
| பயணம் | payaṇam, n. <>Pkt. payaṇa <>pra-yāṇa. 1. Journey, travel, voyage; யாத்திரை. பயணமுடன்... ஆருர்தொழுது (பெரியபு. சேரமான். 129.) 2. Death, as a journey; |
| பயதத்தம் | paya-tattam, n. <>bhaya + datta. Gift made to the king, etc., through fear; அச்சத்தால் அரசன் முதலியோர்க்குக் கொடுக்கும்பொருள். (சுக்கிரநீதி, 145) |
| பயதம் | payatam, n. perh. id. + da. Bee; வண்டு. (சங்.அக) |
| பயதி | payati, n. <>pra-krti. Nature, characteristic; இயல்பு. Loc |
| பயந்தாரி | payantāri, n. <>பயம்2 + தரி-. See பயங்கொள்ளி. Tinn . |
| பயந்தாள் | payantāḷ, n. <>பய1-. Mother; தாய். (சூடா) பயந்தாடனக்கு மொழிந்தனனே (வெங்கைக்கோ.361) |
| பயந்தோர் | payantōr, n. <>id. Parents; பெற்றோர். அவட்பயந்தோரை யானாது புகழ்ந்தன்று (பு.வெ.1, ஆண்பாற்.5, கொளு). |
| பயந்தோர்ப்பழிச்சல் | payantōr-p-paḻic-cal, n. <>பயந்தோர் +. (Puṟap.) Theme in which the hero praises the parents of his ladylove தலைவியின் பெற்றோரைத் தலைவன் வாழ்த்திப் புகழும் புறத்துறை (பு.வெ, 11, ஆண்பாற்.5) |
| பயப்படு - தல் | paya-p-paṭu-, v. intr. <>பயம்2 +. To be afraid of; அஞ்சுதல். சுற்றிப்பார்க்கப்பயப்பட்டுத் தூரவைத்துத் தொழுதோமே (தமிழ்நா.234) |
| பயப்படுத்து - தல் | paya-p-paṭuttu-, v. tr. Caus. of பயப்படு-, See பயமுறுத்து-, . |
| பயப்பய | paya-p-paya, adv. <>பைய +. Slowly; மெல்லமெல்ல. பயப்பயக் கொண்டுபோனார் (கம்பரா. எழுச்சி.53) |
| பயப்பாடு 1 | paya-p-pāṭu, n. <>பயம்1 +. Fruition, fruitfulness; பயன்படுகை. தொன்னெறிமரபாற் பயப்பா டுள்வழி (இலக்.வி.641) |
| பயப்பாடு 2 | payappāṭu, n. <>பயப்படு -. Fear, dread, awe; அச்சம் (யாழ்.அக.) |
| பயப்பு 1 | payappu, n. <>பய1-, 1. Profit, advantage; பயன். பயப்பே பயனாம் (தொல். சொல். 307). 2. Grace, mercy, clemency; |
| பயப்பு 2 | payappu, n. <>பய2-. 1. Change of hue, as of the skin through love-sickness; turning sallow through affliction; நிறம் வேறுபடுகை செய்யவாயுங்...பயப்பூர்ந்தவே (திவ்.திருவாய் 5,3,2). 2. Gold colour; |
| பயபத்தி | paya-patti, n. <>bhaya + bhakti. God-fearing nature; reverential awe; ஒடுக்கவணக்கம் |
| பயம் 1 | payam, n. <>பய1-. perh. phala. 1. Profit, gain, advantage ; பலன் (சூடா) பயங்கெழு மாநிலம் (புறநா.58) 2. Fruit of one's action; 3. Fruit. 4. Sweetness,pleasantness; 5. King's revenue; 6. Nature; |
| பயம் 2 | payam, n. <>bhaya. 1. Fear, apprehension, alarm; அச்சம். (பிங்) வேதியரும் பயந்தீர்ந்தர் (கம்பரா. கும்பகர்ண.362). 2. (Poet.) Sentiment of terror, one of nava-racam, q.v.; |
| பயம் 3 | payam, n. <>payas. 1. Water; நீர். (திவா.)மாகமுட்டப் பயங்கொண்டு (திருவாலவா.30,4) 2. Milk; 3. Tank; 4.Nectar; |
| பயம்பகர் - தல் | payam-pakar-, v. intr. <>பயம்1 +. To be of use; பயன்படுதல். உலகு பயம்பகர (பரிபா, 11, 34) |
| பயம்பு 1 | payampu, n. perh. பயம்3 + bhū. 1. Depression; hollow; பள்ளம் (திவா). 2. Pit; 3. Pit to ensnare elephants, kheda; 4. Tank, pond; |
| பயம்பு 2 | payampu, n. Sweet flag. See வசம்பு. பயம்புங் கோட்டமும் (பெருங். உஞ்சைக், 41, 35) . |
| பயமுறுத்து - தல் | payam-uṟuttu-, v. tr. <>பயம்2 +. 1. To threaten, intimidate, frighten; அச்சமுண்டாக்குதல். 2. To upbraid, rebuke; 3. To take disciplinary measures; |
| பயருதி | payaruti, n. perh. payas + rddhi. cf. பயசு. Oval-leaved China root. See திருநாமப்பாலை. (மலை) . |
| பயரை | payarai, n. Ceylon tea, m.tr., Elaeodendron glaucum; மரவகை.(W.) |
