Word |
English & Tamil Meaning |
|---|---|
| பயல் 1 | payal, n. cf. பைதல். 1. Boy; சிறுபிள்ளை. 2. Fellow, used in contempt; |
| பயல் 2 | payal, n. 1. cf. பகல்1. 1. Half; பாதி. (பிங்.) 2. Side, share; 3. Hollow; 4. cf. பயில்4. Suggestive word; |
| பயலாள் | payal-āḷ, n. <>பயல்1 +. Adolescent; வாலிபப்பருவத்தவ-ன்-ள். |
| பயலி 1 | payali, n. <>id. Stupid fellow, dunce; மூடன். நான் முதலியாகிலுமாகிறேன், பயலியாகிலுமாகிறேன் (ஈடு, 6, 2, 6) |
| பயலி 2 | payali, n. <>பசளி. See பசளை. Loc. . |
| பயலேறுவாரம் | payal-ēṟu-vāram, n. <>பயல்2 +. Proportion of the crop claimed by a tenant who contributes only his personal labour, but does not supply ploughs, oxen, seeds and manure ; பண்ணையில் உழுபவனுக்குரிய வாரம். (C. G.) |
| பயலை | payalai, n. <>பசு-மை. See பயலைநோய். என்பயலை யறிவுறா தொழிவதுவும் (தேவா.88, 2) . |
| பயலைநோய் | payalai-nōy, n. <>பயலை +. Love-sickness; தலைவன் பிரிவால் தலைவிக்கு உண்டாம் நோய். என் பயலைநோ யுரையாயே (திவ். பெரியதி.3, 6, 2) |
| பயளி | payaḷi, n. See பயலை. (யாழ்.அக) . |
| பயளை | payaḷai, n. prob. பலை2. Root of sticky mallow; சிற்றுமுட்டிவேர். (சங்.அக) |
| பயற்றங்கஞ்சி | payaṟṟaṅ-kaci, n. <>பயறு +. A liquid preparation with cereals, sugar, etc.; பயறு வெல்லம் முதலியவைகூட்டி அட்ட கஞ்சி |
| பயற்றங்காய் | payaṟṟaṅ-kāy, n. <>id. +. Pulse in the pod used for curry; ஒருவகைப்பயறுள் அடங்கிய காய் (பதார்த்த.716) 2. A species of pulse, Dolichos tranquebaricus; 3. Sheepshank in the sacred thread; |
| பயற்றங்கொடி | payaṟṟaṅ-koṭi, n. <>id. +. Chowlee pean; தட்டைப்பயற்றஞ் செடி |
| பயற்றம்பொட்டு | payaṟṟam-poṭṭu, n. <>id. +. Husk of cereals with small particles of grit; குறுநொய்யோடு கலந்த பயற்றந்தோல். |
| பயற்றம்மை | payaṟṟammai, n. <>id. + அம்மை Chicken-pox. See சிச்சிலுப்பை. . |
| பயற்றமோடு | payaṟṟam-ōṭu, n. <>id. + ஓடு2. See பயற்றம்பொட்டு. . |
| பயற்றுமி | payaṟṟumi, n. <>id. + உமி.. See பயற்றம்பொட்டு. (W.) . |
| பயறி | payaṟi, n. <>id. See பயற்றம்மை. Loc. . |
| பயறு | payaṟu, n. perh. பசு-மை. 1. Cereals, pulse of various kinds ; தானியப்பருப்பு. 2. [K. pasaṟ, M. payaṟu.] Green-gram, Phaseolus mungo; 3. The 14th nakṣatra. See சித்திரை. (பிங்) 4. A petty cess collected from landholders; |
| பயறுபோடு - தல் | payaṟu-pōṭu-, v. intr. <>பயறு +. Loc. 1. To offer cereals as a token of inviting women-relatives and friends for the funeral ceremonies conducted on the eighth and the fifteenth days after death; செத்த எட்டாவதும் பதினைந்தாவதுமாகிய நாட்களில் நடக்குஞ் சடங்குகளுக்கு உறவின்முறைப் பெண்டிரை அழைக்குங்குறியாகப் பயறு இடுதல். 2. To work for another with no advantage to oneself; |
| பயன் 1 | payaṉ, n. cf. பயம்1. 1. See பயம்1, 1,2 வேள்விப்பயன் (குறள், 87). (திவா.) . 2. Meaning, signification; 3. Wealth; 4. See பயம்1, 3. பயனாகு நல்லாண்பனைக்கு (சிலப்.பிரபந் நலவர்.17) 5. Width, breadth; extent; 6. Juice; |
| பயன் 2 | payaṉ, n. See பயம்3 சீர்த்திமென்பயன்...அன்பராங் கன்றையூட்டுமால் (பிரபுலிங்.துதி.17) . |
| பயன்சொல்(லு) - தல் | payaṉ-col-, v. intr. <>பயன்1 +. 1. To give out results; பலன் இன்னதென்று சொல்லுதல். 2. To interpret, as verses; to render the meaning of; to expound; |
| பயன்படு - தல் | payaṉ-paṭu-, v. intr. <>id. +. To be of use or service;` பிரயோசனப்படுதல் சொல்லப் பயன்படுவர் சான்றோர் (குறள், 1078) |
| பயன்பண்ணு - தல் | payaṉ-paṇṇu-, v. intr. <>id. +. See பயன்சொல்-. (W.) . |
| பயன்பழக்கு - தல் | payaṉ-paḻakku-, v. tr. <>id. +. To teach the meaning of verses; செய்யுட்பொருளுணர்த்துதல். (W.) |
| பயன்மரம் | payaṉ-maram, n. <>id. +. Fruit-bearing tree; இனிய பழந்தரும் மரம். பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றால் (குறள்.216). |
