Word |
English & Tamil Meaning |
|---|---|
| பயில்வான் | payilvāṉ, n. <>U. pahḷwān. Wrestler, boxer; மற்போர் புரிவோன். |
| பயில்வு | payilvu, n. <>பயில்1-. Existence, life; இருப்பு. அடிமைக்கட் பயிலாதார் பயில் வென்னே (தேவா.1063, 6) |
| பயிலடி - த்தல் | payil-aṭi-, v. intr. cf. பிகில் +. To whistle; சீட்டியடித்தல். Loc. |
| பயிலல் | payilal, n. <>பயில்2-. High note; எடுத்தலோசை. (சூடா) |
| பயிலி | payili, n. See பசளை. Loc . |
| பயிலியம் | payiliyam, n. A wide-spread common weed. See குப்பைமேனி. (மலை) . |
| பயிற்கணக்கு | payiṟ-kaṇakku, n. <>பயில்4 +. Words denoting numbers, current among merchants; குழுஉக்குறியெண். (J.) |
| பயிற்சி | payiṟci, n. <>பயில்1-. 1.Practice, habit, training, learning அப்பியாசம்; 2. Familiarity, acquaintance; |
| பயிற்றி | payiṟṟi, n. <>id. See பயிற்சி, 2. பழமையும் பயிற்றியும்.....உடையார் (இறை. 2, பக்.27) . |
| பயிற்று - தல் | payiṟṟu-, 5 v. tr. Caus. of பயில்1-. 1. To train, habituate, accustom பழக்குதல். சிறந்தது பயிற்றல் (தொல்.பொ.192). 2. To teach, instruct; 3. To repeat many times; 4. To speak, utter tell; 5. To do, perform; 6. To cause to hold; |
| பயின் | payiṉ n. perh. பயில்1-. 1. Gum, glue; பிசின். பல்கிழியும் பயினும் (சீவக. 235). 2. Cream; 3.Rudder; |
| பயினன் | payiṉaṉ n. perh. பை. ādišēṣa; ஆதிசேடன். பயினன் மேல்வரு கல்லென (பாரத. சம்பவ. 119). |
| பயினி 1 | payiṉi, n. prob. பயில்1-. Union; கூடுகை. (திவா) |
| பயினி 2 | payiṉi, n. [Tu. pāini.] A kind of tree peculiar to hilly tracts; குறிஞ்சிநிலத்து உண்டம் ஒருவகை மரம் (குறிஞ்சிப்.69) |
| பயிஷ்டை | payiṣṭai, n. <>bahiṣ-ṣṭhā. A woman in her periods; மாதவிடாய் கொண்டவள். |
| பயோகனம் | payōkaṉam, n. <>payō-ghana. Hailstone; ஆலங்கட்டி. (சங்.அக) |
| பயோததி | payōtati, n. <>paya-udadhi. The sea of milk; பாற்கடல். திரைகெழு பயோததிதுயிலும் தெய்வவான் மரகதமலை (கம்பரா. திருவா. 12). 2. Sea; |
| பயோதம் | payōtam, n. <>payō-da. Cloud. மேகம். (யாழ்.அக) |
| பயோதரப்பத்து | payōtara-p-pattu, n. <>பயோதரம் +. A poem in ten stanzas on woman's breasts; மகளிர் தனங்களைப்பற்றிப் பத்துப் பாடல்களாற் சிறப்பித்துக்கூறும் பிரபந்தவகை (இலக். வி. 852) |
| பயோதரம் | payōtaram, n. <>payō-dhara. 1. Cloud, as holding water [நீரைக்கொண்டது]. மேகம் (பிங்); 2. Sea; 3. Woman's breast, as containing milk; 4. Milk; 5. Sugar-cane; |
| பயோதி | payōti, n. <>payō - dhi. Sea; கடல் பயோதிபோற் குழ்ந்ததாமே (மேருமந்.1077) |
| பயோதிகம் | payōtikam, n. <>id. Cuttlebone, shell of sepia; கடல்நுரை. (யாழ்.அக) |
| பயோநிதி | payōniti, n. <>payō - nidhi. Sea; கடல். (யாழ்.அக) |
| பயோற்கடம் | payōṟkaṭam, n. <>bhaya + ut - kaṭa. A hell; நரகவிசேடம். (சிவதரு.சுவர்க்க நரக.108) |
| பர்க்கம் | parkkam, n. <>bharga. (சங். அக.) 1. Lustre, light; ஓளி. 2. Prowess; |
| பர்க்கன் | parkkaṉ n. <>id. 1. The sun; சூரியன். (பிங்.) 2. šiva; 3. Brahma; 4. Viṣṅu; |
| பர்க்கா | parkkā, n. <>U. bargā. Agreement by which a cultivator engages to pay his landlord half the produce, the latter providing half the seed and paying the whole revenue (R. F.); விதையிற் பாதியும் வரியும் சுவான்தார் கொடுக்க குடிவாரத்துக்குரியவன் சுவான்தாரருக்கு விளைவிற் பாதி கொடுப்பதாகச் செய்துகொள்ளும் உடம்படிக்கை |
| பர்க்காஸ்து | parkkāstu, n. <>U. barkhāst. 1. Closing or rising of a court, an office or a business (R.F); கச்சேரி முதலியன வேலை முதிந்து கலைகை. 2. Withdrawl; 3. Raising an attachment; |
