Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரக்க | parakka, adv. <>பர-. In detail, in extenso; விரிவாய். பரக்கவென் பகர்வது (கம்பரா சடாயுவுயிர்.11) |
| பரக்கப்பரக்கப்பார் - த்தல் | parakka-parakka-p-pār, v. intr. <>பரக்க +. To look blank and confused; அலமருந்து விழித்தல். Colloq. |
| பரக்கம் | parakkam, n. <>பர-. Extension, wideness; விஸ்தாரம்.(W.) |
| பரக்கழி 1 - த்தல் | parakkaḻi-, v. intr. prob. id. +. To fall into disgrace; to lose one's fair name; பெரும்பழியுறுதல். நின்மல னென்றோதிப் பரக்கழிந்தாள். (திவ். பெரியதி. 4, 8, 5). |
| பரக்கழி 2 - த்தல் | parakkaḻi-, v. intr. Caus. of பரக்கழி1-, To cause disgrace; பெரும்பழி விளைத்தல். கொந்தளமாக்கிப் பரக்கழித்து (திவ். நாய்ச். 12, 3). |
| பரக்கழி | parakkaḻi, n. <>பரக்கழி 1-, 1. Disgrace, infamy; பெரும்பழி பரக்கழி யிதுநீ புண்டார் புகழையார் பரிக்கற் பாலார் (கம்பரா. வாலிவதை. 79). 2. Immodest person; |
| பரக்கழிவு | parakkaḻivu, n. <>id. See பரக்கழி. . |
| பரக்காவெட்டி | parakkā-veṭṭi, n. perh.பர-, Overhasty person; அதிகமாய் அவசரப்படுபவ - ன் - ள். Loc |
| பரக்கு - தல் | parakku-, 5 v. intr. <>பர-. To roam about; அலைந்துதிரிதல். பரக்கினார் படுவெண்டலை யிற்பலி (தேவா. 1117, 9) |
| பரக்கு | parakku, n. <> U. parkhāī. Loc. 1. Examination; விசாரணை. 2. Assaying of coins; |
| பரக்குடி | para-k-kuṭi, n. <>பரவர் +. Parava quarters; பரவர் குடியிருக்குமிடம். Loc |
| பரக்குடிவாரம் | para-k-kuṭi-vāram, n. <>புறக்குடி +. The share of the produce assigned to the cultivating tenant; பயிரிடுங்குடியானவனுக்குரிய மாசூற் பகுதி. (R.T.) |
| பரக்கொடை | parakkoṭai, n. A kind of paddy; நெல்வகை. (A.) |
| பரக்கொரவை | para-k-koravai, n. 1. Murrel, fresh-water fish, greenish, attaining 13 in. in length, Ophiocephalus gachua பதின்மூன்று அங்குலம் வளர்வதும் பச்சைநிறமுள்ளதுமான நன்னீர்மீன்வகை. 2. Murrel. See குறவை. |
| பரகத்து | parakattu, n. See பர்கத்து. Loc . |
| பரகதி | para-kati, n. <>para +. Salvation, as the highest goal; மோட்சம் பரகதி புகுவானே (திருவாச, 5, 35) |
| பரகாயசரிதர் | para-kāya-caritar, n. <>parakāya +. Those who are adept in parakāya-p-piravēcam; பரகாயப்பிரவேசஞ்செய்ய வல்லமையுள்ளோர் தகவுடைய பாண்டவரும்...பரகாய சரிதர் போல (பரத.நிரைமீட்சி.141) |
| பரகாயப்பிரவேசம் | para-kāya-p-piravē-cam, n. <>id. + pravēša. Art of leaving one's own body entering another body at pleasure; metempsychosis; தன்சரீரம் விட்டு மற்றொருசரீரத்திற் புகும் வித்தை. (யழ்.அக.) |
| பரகாரியம் | para-kāriyam, n. <>para +. Another's business; பிறர்காரியம் |
| பரகாலன் | para-kālaṉ. n. <>id. +. 1. One who is a yama to his enemies பகைவர்க்குயமன்போன்றவன். 2. A Vaiṣṇava saint. See திருமங்கையாழ்வார் (திவ்.பெரியதி, 3, 4, 10) |
| பரகிதபுடம் | parakita-puṭam, n. <>பரகிதம் +. (Astrol.) Longitude of a planet calculated by parakita system; பரகித வழிப்படி கணிக்கப்பட்ட கிரகநிலை. |
| பரகிதம் | parakitam, n. <>para-hita. 1. That which is good for others பிறர்க்கு நன்மையானது. 2. (Astrol.) A kind of calculation in the ancient Hindu astronomy; |
| பரகிதமூலச்சா | parakita-mūla-c-cā, n. <>பரகிதம். (Astrol.) Table of sines in the parakitam mode of astronomical calculation ; கணிதவாய்பாடுவகை . (W.) |
| பரகீயம் | parakīyam, n. <>parakīya. 1. That which belong to another பிறர்க்குரியது. 2. Coveting another's wife; |
| பரகீயை | parakīyai, n. <>parakīyā. Woman belonging to another; பிறனுக்கு உரியவள்.(சுக்கிர நீதி, 212, கீழ்க்குறிப்பு) |
| பரகுடிலம் | para-kuṭilam, n. <>para +. The praṇava ōm; பிரணவம். (W.) |
| பரகுபரகு | paraku-paraku, n. Wandering in utter perplexity; தடுமாறித்திரிகை. என்பரகுபரகுகெடுவது என்று (ஈடு, 4, 9, 1) |
