Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரத்தன் | parattaṉ, n. <>parasthā. Profligate, debauchee; வேசையருடன்கூடி யொழுகுபவன். நண்ணேன் பரத்தநின் மார்பு (குறள்.1311) |
| பரத்தி | paratti, n. Fem. of பரவன் . Woman of the maritime tract; நெய்தனிலப்பெண். (சூடா) |
| பரத்திரயம் | para-t-tirayam, n. <>para +. (Jaina.) Triad of excellent things. See இரத்தினத்திரயம் பரத்திர யங்கள் பணித்த பிரான் (திருநூற்.24) |
| பரத்திரல்காசு | parattiral-kācu, n. A copper coin current in the Cōḻa period; சோழர்காலத்து வழங்கிய செப்புநாணயவகை. (Insc.) |
| பரத்திரவியம் | para-t-tiraviyam, n. <>para +. Another's belongings; பிறர்பொருள். பரத்திரவியமேல் விருப்பமா மினையர் (பிரபோத.11, 16) |
| பரத்திரி | para-t-tiri, n. <>id. + strī. Woman other than one's wife ; மனைவியல்லாதவள். |
| பரத்து - தல் | parattu-, 5 v. tr. Caus. of பர-. [K. paradu, M. parattuka.] To spread; விரித்தல்.சர்க்கரையார் பாத்திப்பரத்தி (தேவையுலா.203) |
| பரத்துவம் | parattuvam n. <>para-tva. 1.Godhead கடவுட்டன்மை. 2. See பரம்1, 2. 3. (Log.) Antecedence; |
| பரத்துவன் | parattuvaṉ n. See பரத்து வாசன். பண்டை நூறெரி பரத்துவனும் போயினான் (கம்பரா. கிளைகண்டு.138) . |
| பரத்துவாசவன் | parattuvācavaṉ n. See பரத்துவாசன். (கம்பரா. மீட்சி.181) . |
| பரத்துவாசன் | parattuvācaṉ n. <>Bharadvāja. A sage; இராமாயணத்திற் கூறப்பட்ட ஒரு முனிவன். |
| பரத்தை 1 | parattai, n. <>para-tā. Strangeness; அயன்மை, தன்வயி னுரிமையு மவன்வயிற் பரத்தையும் (தொல்.பொ.111) |
| பரத்தை 2 | parattai, n. <>para-sthā. 1. Harlot, strumpet, prostitute, courtesan; பொதுமகள். மாயப் பரத்தை யுள்ளிய வையும் (தொல்.பொ.147). 2. Adulterous conduct, profligacy, infidelity; |
| பரத்தை 3 | parattai, n. <>செம்பரத்தை . Shoeflower. See செம்பரத்தை |
| பரத்தைமை | parattaimai, n. <>பரத்தை2. Adultery, concubinage; தூர்த்தத்தனம். தலைவன் பரத்தைமை கருதினாளாயிற்று (தொல்.பொ.147) |
| பரத்தையிற்பிரிவு | parattaiyiṟ-pirivu, n. <>id. +. (Akap.) Theme of forsaking one's wife and seeking the company of a harlot ; பரத்தையைக்குறித்து மனைவியை விட்டுப் பிரிந்திருத்தலைக்கூறும் அகத்துறை. (அகநா.204, உரை.) |
| பரத்தையினகற்சி | parattaiyiṉ-akaṟci, n. <>id. +. See பரத்தையிற்பிரிவு. (தொல்.பொ.41) . |
| பரதகண்டம் | parata-kaṇṭam, n. <>bharata +. 1.India, south of Vindhya mountains; விந்தியமலைக்குத் தெற்கிலுள்ள பிரதேசம். 2. The continent of India; |
| பரதச்சவுதம் | parata-c-cavutam, n. <>id. +. See பரதசாஸ்திரம். தருமப் பரதச் சவுதத் தடைவே (திருவாலவா, 28, 52) |
| பரதசாஸ்திரம் | parata-cāstiram, n. <>id. +. 1. A treatise by Bharata on the art of dancing and acting; பரதர் இயற்றிய நாட்டிய நூல். 2. A treatise in Tamil on the art of dancing by Arapatta-nāvalar; |
| பரதசூடாமணி | parata-cūṭāmaṇi, n. <>id. +. Author of an ancient treatise on tāḷam named Tāḷacamuttiram; தாளத்தைப்பற்றி¢க்கூறும் தாளசமுத்திரமென்ற இசைநூலின் ஆசிரியர். |
| பரதசேனாபதீயம் | parata-cēṉāpatīyam, n. <>id. +. A treatise on dancing and acting in veṇpā verse, by āti-vāyilār; ஆதிவாயிலார் வெண்பாவில் இயற்றிய ஒரு நாடக நூல். (சிலப். உரைச்சிறப்புப்பா. 10). |
| பரதத்துவம் | para-tattuvam, n. <>para + tatva. Highest Truth, God; பரம்பொருள் அத்தனே பரதத்துவப் பொருளென்று (திருவிளை விடையி.3) |
| பரதந்திரம் | para-tantiram n. <>paratantra. See பரதந்திரியம் . |
| பரதந்திரியம் | para-tantiriyam, n. <>pāratantrya. Dependence; பிறரைச் சார்ந்திருக்கை என்னை பரதந்திரியம் (ஞானா.12, 4) |
| பரதநாட்டியம் | parata-nāṭṭiyam,. n. <>bharata +. Dancing and acting according to bharata-šāstra; விதிதவறாத நடனம். |
| பரதம் 1 | paratam, n. <>bharata. 1. The art of dancing and acting; கூத்து. பாவமொடராகந் தாளமிம் முன்றும் பகர்வதாற் பரதமென்றுரைப்பர் (பரத. பாவ.14). 2. A treatise on dancing and acting; 3.See பரதகண்டம், பரதத்தோங்கிய கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி (மணி. பதி. 22). |
