Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரபூர்வை | parapūrvai, n. <>para-pūrvā. Widow remarried (R.F.) புனர்விவாகஞ் செய்தவள். |
| பரபோகம் | para-pōkam, n. <>para+. Highest bliss; பேரின்பம். (சிவப்பிர.கடவுள்வா.3. ) |
| பரம் 1 | param, n. <>para. 1. That which is pre-eminent, excellent; மேலானது. விரதமே பரமாக.. சாத்திரங் காட்டினர். (திருவச.4, 50). 2. A manifestation of Viṣṇu, one of five tirumāl-nilai,q.v.; 3. God; 4.Heaven; 5. That which is celestial, divine or heavenly; 6. Final bliss; 7. Liberation from births; 8. The front; 9. Upper portion; 10. That which is different or alien; 11. Side, party; 12. Fitness; 13.Completeess, fulness; 14. Hell; |
| பரம் 2 | param, n. <>bhara. 1. Burden, weight; heaviness; பாரம். (பிங்) மிசைப்பரந்தோண்டாது (புறநா.30). 2. Body; 3. Armour for the body; 4. A kind of shield; 5. Saddle of a horse; |
| பரம் 3 | param, n. <>udumbara. Redwooded fig. See அத்தி. (அக.நி) |
| பரம்படி - த்தல் | parampaṭi-, v. tr. <> பரம்பு2 +. To level ploughed land by a board or drag, for sowing; உழுதபின் விதைத்தற்காக பரம்புப்பலகையால் நிலத்தைச் சமன்செய்தல். குலப்பொன்னித் திருநாடர் பரம்படிக்க (ஏரெழு.26) |
| பரம்பதம் | param-patam, n. <>parampada. See பரமபதம். (W.) . |
| பரம்பரம் | paramparam,. n. <>paramparā. 1. Hereditary succession ; பரம்பரையுரிமை.(W.) 2. Lineage, race; 3. See பரம்பரை, .(W.) 4. Final bliss; 5. See பரம்பரன்.நீயாதி பரம்பரமும் (கம்பரா. விராதன். 4) 6. That which goes higher and higher; |
| பரம்பரன் | param-paraṉ, n. <>para+para. The Supreme Being; முழுமுதற்கடவுள். புரைப்பிலாத பரம்பரனெ (திவ்.திருவாய், 4, 3, 9) |
| பரம்பராதி | paramparāti, n. <>paramparā.. See பரம்பரை. (W.) . |
| பரம்பரை | paramparai, n. <>id. 1. Uninterrupted series or succession, as of waves; இடையறாத் தொடர்பு. 2. Hereditary succession proceeding from father to son, from guru to disciple, from generation to generation; |
| பரம்பு - தல் | parampu-, 5 v. intr. <>பர-, (W.) 1. To spread, as water, bad news, epidemics; to extend; to expand; to become diffused, as air, rays; to pervade; to over-spread, as clouds, darkness; பரவுதல். 2. To be spread out or become flattened by mashing or hammering; 3. To occupy, overrun, as an army; |
| பரம்பு 1 | parampu n. <>பரம்பு-. 1. Board or roller for smoothing land newly ploughed; harrow, drag; உழுதகழனியைச் சமப்படுத்தும்பலகை. பரம்பு மேற்போய செய்யுள் (சேதுபு. திருநாட்.44). 2. Dry ground laid out, especially for plantain or palm gardens; 3. Bamboo mat; |
| பரம்பு 2 | parampu n. prob. வரம்பு. Embankment, ridge or mound to enclose water; வரப்பு. (W.) |
| பரம்பு 3 | parampu n. <>பரப்பு . [K. harahu.] Extension, spread; இடவிரிவு. (R. T.) |
| பரம்புப்பலகை | parampu-p-palakai, n. <>பரம்பு2 +. See பரம்பு 2,1 (G. Tj. D. I, 98.) . |
| பரம்பை | parampai, n. Indian mesquit. See வன்னி. (L.) . |
| பரமகதி | parama-kati, n.<>parama + gati. 1. See பரமபதம். . 2. The ultimate refuge; 3. (Astron.) Maximum daily motion; |
| பரமகம்சபரிவிராசகம் | parama-kamca-parivirācakam, n.<>paramahamsa-parivrājaka. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
| பரமகம்சம் | paramakamcam, n. <>paramahamsa. 1. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 2. See பரமஹம்சம். |
| பரமகாட்டை | parama-kāṭṭai, n. <>parama + kāṣṭhā. A unit of time; சிறியகாலவளவு. (சங்.அக.) |
