Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரமபரம்பரன் | parama-param-paraṉ, n. <>parama +. God, as the Supreme or the most excellent Being; உயர்வற வுயர்ந்த பரம் பொருள் பணிநெஞ்சே நாளும் பரமபரம்பலனை (திவ், திருவாய், 10, 4, 7). |
| பரமபாகவதன் | parama-pākavataṉ, n. <>id. +. Most faithful devotee of Viṣṇu. திருமாலடிமையிற் சிறந்தவன். |
| பரமபிதா | parama-pitā, n. <>id. +. God, as the father of all beings; கடவுள். Chr. |
| பரமபுருஷன் | parama-puruṣaṉ, n. <>id. +. The Supreme Being; கடவுள். (ஈடு, 1, 1, 1, ஆறா) |
| பரமம் | paramam, n. <>parama. 1. Excellence; greatness ; சிறப்பு. 2. Eminence; 3. Divineness, heavenly state; 4. See பரமமுர்த்தி. யம்பரமமென்றவர்கள் பதைப்பொடுங்க (திருவாச, 15, 12) |
| பரமமூர்த்தி | parama-mūrtti, n. <>id. +. The Supreme Being; ¢முதற்கடவுள். உலகுயிர் தேவு மற்றும் படைத்தவன் பரமமூர்த்தி (திவ். திருவாய்.10, 2, 7) |
| பரமயோக்கியன் | parama-yōkkiyaṉ, n. <>id. +. Extremely honest person; உண்மையிற் சிறந்தோன். |
| பரமரகசியம் | parama-rakaciyam, n. <>id. +. 1. Profound secret, great mystery ; அதிரகசியம். 2. Secret doctrine; |
| பரமராசியம் | parama-rāciyam. n. <>id. +. See பரமரகசியம். அவிர்சடையாரிடைப் பரமாராசியம் யாதுபயந்ததோ (குற்றா.தல.மந்தமா.97) . |
| பரமலுத்தன் | parama-luttaṉ, n. <>id. + lubdha. See பரமலோபி . Colloq. . |
| பரமலோபி | parama-lōpi, n. <>id. + lōbhin. Great niggard; மிக்க உலோபி. பரமலோபி கண்டாய் (திருவேங்.சகத.45) |
| பரமன் | paramaṉ n. <>parama. The Supreme Being; முதற்கடவுள். பாட மாநட மாதும் பரமனார் (தேவா.600, 1) |
| பரமன்னம் | param-aṉṉam, n. <>id. +. See பரமான்னம். பண்ணப்பம் பரமன்ன முணாமலே (தனிப்பா, i, 351, 75) . |
| பரமனையேபாடுவார் | paramaṉaiyē-pāṭu-vār, n. <>பரமன் +. Those who sing the praises of šiva along, one of tokai-y-aṭiyār , q.v. தொகையடியாருள் சிவனையே பாடும் ஒரு தொகுதியினர். (பெரியபு.பரமனை.1.) |
| பரமஹம்ஸம் | parama-hamsam,. n. <>parama-hamsa. The highest order of asceticism, one of four caṉṉiyācam , q.v. சன்னியாசம் நான்கனுள் உத்தமமானது. (கைவல் சந்.158) |
| பரமஹம்ஸன் | parama-hamsaṉ, n. <>id. Ascetic of the highest order, one of four caṉṉiyāci, q.v. சன்னியாசிகள் நால்வகையினருள் பரமஹம்ஸ நிலையிலுள்ள துறவி. |
| பரமாகமம் | paramākamam, n. <>parama + ā - gama. Chief of the Jaina scriptures; சினாகமங்களுள் முதன்மையானது. (சீவக. 948, உரை) |
| பரமாகாசம் | paramākācam, n. <>id. + ā - kāša. See பரவெளி. (சித்.சிகா, 42, 8, உரை) . |
| பரமாசாரியன் | paramācāriyaṉ n. <>id. + ā - cārya. 1. Guru's guru; குருவுக்குக் குரு. See பரமகுரு, 1. |
| பரமாணு | paramāṇu, n. <>id. + aṇu. Atom, the invisible base of aggregate bodies, 30 of which are supposed to form a mote in a sunbeam; சூரியகிரணத்திற்படருந் துகளில் முப்பதிலொருபாகமாகிய மிகச்சிறிய அளவு. (சி.போ.பாஅவை.பக்.41) |
| பரமாத்தம் | paramāttam, n. A treatise on Kalpa; ஒரு கற்பநூல். (கலித்.கடவுள். உரை.பி-ம்) |
| பரமாத்திரையம் | paramāttiraiyam, n. A treatise on kalpa ஒரு கற்பநூல். (கலித்.கடவுள். உரை) |
| பரமாத்துமன் | paramāttumaṉ, n. <>parama + ātman. See பரமாத்துமா, 1. பரமாத்துமனை (திவ்.திருப்பல்.120 . |
| பரமாத்துமா | paramāttumā n. <>id. + ātmā. 1. God, as the Supreme or Universal soul, opp. to cīvāttumā ; பரம்பொருள் 2. Saint or glorified spirit; |
| பரமார்த்தகுருகதை | paramārtta-kuru-kotai, n. paramārtha+. Story of Guru Noodle by Rev. Beschi; வீரமாமுனிவர் இயற்றிய ஒரு கதை நூல். |
| பரமார்த்தம் | paramārttam, n. <>paramārtha. 1. Excellent or important object; மேலானப் பொருள். 2. True meaning; 3. Truth; 4. Salvation; 5. Simplicity; ignorance of the world; 6. A treatise on Kalpa; |
