Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரமகாரணன் | parama-kāraṇaṉ, n. <>id. +. God, as the First Cause; [ஆதிகாரணமானவன்] கடவுள். பரமகாரணன் றிருவருளதனால் (திருக்கோ.1, அகலம்) |
| பரமகாரியம் | parama-kāriyam, n. <>id. +. Divine, spiritual or heavenly affair; தேவகாரியம். (W.) |
| பரமகாருணிகன் | parama-kāruṇikaṉ, n. <>id. +. The most gracious Being; பெருங்கருணையாளன் பரமகாருணிகனான எம்பெருமான் (ஈடு, 1, 4, 5, ஆறா) |
| பரமகுரு | parama-kuru, n. <>id. +. 1. Great guru; சிறந்த குரு . பரமகுருவாய்ப் போதிக்கு முக்கணிறை (தாயு. சுகவாரி. 9). See பரமாசாரியன், 1. |
| பரமசண்டாளன் | parama-caṇṭāḷaṉ, n. <>id. +. Highly wicked person; கொடும்பாவி. |
| பரமசத்துரு | parama-catturu, n. <>id. +. Great enemy; inveterate enemy; பெரும்பகைவன். |
| பரமசந்தேகம் | parama-cantēkam, n. <>id. +. Great doubt; strong suspicion; தீராச்சமுசயம் |
| பரமசந்தோஷம் | parama-cantōṣam, n. <>id. +. Boundless joy; பெருமகிழ்ச்சி. |
| பரமசமாதி | parama-camāti, n. <>id. +. See பரமசாந்தி. (W.) . |
| பரமசாந்தி | parama-cānti,. n. <>id. +. Tranquility of the soul absorbed in spiritual contemplation; சமாதிநிலை. (W.) |
| பரமசித்தி | parama-citti, n. <>id. +. Salvation; முத்தி. |
| பரமசிவன் | parama-civaṉ, n. <>id. +. šiva; சிவபிரான் |
| பரமசுந்தரி | parama-cuntari, n. <>id.+. Goddess of Virtue; தருமதேவதை. (பிங்.) |
| பரமசுவாமி | parama-cuvāmi, n. <>id. +. 1. The Supreme Being; கடவுள். (S. I. I. ii, 121, 7.) 2. Viṣṇu at Aḻakarkōil; |
| பரமசைதன்னியம் | parama-caitaṉṉiyam, n. <>id. +. Universal Spirit, Supreme Being; பரப்பிரமம். (W.) |
| பரமஞானம் | parama-āṉam, n. <>id. +. Spiritual knowledge; பதியறிவு. பரம ஞானம் போய்த் தெட்டவர் (கம்பரா. மந்திரப்.20) |
| பரமண்டலம் | para-maṇṭalam, n. <>para +. 1. Foreign country; அன்னிய நாடு. (பதிற்றுப். 59, 14, உரை.) 2. Heaven; |
| பரமததிமிரபானு | para-mata-timira-pāṉu, n. <>id.+mata+. A treatise in defence of šaivaism by Maṟaiāṉa- campantar; மறைஞானசம்பந்தர் இயற்றியதும் சைவசமயத்தை நிலை நிறுத்துவதுமான நூல். |
| பரமதபங்கம் | para-mata-paṅkam, n. <>id. + id. +. A Tamil poem condemning alien religions and establishing Vaiṣṇavism, by Vēdānta-dēšikar; வேதாந்ததேசிகர் அந்நியமதங்களை மறுத்து வைணவத்தைத் தாபித்தெழுதிய தமிழ்ப்பிரபந்தம் |
| பரமதுஷ்டன் | parama-tuṣṭaṉ, n. <>parama +. Extremely wicked person; மிகக்கொடியவன். Colloq. |
| பரமநாழிகை | parama-nāḻikai, n. <>id. +. Full duration, as of a titi, vāram, yōkam, karaṇam or naṭcattiram; திதி வார யோககரண நட்சத்திரங்களின் முழுநாழிகை. |
| பரமநிவர்த்தி | parama-nivartti, n. <>id. +. Final liberation; பாசவிமோசனம். (W.) |
| பரமநிஷ்டை | parama-niṣṭai, n. <>id. +. Concentrated meditation; சமாதி. |
| பரமபத்தி | parama-patti, n. <>id. + bhakti. The third and highest stage of devotion in which a devotee does not brook the slightest separation from the Supreme Being பரம்பொருளைவிட்டுப் பிரிதற்கு ஆற்றாத பத்தியின் முதிர்ந்த நிலை. Vaiṣṇ. நனியாம் பரமபத்தியா னைந்து (திவ்.இராமாநுச.100). |
| பரமபதசோபானம் | parama-pata-cōpā-ṉam, n. <>paramapada +. A Tamil poem by Vēdānta-dēšikar, as a staircase leading step by step to heaven வேதாந்ததேசிகர் இயற்றியதும் திருமாலின் பரமபதத்தை அடைவதற்குரிய மார்க்கத்தைப் படிப்படியாய் அறிவிப்பதுமான தமிழ்ப்பிரபந்தம். |
| பரமபதம் | parama-patam, n. <>parama +. Salvation, as the highest bliss; மோட்சம். அமலனுலகெனும் பரமபதத்தினை (கம்பரா. பயன்.5) |
| பரமபதவாசல் | parama-pata-vācal, n. <>பரமபதம்+. A gateway in a Viṣṇu temple. See சுவர்க்கவாசல் |
| பரமபதவேகாதசி | parama-pata-v-ēkā-taci, n. <>id. +. The 11th day of the bright fortnight in the month of Mārkaḻi. See வைகுண்டவேகாதசி |
| பரமபதி - த்தல் | parama-pati-, 11 v. intr. <>id. +. To pass away to heaven, die; இறத்தல். Vaiṣṇ. |
