Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரிசில்கடாநிலை | paricil-kaṭā-nilai, n. <>பரிசில் +. (Puṟap.) Theme of soliciting bounty from a patron who delays his favour; பரிசில் நீட்டித்த தலைவனுக்குப் பரிசில்வேட்டோன் தன்னிடும்பைகூறிக் கேட்கும் புறத்துறை (புறநா.101). |
| பரிசில்விடை | paricil-viṭai, n. <>id.+.(Puṟap.) Theme of king's bestowing gifts upon his panegyrists and permitting theme to leave in a happy mood; தன்புகழ்கூறுவோர்க்கு அரசன் வேண்டியன வழங்கி அவர்மகிழ விடைகொடுத்தலைக்கூறும் புறத்துறை. (பு.வெ. 9, 26.) |
| பரிசிலர் | paricilar, n. <>id. Solicitors of gifts; பரிசில்வேண்டி இரப்போர் பரிசில் வாழ்க்கைப் பரிசில ரேத்த (சிறுபாண்.218). |
| பரிசிலாளர் | paricil-āḷar, n. <>id. +. See பரிசிலர். (திவா.) . |
| பரிசிற்றுறை | pariciṟ-ṟuṟai, n. <>id.+. (Puṟap.) Theme of bards representing their needs to a patron; அரசன்முன்னே பரிசிலர் தாம் கருதியபேறு இதுவெனக்கூறும் புறத்துறை. (பு.வெ.9, 5.) |
| பரிசினிலை | pariciṉilai, n. <>id. + நிலை. (Puṟap.) Theme of a bard informing his patron of his intention to go home, when the latter delays giving permission to leave even after the presents are awarded; பரிசில்கொடுத்த பின்னும் விடைகொடுக்கத் தாழ்க்கும் தலைவனிடத்தினின்று பரிசில்பெற்றோன் தானே செல்ல ஒருப்படுதலைக் கூறும் புறத்துறை (பு.வெ. 9, 25.) |
| பரிசீலனை | parīcilaṉai, n. <>parišīlanā. Examination, investigation, enquiry ; சோதனை. |
| பரிசு | paricu, n. [T. pari, K. pariju, M. paricu.] 1. cf. sparša. Quality, nature, property; குணம். (பிங்) பிள்ளை பரிசிது வென்றல் (திவ்.பெரியதி, 3, 3, 2). 2. Manner, way, method, mode, fashion; 3. Order, rule; 4. Honour, dignity; 5. Coracle, wicker-boat covered with leather, used to cross rivers; 6. cf. sparša. Gift, donation, present, boon; 7. See பரிசம், 4. Loc. |
| பரிசுகெடு - தல் | paricu-keṭu-, v. intr. <>பரிசு+. To be bereft of all sense of honour ; சீரழிதல். (W.) |
| பரிசுத்தபூமி | paricutta-pūmi, n. <>பரிசுத்தம்+. Palestine, as the holy Land ; பாலஸ்தீனதேசம். Chr. |
| பரிசுத்தம் | paricuttam, n. <>pari-šuddha. 1. Holiness, sanctity, purity, immaculateness. தூய்மை. 2. Cleanliness, as of dress; clearness, as of water; |
| பரிசுத்தர் | paricuttar, n. <>id. 1. Holy persons; தூயோர். 2. Clean persons, persons of clean life and conduct; 3. Saints and angels; |
| பரிசுத்தவான் | paricuttavāṉ, n. <>பரிசுத்தம். See பரிசுத்தன்.(யாழ். அக.) . |
| பரிசுத்தன் | paricuttaṉ, n. <>pari-šuddha. Pure or holy person; தூயோன் . |
| பரிசுத்தாவி | paricuttāvi, n. <>id.+ஆவி. Holy Ghost ; கிறிஸ்தவரது தெய்வநிலை மூன்றனுள் ஓன்று. Chr. |
| பரிசுத்தி | paricutti, n. <>pari-šuddhi. 1. Holiness; தூய்மை. 2. Purity; 3. Innocence; |
| பரிசுத்தை | paricuttai, pari-šuddhā. A pure and holy woman; தூய்மையானவள். |
| பரிசை | paricai, n. 1. cf. phara. [K.parige.] Shield, buckler; கேடகம். (தொல்.பொ.67, உரை, பி-ம்.) (சூட.) 2. Large umbrella, as a badge of honour; 3. See பரிசு, 5. Loc. |
| பரிசைக்காரன் | paricai-k-kāraṉ, n. <>பரிசை +. 1. Shield-bearer; கேடகம் பிடிப்போன். 2. Person belonging to the caste of shield-bearers; |
| பரிசோதனை | paricōtaṉai, n. <>pari-šōdhanā. Thorough search, strict examination, scrutiny; நன்கு ஆராய்கை. |
| பரிசோதி - த்தல் | paricōti-, 11, v. tr.<>parišōdhi. To examine carefully, test thoroughly; நன்கு ஆராய்தல். |
| பரிஞ்சு | paricu, n. <>T. parutju. Hilt or handle of a sword; வாட்பிடி. (W.) |
| பரிஞ்ஞானம் | pariāṉam, n. <>parijāna. Perfect knowledge; பேரறிவு, அதீதகதமான பரிஞ்ஞானம் (சிலப், 10, 167, உரை, கீழ்க்குறிப்பு). |
