Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரிட்சி - த்தல் | pariṭci-, 11 v. tr. <>parikṣ. See பரீட்சி-. . |
| பரிட்சித்து | pariṭcittu, n. <>parikṣit. See பரீட்சித்து. . |
| பரிட்சை | pariṭcai, n. <>parīkṣā. See பரீட்சை. . |
| பரிட்டவணை | pariṭṭavanai, n. <>பரிவட்டணை. Change, transformation ; மாறுகை. பாராய் பரிட்டவணை பண்ணுவாய் (பணவிது.153). |
| பரிட்டினகம் | pariṭṭiṉakam, n. <>paryuddinaka. Circular flight of birds; பறவை வட்டமிடுகை. (பந்சதந.¢) |
| பரிடையார் | pariṭaiyār, n. <>pari-ṣad. cf. பரடையார். Members of an administrative council; நிர்வாகசபையார். (T. A. S. ii, 40.) |
| பரிணதன் | pariṇataṉ, n, <>pari-ṇata. Man of great learning; கற்றோன். பரிணதர் தெரிந்த நூலின் நன்னயம் (கம்பரா.மிதிலை.106). |
| பரிணமி - த்தல் | pariṇami-, 11 v. intr <>pari-ṇam. To undergo transformation or evolution; நிலைமாறுதல். காமம் பரிணமித் துயர்ந்து பொங்கி (கம்பரா.திருவடி.82). |
| பரிணயம் | pariṇayam, n <>pari-ṇaya. Marriage; விவாகம். ஜானகீபரிணயம். |
| பரிணாமசரீரம் | pariṇāma-carīram, n. <>pari-ṇāma+. Body which evolves or undergoes change; நிலைமாறிவரும் சரீரம். (சங்.அக.) |
| பரிணாமசூலை | pariṇāma-cūlai, n. <>id.+. Colic pains from indigestion; ஆமசூலை. (பைஷஐ.) |
| பரிணாமம் | pariṇāmam, n. <>pari-ṇāma. Transformation, evolution, modification, as the turning of milk into curds; ஒன்று பிறிதொன்றாக மாறுகை. அவன் பரிணமத்தோடு சிவணும் (ஞான. 11, 30). |
| பரிணாமவாதம் | pariṇāma-vātam, n. <>id. +. The doctrine of causation according to which the cause evolves into an effect of the same grade of reality as itself ; காரணம் தன்னோ டொத்த காரியமாக மாறும் என்ற கொள்கை. |
| பரிணாமாலங்காரம் | pariṇāmālaṇkāram, n. <>id. +. (Rhet.) Figure of speech by which the objects of comparison are spoken of as if they were transformed into those to which they are compared; உவமானப்பொருள் அப்போது நிகழுஞ்செய்கையிற் பயன்படுதற்பொருட்டு உவமேயத்தின்உருவத்தைக்கொண்டு பரிணமித்தலாகிய அலங்காரவகை.(அணியி. 6.) |
| பரித்தாமா | pari-t-tāmā, n. <>பரி3+ sthāman. Ašvatthāman. See அசுவத்தாமா. பாலகரைவர்...துயில்புரிவுழிமுருக்கினன் வன்றிறற் பரித்தாமா (பாகவத, 1, தன்மபுத்திரன், 11).த்திரன்.11) |
| பரித்தானை | pari-t-tāṉai, n. <>id. +. Cavalry, one of aṟuvakai-t-tāṉai, q.v: அறுவகைத்தானையுள் குதிரைப்படை.(திவா.) |
| பரித்தியாகம் | parittiyākam, n. <>part-tyāga. Complete renunciation;omplete renunciation முற்றும் துறக்கை. |
| பரித்தியாகி | parittiyāki, n. <>pari-tyāgin. One who has completely renounced the world, ascetic துறவி . |
| பரித்திராசம் | parittirācam, n. <>pari-trāsa. Terror, fright; பெரும்பயம். அபிமன்னுவைக்கண்டு பரித்திராசமெய்தி (பாரதவெண்.795, உரைநடை). |
| பரித்திராணம் | parittirāṇam, n. <>paritrāṇa. Complete protection; பாதுகாப்பு. |
| பரிதபி - த்தல் | paritapi-, 11v. intr. <>paritap See பரிதவி-, தாகமானது கொடு பரிதபித்தலும் (குற்றா. தல. யானைபூ. 17). |
| பரிதவி - த்தல் | paritavi-, 11 v. intr. <>id. 1. To grieve, sorrow; ¢துக்கித்தல். சீரழிந்து நெஞ்சந்தியங்கிப பரிதவித்தான் (பிரபோத, 30, 25). 2.To suffer; 3.To pity, sympathise; |
| பரிதாகம் | paritākam, n. <>pari-dāha. Heat; வெம்மை. (இலக்.அக.) |
| பரிதாபம் | paritāpam, n. <>pari-tāpa. 1.Pain; anguish, sorrow; துக்கம். 2. Pity, sympathy, solicitude; 3. Repentance; 4.Burning, thirst; |
| பரிதாபி 1 | paritāpi n. <>id. Sympathiser; இரக்கமுள்ளவன். |
| பரிதாபி 2 | paritāpi, n. See பரீதாபி. . |
| பரிதானம் | paritāṉam, n. <>pari-dāna, 1.Barter, exchange; பண்டமாற்று. 2. Bribe; |
| பரிதி | pariti, n. <>pari-dhi. 1.Halo round the sun or moon; பரிவேடம். (பிங்.) வளைந்து கொள்ளும் பரிதியை (இரகு.இந்து. 7). 2. Circle, circumference; 3. Sun; சூரியன். பரிதியஞ் செல்வன் (மணி. 4.1). 4. Wheel of a car; 5. Discus; 6. Cakra bird. See சக்கரவாகப்புள். தண்கோட்டகம் பரிதியங் குடிங்குகூடுமே (இரகு. நாட்டுப். 40). 7. Light, lustre; radiance, brightness; 8. Sacrificial stake; 9.The bunches of darbha grass laid round a sacrificial fire; 10. One of the commentators of the Kuṟaḷ; 11. (Astron.) Epicycle. See சீக்கிரபரிதி. |
