Word |
English & Tamil Meaning |
---|---|
ஆவிருந்து | āviruntu part. A tense-sign indicating present tense; நிகழ்காலங்காட்டும் ஓர் இடைநிலை. கரும மாராயாவிருந்து (S.I.I.iii,137). |
ஆவிரை | āvirai n. Tanner's senna, l.sh., Cassia auriculata; செடிவகை. (தொல்.எழுத்.283.) |
ஆவிலம் | āvilam n. <>ā-vila. Turbid water; கலங்கனீர். (பிங்). |
ஆவிவரு - தல் | āvi-varu- v.intr. <>ஆகி+. To bring good fortune, as a dwelling house. ஆவிவந்த வீடு. Loc. |
ஆவிவாங்கு - தல் | āvi-vāṅku- v.tr. <>ஆவி2+. 1. To take away another's life; உயிர்கவர்தல். 2. To take the life out of one; |
ஆவிவிடு - தல் | āvi-viṭu- v.intr. <>id.+. 1. To die; சாதல். 2. To die voluntarily; |
ஆவு 1 | āvu n. Crab's-eye. See குன்றி. (மூ.அ). |
ஆவு 2 - தல் | āvu- 5 v.tr. <>அவாவு-. To desire; விரும்புதல்.செந்நெலங் கழனிச்செய்வேட்டாவிய மறையோன் (உபதேசகா.சிவத்துரோ.120). |
ஆவுடையார் | āvuṭaiyār n. See ஆவுடையாள். . |
ஆவுடையார்கோயில் | āvuṭaiyār-kōyil n. <>ஆள்-+உடையார்+. A Siva shrine in the Tanjore Dist.; திருப்பெருந்துறை. |
ஆவுடையாள் | āvuṭaiyāḷ n. <>ஆள்+உடையாள். Receptacle representing divine energy, wherein the Liṅga is placed; சக்தியைக் குறிக்கும் இலிங்கபீடம். ஆவுடையாளுஞ் சிவலிங்கமும் ஒன்றைவிட் டொன்று நீங்காமல். (சி.சி.1, 69, நிரம்ப.) |
ஆவுதி | āvuti n. <>ā-huti. See ஆகுதி. அமரர்ப் பேணியும் ஆவதி யருத்தியும். (புறநா.99). |
ஆவுரிஞ்சி | ā-v-urici n. <>ஆ8+. See ஆவுரிஞ்சுதறி. (குற்றா.தல.திருக்குற்றா.37). |
ஆவுரிஞ்சுதறி | ā-v-uricu-taṟi n. <>id.+. Rubbing post for cows; ஆதீண்டு குற்றி. (திவா.) |
ஆவெனல் | ā-v-eṉal n. <>ஆ+. 1. Onom. expr. signifying crying; அழுகைக்குறிப்பு. ஆவென்றலற (தேவா.70, 8). 2. Onom. expr. signifying pity; 3. Onom. expr. signifying opening the mouth; |
ஆவேகி | āvēki n.cf. ā-vēgī. Wormkiller. See ஆடுதின்னாப்பாளை. (மூ.அ.) |
ஆவேசசமவாதம் | āvēca-cama-vātam n. <>ā-vēša+. A Saiva sect. See காபாலம். . |
ஆவேசநீர் | āvēca-nīr n. <>ā-vēša+. Toddy, strong drink, intoxicating liquor; கள் முதலியன. ஆவேசநீரைக் குடித்த துட்டர் (திருப்பு.794.) |
ஆவேசம் | āvēcam n. <>ā-vēša. 1. Possession by a deity, a spirit or a demon; தெய்வமேறுகை. 2. Ghost, spirit; 3. Anger, wrath, fury; |
ஆவேசவாதி | āvēca-vāti n. <>id.+. Member of the kāpālika sect; காபாலிக மதத்தான். (சி.போ.பா.அவை.21.) |
ஆவேசனம் | āvēcaṉam n. <>ā-vēšana. Street of goldsmiths and workers in metals; அக்கசாலையர்வீதி. (திவா.) |
ஆவேசாவதாரம் | āvēcāvatāram n. <>ā-vēša+ava-tāra. Viṣṇu's secondary or partial incarnation; திருமாலின் கௌணாவதாரம் (அஷ்டாதச.பக்.25, குறிப்பு.) |
ஆவேசி - த்தல் | āvēci- 11 v.intr. <>id. To be possessed, as by a deity; தெய்வம் ஏறுதல். |
ஆவேதனம் | āvētaṉam n. <>ā-vēdana. Report; அறிக்கை. நான்காம் ஆவேதனத்தோடு (ஆறுமுகநா.19). |
ஆவேலி | ā-vēli n. <>ஆ8+. Stall for cows and oxen; தொழுவம். (திவா). |
ஆவேறு | ā-v-ēṟu n. <>id.+ ஏறு. Bull, as the male of the cow; இடபம். ஆவேறுயர்த்தோன். (உபதேசகா.திருமால்.16). |
ஆவோ | āvō int. An exclamation expressive of wonder, pity, distress; அதிசய விரக்கச்சொல். |
ஆழ் 1 - தல் | āḻ - 4 v.intr. [K. M. āḻ.] 1. To sink, plunge, dive; மூழ்குதல். ஆழ்கலத்தன்ன கலி (நாலடி.12). 2. To be absorbed, immersed, overwhelmed; 3. To fall down; 4. To enter, pierce; 5. To be idle, lazy; 6. To be deep; 7. To suffer; |
ஆழ் 2 - தல் | āḻ - 4 v.tr. <>அகழ்-. To dig; அகழ்தல். ஆழ்ந்து காணா ருயர்ந்தெய்த கில்லார் (தேவா.1153. 9). |
ஆழ்கடற்றுயின்றோன் | āḻ-kaṭaṟṟuyiṉṟōṉ n. <>ஆழ்1-+. Viṣṇu sleeping on the deep ocean; திருமால். (திவா). |
ஆழ்த்து - தல் | āḻttu- 5 v.tr. Caus. of ஆழ்1-. To immerse, plunge; அமிழ்த்துதல். |