Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரூஉ 1 | parūu, n. <>பரு-. 1. Thickness, greatness, largeness; பருமை. பரூஉக் குற்றரிசி (புறநா. 399). 2. Increasing; |
| பரூஉ 2 | parūu, n. perh. பறி -. Plucking, snatching; பறிக்கை. (பிங்.) |
| பரூஉக்கை | parūu-k-kai, n. <>பரூஉ1 +. 1.Large, powerful arm; பருத்த கை. 2. Big wooden bar placed perpendicularly over the axle of a cart; |
| பரேச்சாப்பிராரத்தம் | parēccā-p-pirārattam, n. <>para + icchā +. Experiencing the fruits of karma in an utterly indifferent attitude ; உபேக்ஷையோடு பிராரத்தகருமத்தின் பயனை அனுபவிக்கை (வேதா. சூ.175, உரை.) |
| பரேண் | parēṇ, n. <>பரு-மை + எண். Great strength; மிக்கவன்மை. பரேணுடைப் புயத்து (விநாயகபு. 73, 49). |
| பரேதம் | parētam, n. <>parēta. Devil, demon; பிசாசம். (யாழ். அக.) |
| பரேதராசன் | parēta-rācaṉ, n. <>id. +. Yama, as the Lord of the dead; [பிரேதங்கட்கு அதிபதி] யமன். (யாழ். அக.) |
| பரேதன் | parētaṉ, n. <>parēta. He who is dead; மரணமுற்றவன். Nā. |
| பரேபம் | parēpam, n. <>parēpa. Reservoir of water; நீர்நிலை. (யாழ். அக.) |
| பரேர் | parēr, n. <>பரு-மை + ஏர். Much beauty; மிக்க அழகு. பரோம்புழகுடன் (குறிஞ்சிப். 96). |
| பரை 1 | parai, n. <>parā. 1. See பார்வதி. (மாறனலங். 665). . 2. Parā-šakti; 3. (šaiva.) The state of individual soul in which it remains actionless enjoying grace from šiva; 4. An initiation. |
| பரை 2 | parai, n. 1. Measure of capacity, See பறை3. (W.) . 2. A cubic measure=2 cub. it. 544 cub. in.; |
| பரைச்சி | paraicci, n. <>பரை1. Pārvatī; பார்வதி. அறங்காத்தமா பரைச்சி (திருப்பு. 1037). |
| பரைநாதன் | parai-nātaṉ, n. A kind of sulphur; நெல்லிக்காய்க்கந்தி. (தைலவ. தைல.) |
| பரையோகம் | parai-yōkam, n. <>பரை1 +. (šaiva.) The state of individual soul in which it loses its self-consciousness expecting grace from šiva; சீவான்மா தற்போதமழிந்து சிவபிரானது அருளை எதிர்பார்க்கும் நிலை. (ஒழிவி. யோக. 20, உரை.) |
| பரோட்சக்கியானம் | parōṭca-k-kiyāṉam, n. See பரோட்சஞானம். . |
| பரோட்சசாக்ஷியம் | parōṭca-cākṣiyam, n. <>parōkṣa +. Indirect evidence; தன்கண்ணாற்பாராது சொல்லும் சாட்சியம். (C. G.) |
| பரோட்சஞானம் | parōṭca-āṉam, n. <>id. +. 1. Knowledge obtained without the help of the senses; indirect cognition, such as inference; பிரத்தியக்ஷமல்லாத ஞானம். (வேதா. சூ. 112.) 2. Spiritual knowledge; |
| பரோட்சம் | parōṭcam, n. <>parōkṣa. 1. That which is beyond the range of sight; கண்ணுக்கெட்டாதது. பரமபாவனை பரோட்சமாம் (கைவல். சங். 86). 2. See பரோட்சஞானம், 2. (வேதா. சூ. 112.) 3. Aside, a stage-direction; 4. Past time; |
| பரோதிதம் | parōtitam, n. Frightening; அச்சுறுத்துகை. (யாழ். அக.) |
| பரோபகாரம் | parōpakāram, n. <>parō-pakāra. Philanthropy; பிறர்க்குச்செய்யும் உதவி. |
| பரோபகாரி | parōpakāri, n. <>parōpakārin. Philanthropist; பிறர்க்கு உதவி புரிவோன். |
| பல் 1 | pal pron. See பல. . |
| பல் 2 | pal, n. [T. palu, K. hal, M. pal.] 1. Tooth; fang; எயிறு. முகை வெண்பல் (கலித். 58). 2. Tusk; 3. Fluke of an anchor; 4. Cog of a wheel; tooth of a saw or sickle; 5. Tooth of a comb; 6. Scollop in the border of a garment; indentation; notch; 7. The inner tooth-like piece, as of garlic; 8. Small piece of cocoanut pulp; |
| பல்கணி | pal-kaṇi, n. <>பல்1 + கண். Lattice, window; சாளரம், (யாழ். அக.) |
| பல்கலைக்கழகம் | pal-kalai-k-kaḻakam, n. <>id. +. University; மாகாணத்தில் உயர்தரப்படிப்பை நடத்துவிக்கும் வித்தியாசங்கம். Mod. |
