Word |
English & Tamil Meaning |
|---|---|
| பல்லயம் | pallayam, n. [K. balleya.] A kind of dagger; ஒருவகைக் கைவாள். ஈட்டி பல்லயம் பிச்சுவாவுடன் (பிரதாப. விலா. 123). |
| பல்லரணை | pal-l-araṇai, n. <>பல்+இரணம். [M. pallaraṇa.] Gum boil, alveolar abscess, Gingivitis; பல்ல¦ற்றுநோய். (தைலவ. தைல. 2.) |
| பல்லரளை | pallaraḷai, n. See பல்லரணை. (யாழ். அக.) . |
| பல்லவத்திரு | pallavattiru, n. <>pallavadru. Ašoka tree. See அசோகு. (மலை.) |
| பல்லவதரையர் | pallava-taraiyar, n. <>பல்லவர்2+தரை. See பல்லவர்2. இராசபவித்திரப் பல்லவதரையன் (நன். 359, மயிலை). . |
| பல்லவதாரம் | pallava-tāram, n. <>pallavadhara. Branch of a tree, as bearing sprouts; [தளிர்களையுடையது] மரக்கிளை. (W.) |
| பல்லவதேயம் | pallava-tēyam, n. <>பல்லவம்1+. A country; ஒருதேசம். (சீவக. 1185.) |
| பல்லவம் 1 | pallavam, n. <>pallava. 1. Sprout, shoot; தளிர். பல்லவ சயனங்கள் பாராய் (கம்பரா. சித்தி. 23). 2. See பல்லவதேயம். (யாழ். அக.) |
| பல்லவம் 2 | pallavam, n. <>bhalla. Arrow; அம்பு. கூர்ப்புறு பல்லவங்கொண்ட தூணி (கந்தபு. மூன்றா. யுத்.13). |
| பல்லவம் 3 | pallavam, n. See பல்லவி. (W.) . |
| பல்லவமல்லன் | pallava-mallaṉ, n. <>பல்லவர்2+. A surname of the Pallava king Nandivarman II; இரண்டாம் நந்திவர்ம பல்லவனது பெயர்களுள் ஒன்று. (S. I. I. ii, 362.) |
| பல்லவர் 1 | pallavar, pron. <>பல்1+. [K. palavar] Many persons; பலர். பல்லவர்க் கிரங்கும் பாடிமிழ் நெய்தல் (பு. வெ.10, காஞ்சிப். 6, கொளு). |
| பல்லவர் 2 | pallavar, n. Kings of the Pallava dynasty who ruled at Conjeevaram from about the 5th. c. to the 9th. c. A. D.; உத்தேசம் கி.பி ஜந்தாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுவரை காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த அரசவமிசத்தினர். பல்லவனூர் மதிற்காஞ்சிமாநகர் (தேவா.1052, 10). |
| பல்லவராயன் 1 | pallava-rāyaṉ, n. <>பல்லவர்2+. 1. A title bestowed by Cōḻa kings on their generals; சோழர் தம் சேனாபதிகளுக்கு அளித்துவந்த பட்டங்களுள் ஒன்று. (S.I. I. ii, 113.) 2. Title of certain castes, as Kaḷḷar and ōccar; |
| பல்லவராயன் 2 | pallava-rāyaṉ, n. <>பல்+. Loc. 1. Dunce, stupid fellow; மூடன். 2. A grinning person; |
| பல்லவன் | pallavaṉ, n. <>pallava. 1. Rake, libertine; தூர்த்தன். (சூடா.) 2. Low, base person; |
| பல்லவி | pallavi, n. (K. pallavi.) (Mus.) The chorus or burden of a kīrttaṉam, கீர்த்தனத்தில் திரும்பத்திரும்பப் பாடப்படும் முதலுறுப்பு. |
| பல்லவிபாடு - தல் | pallavi-pāṭu-, v. intr. <>பல்லவி+. 1. To sing pallavi; பாட்டின் பல்லவியைத் தாளத்திற்கியையப் பாடிவருதல். 2. To be harping on the same theme; |
| பல்லவை 1 | pallavai, prou. <>பல். (K. palava.) Many things; பலபொருள். பல்லவை நுதலியவகர விறுபெயர் (தொல். எழுத். 174). |
| பல்லவை 2 | pallavai, n. <>pallava. 1. Base or mean thing; இழிவான பொருள். (யாழ். அக.) 2. Meanness; |
| பல்லவோற்சவம் | pallavōṟcavam, n. <>id.+ utsava. Annual feast celebrated at the sprouting season; தளிருண்டாங்காலத்து நிகழ்த்தும் ஒரு திருவிழா. Loc. |
| பல்லன் | pallaṉ, n. <>பல். (M. pallaṉ.) Man with long or large teeth; நீண்ட பல்லுள்ளவன். |
| பல்லா | pallā, n. <>U. pallā. See பல்லாய். புதுப்பல்லாவில் இரண்டு பலம் நாமக்கட்டி வாங்கிச் சுத்தசலத்திற் போட்டு (அசுவசா. 55). . |
| பல்லாக்கு | pallākku, n. See பல்லக்கு. Colloq. . |
| பல்லாங்குழி | pallāṅ-kuḻi, n. <>பன்னான்கு+குழி. (M. pallāṅkuḻi.) 1. A thick plank with 14 hollows, used in a particular kind of game; பதினான்கு குழிகொண்டா தாய் ஒருவகை விளையாட்டிற்கு உதவும் பலகை. 2. The game played with cowries, etc., on a pallāṅkuḻi; |
| பல்லாட்டம் | pal-āṭṭam, n. <>பல்+. See பல்லசைவு. (M. L.) . |
| பல்லாடு - தல் | pal-l-āṭu-, v. intr. <>id. +. To cringe; கெஞ்சுதல். Loc. |
| பல்லாடுதல் | pal-l-āṭutal, n. <>id. +. Chewing, nibbling; மெல்லுகை. பல்லாடப் பசி தீரும். |
