Word |
English & Tamil Meaning |
|---|---|
| பல்காப்பியம் | palkāppiyam, n. <>பல்காப்பியனார். An ancient work on prosody by Palkāppiyaṉār; பல்காப்பியனார் இயற்றிய ஓர் யாப்பிலக்கணநூல் (தொல். பொ. 650, உரை.) |
| பல்காப்பியனார் | palkāppiyaṉār, n. The author of an ancient work on prosody; யாப்பிலக்கண நூலாசிரியருள் ஒருவர் (தொல். பொ. 650, உரை.) |
| பல்காயம் | palkāyam, n. <>பல்காயனார். An ancient work on prosody by Palkāyaṉār; பல்காயனார்செய்ததோர் யாப்பிலக்கணநூல். (யாழ். வி. பக். 22.) |
| பல்காயனார் | palkāyaṉār, n. The author of an ancient work on prosody; யாப்பிலக்கணநூலாசிரியருள் ஒருவர். (தொல். பொ. 650, உரை.) |
| பல்கால் | pal-kāl, adv. <>பல்+. See பல்காலும். . |
| பல்காலும் | pal-kālum, adv. <>id.+. Many times, oftentimes, frequently; அடிக்கடி. பல்காலுந் தோன்றி (நாலடி, 27). |
| பல்காற்பறவை | pal-kāṟ-paṟavai, n. <>id. +. Bee, as many-footed; (பலகாலுள்ள பறவை) வண்டு. பல்காற் பறவை கிளிசெத் தோர்க்கும் (பெரும்பாண். 183). |
| பல்கு - தல | palku-, 5 v. intr. cf. brh. 1. To increase, as in number or quantity; பலவாதல். ஞாயிறு பல்கிய மாயமொடு (பதிற்றுப். 62, 6). 2. To multiply, enhance, intensify; |
| பல்குன்றக்கோட்டம் | pal-kuṉṟa-k-kōṭ-ṭam, n. An ancient division of Toṇṭaimaṇṭa-lam; தொண்டைமண்டலத்துள் ஒரு நாடு. செயங்கொண்ட சோழமண்டலத்துப் பல்குன்றக்கோட்டத்து (S. I. I. i, 103). |
| பல்குனன் | palkuṉaṉ, n. <>Phalguna. Arjuna; அருச்சுனன். |
| பல்சந்தமாலை | pal-canta-mālai, n. <>பல்+சந்தம்+. A poem of 10 to 100 stanzas in ten kinds of cantam; பத்துவகைச் சந்தங்களா லியன்றதும் பத்துமுதல் நூறுவரை செய்யுட்கள் கொண்டதுமான பிரபந்தவகை (இலக். வி. 834.) |
| பல்டி | palṭi, n. <>U. palṭi. A gymnastic feat; தேகப்பயிற்சியாகிய கரணவகை. |
| பல்தேய்தல் | pal-tēytal, n. <>பல்+. Absorption of dentine; பல்லின் தேய்வால் உண்டாம் நோய்வகை. (M. L.) |
| பல்நாக்கு | pal-nākku, n. <>id.+. Oarblade; தண்ணீரைத்தள்ள இணைக்கப்பட்டிருக்கும் துடுப்பின் பலகை. Loc. |
| பல்நோய் | pal-nōy, n. <>பல்2+. See பல்நோவு. . |
| பல்நோவு | pal-nōvu, n. <>id.+. Toothache, dentalgia; பல்லில் உண்டாம் வலி. |
| பல்பொருட்சூளாமணி | pal-poruṭ-cū-ḷamaṇi, n.<>பல்1+. A Tamil Lexicon composed by īcurapāratiyār, 17th c.; 17-ஆம் நூற்றாண்டில் இருந்த ஈசுரபாரதியார் இயற்றிய ஒரு நிகண்டு. |
| பல்பொருட்பெயர் | pal-poruṭ-peyar, n. <>id. +. See பலபொருளொருசொல். (சூடா.) . |
| பல்முட்டுவாள் | pal-muṭṭu-vāḷ, n. <>பல்2+. Cross-cut saw; இரம்பவகை. (C. E. M.) |
| பல்முளைத்தல் | pal-muḷaittal, n. <>id.+. (M. L.) 1. Dentition; எயிறெழுகை. 2. Cutting of the wisdom tooth; |
| பல்மோடிக்காய் | pal-mōṭi-k-kāy, n. Panicled bindweed. See நிலப்பூசனி. (A.) |
| பல்லக்கு | pallakku, n. <>Pkt. pallaṅka <>paryaṅka. [K. pallakki, M. pallakku.] Palanquin; ஆட்கள் தூக்கிச்செல்லும் வாகனவகை. தந்தப் பல்லக்குஞ் சிவிகையுந் தாங்கி (தொண்டை. சத. 87). |
| பல்லக்குயோகம் | pallakku-yōkam, n. <>பல்லக்கு+. (Astrol.) Prosperous condition enabling one to ride a palanquin; பல்லக்கில் ஏறிச்செல்லுதற்குரிய நன்னிலை. (W.) |
| பல்லகம் | pallakam, n. <>bhallaka. Bear; கரடி. (யாழ். அக.) |
| பல்லகி | pallaki, n. prob. bhallātakī. Marking-nut tree. See சேங்கொட்டை. (மலை.) |
| பல்லங்குழி | pallaṅ-kuḻi, n. See பல்லாங்குழி. . |
| பல்லசைவு | pal-l-acaivu, n. <>பல்2+. Loose tooth; பற்கள் ஆடுதலால் உண்டாம் நோய் வகை. (இங். வை. 166.) |
| பல்லணம் | pallaṇam, n. <>palyāyaṇa. [K. pallaṇa.] Saddle; குதிரைக்கலனை. பன்னு பல்லணமரும மற்று (கம்பரா. மூலபல.14). |
| பல்லதி | pallati, n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. இராக. 56.) |
| பல்லம் 1 | pallam, n. <>பல்1. A very great number; ஒரு பேரெண். (திவா.) |
| பல்லம் 2 | pallam, n. See பல்லணம். (சூடா.) . |
| பல்லம் 3 | pallam, n. <>bhalla. 1. Bear; கரடி. சினப்பல்ல முதலானமா (உபதேசகா. சிவபுண். 90). 2. A kind of weapon; 3. Arrow; 4. See பல்லகி. (மலை.) |
