Word |
English & Tamil Meaning |
|---|---|
| பல்லாண்டு | pal-l-āṇṭu, n. <>பல்+ஆண்டு. 1. Many years; பலவருடம். பல்லாண்டும் பரமாத்துமனைச் சூழ்ந்திருந் தேத்துவர் (திவ். திருப்பல். 12). 2. A benediction of longevity; 3. A poem; |
| பல்லாதகி | pallātaki, n. <>bhallātakī. Marking-nut tree. See சேங்கொட்டை, 2. (மலை.) |
| பல்லாய் | pallāy, n. <>U. pallā. Earthen vessel; ஒருவகை மட்கலம். |
| பல்லார் | pallār, pron. <>பல். Many persons; பலர். பல்லா ரகத்து (குறள், 194). |
| பல்லி 1 | palli, n. <>பல். 1. (K. halive.) A kind of harrow; பலுகுக்கட்டை. பல்லியாடிய பல்கிளை (புறநா.120). 2. Woman with long or large teeth; |
| பல்லி 2 | palli, n. <>pallī. (K. halli.) 1. Wall lizard, Lacerta gecko; சிறுபிராணிவகை. சிறுவெண் பல்லிபோல் (புறநா. 256). 2. A creeping plant; 3. One half of a village; 4. A bird; |
| பல்லி 3 | palli, n. prob. pallava. Shoot or tendril from the nodes of the betel plant; வெற்றிலைக்கணுவில் அரும்புங் குருத்து. (W.) |
| பல்லிக்குஞ்சு | palli-k-kucu, n. <>பல்லி+. Young of a lizard; பல்லிக்குட்டி. (W.) |
| பல்லிக்கை 1 | pallikkai, n. See பல்லி, 1. (W.) . |
| பல்லிக்கை 2 | pallikkai, n. <>bhallikā. See பல்லாதகி. (சங். அக.) . |
| பல்லிகி | palliki, n. <>id. See பல்லாதகி. (சங். அக.) . |
| பல்லிகை | pallikai, n. <>id. See பல்லாதகி. (சங். அக.) . |
| பல்லிகொட்டுதல் | palli-koṭṭutal, n. <>பல்லி+. Chirping of a lizard; பல்லி சத்திக்கை. (திவ். பெரியதி. 10, 10, 4.) |
| பல்லிசாத்திரம் | palli-cāttiram, n. <>id. +. Science of interpreting the chirpings of a lizard; கௌளி சாத்திரம். |
| பல்லிதழ் | pal-l-itaḻ, n. <>பல்+இதழ். Flower, as many-petalled; (பல இதழ்கொண்டது) மலர். பல்லித ழுண்கண் (ஐங்குறு. 170). |
| பல்லிப்பூடு | palli-p-pūṭu, n. <>பல்லி+. See பல்லிப்பூண்டு. . |
| பல்லிப்பூண்டு | palli-p-pūṇṭu, n. <>id.+. A flowering parasitic plant. See கொல்லைப்பல்லி. (பதார்த்த. 278.) |
| பல்லிபடுதல் | palli-paṭutal, n. <>id. +. See பல்லிகொட்டுதல். (நற். 169, உரை:கைந்நிலை.) . |
| பல்லிபற்று - தல் | palli-paṟṟu-, v. intr. <>id. +. To hold fast, as a lizard; ஒன்றைவிடாது பிடித்தல். இந்திரியங்கள் ஸ்வஸ்வ விஷயங்களிலே பல்லிபற்றுகையாலே (ஈடு, 5, 4, 1). |
| பல்லியங்காசனம் | palliyaṅkācaṉam, n. <>paryaṅkāsana. A kind of sitting posture practised by ascetics in meditation; யோகாசனவகை. (சீவக. 3114, உரை.) |
| பல்லியடித்தல் | palli-y-aṭittal, n. <>பல்லி+. See பல்லிகொட்டுதல். Loc. . |
| பல்லியம் 1 | pal-l-iyam, n. <>பல்+. Musical instruments of all sorts; பல்வகை வாத்தியங்கள். யாழொடு பல்லியங் கறங்க (புறநா. 281). |
| பல்லியம் 2 | palliyam, n. (அக. நி.) 1. Stable; குதிரைப்பந்தி. 2. (Mus.) Time-measure; 3. Hangings; 4. Agricltural tract; |
| பல்லியாடு - தல் | palli-y-āṭu-, v. tr. <>பல்லி+. To level a field with a harrow; விதைத்தபின் பலுகடித்தல். பல்லியாடிய பல்கிளைச் செவ்வி (புறநா. 120). |
| பல்லியோசியம் | palli-yōciyam, n.<>பல்லி+சோசியம். See பல்லிசாத்திரம். (யாழ். அக.) . |
| பல்லிரை | pallirai, n. Square spurge. See சதுரக்கள்ளி. (மலை.) |
| பல்லிவிழுகுறி | palli-viḻu-kuṟi, n. <>பல்லி+. Omen from the fall of a lizard on one's person; பல்லி உடம்பில் விழுதலைக்கொண்டு அறியும் நிமித்தம். |
| பல்லிழைப்புளி | pal-l-iḻaippuḷi, n. <>பல்+. Toothing-plane; இழைப்புளிவகை. (C. E. M.) |
| பல்லிளி - த்தல் | pal-l-iḷi-, v. intr. <>id. +. 1. [M. palliḷikka.] To grin, show the teeth; வெளிக்காட்டுதல். அஞ்சிப் பல்லிளித்து (உத்தரரா. அசுவமே. 124). 2. To lose colour, as a saree; |
| பல்லிற்சொத்தை | palliṟ-cottai, n. id.+. Carious tooth; கெட்டுப்போன பல் (M. L.) |
| பல்லிறுக்கி | pal-l-iṟukki, n. perh. id.+. Chittagong wood. See மதகரிவேம்பு. (மலை.) |
