Word |
English & Tamil Meaning |
|---|---|
| பலபம் | palapam, n.<>T. balapamu. . See பலப்பம். Loc. |
| பலபராக்கிரமம் | pala-parākkiramam, n. <>bala+. Strength and valour; உதல் வலைமையும் வீரமும். |
| பலபல | pala-pala, pron. <>பல+. Many; அனேகமானவை. தொல்.எழுத்.215, உரை.) |
| பலபலவெனல் | pala-pala-v-eṉal, n. Onom. expr. signifying (a) sounding, chirping, as of a lizard; rustling, as of falling leaves; ஒர் ஒலிக்குறிப்பு. பனிக்கலத்தில் மரத்தினின்று பல பலவென்ரு இலையுதிர்கின்றது: (b) day-breaking; (c) trickling down, as of tears; |
| பலபலெனல் | pala-paleṉal, n. See பலபலவெனல். பல்லியும் பலபலென்னப் பகருது (குற்றாகுற.63). . |
| பலபாகம் | pala-pākam, n. <>பலம்+pāka. (w.) 1. Ripeness, maturity சனிமுதிர்வு. 2. Fruit bearing period; 3. Recompense; |
| பலபாடு | pala-pāṭu, n. <>பல+. (w.) 1. All sorts of trouble; பலவகைத்துன்பம். 2. Various scenes of disgrace; 3. Miscellaneous business; |
| பலபாண்டம் | palapāṇṭam, n. Yellow orpiment; அரிதாரம். (சங்.அக.) |
| பலபூரகம் | palapūrakam, n. <>phalapūraka. Pomegranate. See மாதுளை. (மலை.) . |
| பலபூரம் | palapūram, n. See பலபூரகம். (சங்.அக.) . |
| பலபை | palapai, n. <>pala-bhā. Equinoctial shadow of the gnomon at noon; சூரியன் மையவரியில் நிற்கும்போது சூரியகடிகாற் மத்தியில் விழும் நிழல். (யாழ்.அக.) |
| பலபொருளுவமை | pala-poruḷ-uvamai, n. <>ப்ல+. (Rhet.) Comparison of ne object with many things; ஒரு உவமேயத்துக்குப் பல பொருள் உவமையாகவரும் உவமையணி.(தண்டி. 30.) |
| பலபொருளொருசொல் | pala-poruḷoru-col, n. <>id.+. Word of many meanings; பலபொருள்கொண்ட ஒரு பதம். ஆயிருவகைய பலபொருளொருசொல் (தொல்.சொல். 52). |
| பலபோகம் 1 | pala-pōkam, n. <>id.+. Tenure by which inhabitants hold lands in severalty, each being responsible for the revenue of his own holding, opp. to ēkapōkam; பூமியில் பலர்க்குரிய தனித்தனி அனுபவம். (C. G.) |
| பலபோகம் 2 | pala-pōkam, n. <>phala+. Enjoyment of the fruit, as of karma; பலனை அனுபவிக்கை. |
| பலம் 1 | palam, n. <>pala. 1. A standard weight; நிறைவகை. (பிங்.) 2. Flesh; 3. Minute; |
| பலம் 2 | palam n. <>phala. 1. Fruit கனி (பிங்) கதலியின் பலங்களும் (தேவா.332, 10). 2. Green fruit; 3. Esculent roots; 4. Result, consequence; benefit, profit; 5. Gold; 6. (Math.) Quotient; 7. Conessi bark. See 8. Nutmeg; 9. Shield; 10. Menses; 11. Area of a cricle; 12. Sharpness of a weapon; 13. Influence; 14. Ploughshare; |
| பலம் 3 | palam, n. <>bala. 1. Strength, power, might, vigour; force; வலி இவர்தம் பலங்களா னேடியு மறிவரிதாய (தேவா.130, 9). 2. Momentum, impetus, velocity; 3. Army, military forces; 4. Firmness; 5. Thickness; |
| பலம் 4 | palam, n. <>phāla. (யாழ். அக.) 1. Forehead; நெற்றி. 2. Leaf; |
| பலம்பலா | palampalā, n. cf. balā. Sticky mallow. See சிற்றாமுட்டி. (சங்க்.அக.) . |
| பலம்பழம் | palampaḻam, n. <>bhalla, phala. Marking-nut tree. See சேங்கொட்டை, 2. (மலை.) . |
| பலம்பூஸ் | palampūs, n. See பலம்போஸ். (w.) . |
| பலம்போஸ் | palampōs, n. <>U. palangpōsh. Checkered sheeting for mattresses; ஒருவகைப் படுக்கை விரிப்பு. (w.) |
| பலமிலி | palam-ili; n. <>பலம்+. Tree bearing no fruit; காய்த்தலில்லாமரம். (நாமதீப. 37.l) |
| பலமுகம் | pala-mukam, n. <>பல+. Various sides, directions, ways, means, sources or points; பலமார்க்கம். |
