Word |
English & Tamil Meaning |
|---|---|
| பவிகம் | pavikam, n. <>bhavika. Good merit; சிறப்பு. (யாழ்.அக.) |
| பவிசி | pavici, n. <>T. bavisi. See பவிஷு (W.) . |
| பவிசு | pavicu, n. 1. See பவுஞ்சு, 2. . 2. See பவிஷீ. பவிசுண்டு தவிசுண்டு (தாயு. மலைவளர். 1). |
| பவிஞ்சு | pavicu, n. See பவுஞ்சு. (W.) . |
| பவிடியபுராணம் | paviṭiya-purāṇam, n. <>bhaviṣyat. A chief Purāṇa, one of patiṉeṇ-purāṇam, q.v.; பதினெண்புராணத் தொன்று. |
| பவிடியம் | paviṭiyam, n. <>bhaviṣyat. 1. See பவிஷியம், 1. (பி. வி. 44.) . 2. See பவிடியபுராணம். (W.) |
| பவித்திரம் 1 | pavittiram, n. <>pavitra. 1. Sacredness, purity; பரிசுத்தம். பவித்திரத்தும்பி பறந்ததே (சீவக.2311). 2. Ring of darbha grass worn on the fourth finger of the right hand on religious occasions; 3. Darbha grass. See தருப்பை. (சூடா.) 4. See பவித்திரமோதிரம். 5. See பவித்திரோற்சவம். 6. See பவித்திரமாலை. Loc. 7. The sacred thread; 8. Ghee; 9. Honey; |
| பவித்திரம் 2 | pavittiram, n. <>bhagan-dara. See பவுந்திரம். Loc. . |
| பவித்திரமாலை | pavittira-mālai, n. <>பவித்திரம்+. Necklace of silk or cotton thread knotted in a special way; பட்டால் அல்லது நூலால் முடிப்புக்களுடன் செய்யப்பட்ட மாலைவகை. |
| பவித்திரமுடிச்சு | pavittira-muṭiccu, n. <>id.+. A kind of knot in which the hairtuft is tied; தலைமயிரின் முடிப்புவகை. Loc. |
| பவித்திரமோதிரம் | pavittira-mōtiram, n. <>id.+. Finger-ring or gold made in semblance of a darbha ring; தருப்பைப் பவித்திரவடிவ மான பொன்மோதிரம். |
| பவித்திரவான் | pavittiravāṉ, n. <>pavitra-vān nom. sing. masc. of pavitra-vat. See பவித்திரன். (யாழ். அக.) . |
| பவித்திரவிரல் | pavittira-viral, n. <>pavitra+. The ring finger on which is worn the pavittiram; [பவித்திர அணியும் விரல்] மோதிரவிரல். Colloq. |
| பவித்திரன் | pavittiraṉ, n. <>id. Consecrated or sacred person; pure, holy man; தூயவன். நீண்முடி கவித்தனன் பவித்திரற் றொழுதே (சீவக.2366). |
| பவித்திராங்குலி | pavittirāṅkuli, n. <>id+aṅguli. See பவித்திரவிரல். (தைலவ. தைல.) . |
| பவித்திரி | pavittiri, n. <>pavitra. 1. See பவித்திரம், 3. (மலை.) . 2. See பவித்திரன். (யாழ். அக.) |
| பவித்திரை | pavittirai, n. <>pavitrā. Pure, holy woman; தூயவள். (யாழ். அக.) |
| பவித்திரோற்சவம் | pavittirōṟcavam, n. <>pavitra+ut-sava. Festival in honour of Viṣṇu or šiva in the month of Avaṇi performed to make good the shortcomings in the worship of the year; சிவாலயங்களிலும் விஷ்ணு கோயில்களிலும் ஒராண்டுநிகழ்ந்த பூசைகளில் நேரும் குறைவுக்குப் பிராயச்சித்தமாகப் பெரும்பாலும் ஆவணிமாதத்தில் நடத்தப்படுந் திருவிழா. |
| பவிழியம் | paviḷiyam, n. <>bahvṟc. Rgvēda; இருக்குவேதம். (T. A. S. ii, 3.) |
| பவிஷியத் | paviṣiyat, n. <>bhaviṣyat. See பவிஷியம், 1. பவிஷ்யதாசாரியர். . |
| பவிஷியம் 1 | paviṣiyam, n. <>id. Futurity; எதிர்காலம். 2. See பவிடியபுராணம். Loc. |
| பவிஷியம் 2 | paviṣiyam, n. See பவிஷு (W.) . |
| பவிஷு | paviṣu, n. <>T.bavisi. 1. Affluence, opulence, prosperity; ஐசுவரியம். 2. Felicity, splendour; 3. Pride; 4. Respectability; |
| பவுசு | pavucu, n. See பவிஷு. பாரிலுள்ளோ ரெல்லாம் பவுசுபெற்ற (கொண்டல்விடு.) . |
| பவுஞ்சு | pavucu, n. <>U. fauj. 1. Army, troops; சேனை. குதிரைப் பவுஞ்சும் (பணவிடு.23). 2. Order, course, range, company, as of guests; |
| பவுட்டிகம் | pavuṭṭikam, n. <>pauṣṭika. Ceremony intended for promoting prosperity; வளம்பெருகச் செய்யுஞ் சடங்கு. |
| பவுண்டரம் | pavuṇṭaram, n. <>pauṇdra. Bhīma's conch; வீமன்கைச்சங்கு. |
| பவுண்டரிகம் | pavuṇṭarikam, n. <>pauṇdarīka. A Kind of soma sacrifice lasting 11 days; பதினொரு நாளிற் செய்யும் சோமயாகவகை. பவுண்டரிக முதல் வேள்வி (சேதுபு.பிரமகு.44). |
| பவுண்டு 1 | pavuṇṭu, n. <>Lat. pond. A standard weight=16 ounces avoirdupois; பதினாறு அவுன்ஸ் கொண்ட ஒருநிறை. |
