Word |
English & Tamil Meaning |
|---|---|
| பழமைபாராட்டு - தல் | paḻamai-pārāṭṭu-, v. intr. <>பழ-மை +. To dwell fondly on one's long acquaintance ; நெடுநாளாக உள்ள பெரும் பழக்கத்தைத் தெரிவித்தல் நன்மொழிகள்பேசிப்பழமைபாராட்டி (கொக்கோ) . |
| பழமொழி | paḻa-moḻi, n.<>id. +. 1. [M.paḻamoḻi.] Proverb, maxim; முதுசொல் பழமொழியும் பார்த்தில¦ரோ (கம்பரா.சூர்ப்ப.139). 2. An ancient didactic work of 400 stanzas, by muṟuṟai-y-araiyar , each explaining a principle of conduct by means of a proverb, one of patiṉeṇ-kīḻ-k-kaṇakku , q.v. ; |
| பழரசம் | paḻa-racam, n.<>பழம் +. Juice of fruits ; பழச்சாறு . |
| பழவடியார் | paḻa-v-aṭiyār, n.<>பழ-மை +. Hereditary devotees, devotees whose piety comes to them as a heritage ; வழித்தொண்டர் நின்பழவடியாரொடும் (திருவாச.6, 35) . |
| பழவரிசி | paḻa-v-arici, n.<>id. +. [M. paḷayari.] Rice husked and kept for some months ; குத்திப்பழகிய அரிசி. பல்லைத் தகர்த்துப் பழவரிசி யாகப் பண்ணிக் கொள்ளிரே (கலிங்.511). |
| பழவினை | paḻa-viṉai, n.id. +. Deeds of former births ; முன்வினை. நம்மை முழுதுடற்றும் பழவினையைக் கிறிசெய்த வாபடி (திருவாச.13, 8) . |
| பழனம் | paḻaṉam, n. perh. பழு-. 1. Paddy field ; வயல். பழன மஞ்ஞை யுகுத்த பீலி (புறநா. 13). 2. Agricultural land ; 3. Tank ; |
| பழனல்வெதிர் | paḻaṉal-vetir, n.<>பழம் +. See பழனவெதிர். (ஐங்குறு.91, பி-ம் .) . |
| பழனவெதிர் | paḻaṉal-veitr, n.<>பழனம்+. Sugarcane ; கரும்பு. பழனவெதிரின் கொடிப்பிணையலளே (ஐங்குறு.91) . |
| பழனி | paḻaṉi, n. of. பொதினி. A skanda shrine in Madura District ; மதுரை ஜில்லாவில் முருகக்கடவுள் கோயில்கொண்டிருக்கும் திருவாவி நன்குடி . |
| பழனிச்சம்பா | paḻaṉi-c-campā, n.<>பழனி +. A kind of campā paddy ; சம்பாநெல்வகை . |
| பழனிமட்டம் | paḻaṉi-maṭṭam, n.<>id. +. A kind of horse ; குதிரைவகை. (அசுவச.3) . |
| பழனியாண்டவன் | paḻaṉi-y-āṇṭavaṉ, n.<>id. +. See பழனியாண்டி. . |
| பழனியாண்டி | paḻaṉi-y-āṇti, n.<>id. +. Skanda at Palni Hill ; பழனியில் கோயில்கொண்டுள்ள குமரக்கடவுள் . |
| பழனிவேலன் | paḻaṉi-vēlaṉ, n.<>id. +. Skanda with lance in his hand ; வேலுடன்கூடிய குமரக்கடவுள் . |
| பழி - த்தல் | paḻi-, 11 v. tr. of. bhaṣ. [K. paḷi.] 1. கூடி யெடஅநஇ உநளேரசநஇ சனை¬உரடநஇ சநஎடைந நிந்தித்தல்.உலகம்பழித்தது (குறள்.290). 2. To slander, calumniate ; |
| பழி | paḻi, n.<>பழி-. [K.M. paḷi.] 1. Blame, censure, reproach, ridicule; நிந்தை புகழிற் பழியி னென்றா (தொல்.சொல்.73). 2. Slander, calumny; 3. Complaint, imputation, charge, disparagement; 4. Fault, crime; 5. Sin, guilt; 6. Revenge, vengeance, vindictiveness; 7. Falsehood, deceit; 8. Discord; 9. Worthless fellow ; |
| பழிக்காணி | paḻi-k-kāṇi, n.<>பழி +. Blood-money ; இரத்தக்காணிக்கை . |
| பழிக்குடி | paḻi-k-kuṭi, n.<>id. +. (w.) 1. Family cherishing inveterate hatred; பழம்பகை கொண்ட குடும்பம். 2. Family, low in rank ; |
| பழிக்குவிடு - தல் | paḻikku-viṭu-, v. tr. <>id. +. To abandon one to his evil ways; to allow one to ruin oneself ; அழியவிடுதல் . |
| பழிகட்டு - தல் | paḻi-kaṭṭu-, v.<>id. +. intr. (w.) 1. To pick a quarrel; சண்டை தொடுத்தல். 2. To bring an unjust accusation; 3. To sow discord; 4. To commit a crime; To threaten in order to effect one's purpose ; |
| பழிகரப்பங்கதம் | paḻi-kara-p-paṅkatam, n.<>id. + கர- +. Verse containing contemptuous insinuation ; வசையைக் குறிப்புபொருளாக் கொண்ட செய்யுள்வகை (தொல்.பொ.438, உரை) . |
