Word |
English & Tamil Meaning |
|---|---|
| பள்ளயம் | paḷḷayam, n. [T. pallamu, M. paḷḷayam.] See பள்ளையம், ¢1 பொன் பள்ளயமு மிங்கிருக்க (இராமநா. அயோத்.20) . . |
| பள்ளவோடம் | paḷḷavōṭam, n. of. பள்ளியோடம் A kind of boat ; படகுவகை. ஊருணியிலே திருப்பள்ளவோடம் பொன்னாலே பண்ணி நிறுத்தி (கோயிலொ. 16). |
| பள்ளன் | paḷḷaṉ, n.<>பள்-. A male of Paḷḷa caste ; பள்ளச்சாதியான் . |
| பள்ளாடு | paḷ-ḷ-āṭu, n. See பள்ளையாடு. . |
| பள்ளி | paḷḷi, n. <>palli. [K. paḷḷi.] 1. Place; இடம் சொல்லிய பள்ளி நிலையின வாயினும் (தொல்.எழுத்.100). 2. Hamlet, small village; 3. Herdsmen's village; 4. Town; 5. Hermitage, cell of a recluse; 6. Temple, place of worship,especially of Jains and Buddhists; 7. Palace; anything belonging to royalty; 8. Workshop; 9. Sleeping place or bed; 10. Sleep; 11. Sleeping place of animals; 12. School; 13. Room, chamber; 14. Alms-house; 15. Enclosure; 16. The Vaṉṉiya caste; 17. See பள்ளத்தி. Tinn. 18. Petty rulers; |
| பள்ளிக்கட்டில் | paḷḷi-k-kaṭṭil, n. <>பள்ளி+. Throne; சிங்காதனம். நின் பள்ளிக்கட்டிற்கீழே (திவ். திருப்பா.22). Nā. |
| பள்ளிக்கட்டு | paḷḷi-k-kaṭṭil, n. <>id. +. 1.Marriage of a princess; அரசகுமாரியின் திருமணம். Nā. 2. Founding a village; |
| பள்ளிக்கணக்கன் | paḷḷi-k-kaṇakkaṉ, n. <>id. +. A pupil at school; பள்ளிக்கூடச்சிறுவன். பள்ளிக்கணக்கன் புள்ளிக்கணக்கறியான். |
| பள்ளிக்கணக்கு | paḷḷi-k-kaṇakku, n. <>id. +. School-learning, bookish knowledge; பள்ளிக்கூடத்துப் படிப்பு. பள்ளிக்கணக்கு புள்ளிக்குதவாது. |
| பள்ளிக்கிராமம் | paḷḷi-k-kirāmam, n. <>id. Village belonging to a temple; கோயிற்குரிய கிராமம். (W.) |
| பள்ளிக்கிரு - த்தல் | paḷḷikkiru-, v. intr. To lie deep in the mud, as seeds; வித்துக்கள் சேற்றில் பதிந்து கிடத்தல். வித்துப் பள்ளிக்கிருந்தால் மழையினால். Nā. |
| பள்ளிக்குவை - த்தல் | paḷḷikku-vai-, v. tr. <>பள்ளி+. To put to school, as a child; பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி அட்சராப்பியாசஞ் செய்வித்தல். |
| பள்ளிக்குறிப்பு | paḷḷi-k-kuṟippu, n. <>id. +. Signs of sleep; தூக்கக்குறி. பள்ளிக்குறிப்புச் செய்யாதே பாலமுதுண்ணநீ வாராய் (திவ். பெரியதி. 10, 4, 6). |
| பள்ளிக்கூட்டம் | paḷḷi-k-kūṭṭam, n. <>id. +. A common place where illiterate low caste people assemble; எழுத்தறியாத கீழ்ச்சாதியார் கூடுமிடம். Nā.¢ |
| பள்ளிக்கூடத்துத்தம்பி | paḷḷi-k-kūṭattut-tampi, n. <>பள்ளிக்கூடம்+. Literate villager; கிராமத்தில் எழுதப்படிக்கத் தெரிந்தவன். Loc. |
| பள்ளிக்கூடம் | paḷḷi-k-kūṭam, n. <>பள்ளி+. School; கல்விகற்கும் இடம். |
| பள்ளிக்கெட்டு | paḷḷikkeṭṭu, n. See பள்ளிக்கட்டு, 1. Nā. . |
| பள்ளிகம்புவை - த்தல் | paḷḷi-kampu-vai-, v. intr. perh. பள்ளி+. To plant a stick in front of the house of a person whose revenue is in arrears, indicating that his movements are restrained till the dues are paid; சீர்க்கார் தீர்வை செலுத்தாதவன் வீட்டில் ஒரு சிறுகம்பு நட்டுத் தீர்வை செலுத்தும்வரை அவன் வெளியேறக்கூடர் தென மறியல்செய்தல். Nā. |
| பள்ளிகொண்டபெருமாள் | paḷḷi-koṇṭaperumāḷ, n. <>பள்ளி+கொள்-+. See பள்ளிகொண்டன். (I. M. P. II, Rd 179-C.) . |
| பள்ளிகொண்டான் | paḷḷi-konṭāṉ, n. <>id. +. Viṣṇnu, in the sleeping posture; கிடந்த திருக்கோளங்கொண்டாத்திருமால். |
| பள்ளிகொள்(ளு) - தல் | paḷḷi-koḷ-, v. intr. <>id. +. To sleep; துயில்கொள்ளுதல். பள்ளிகொள் களிறுபோல (சீவக.905). |
| பள்ளிச்சந்தம் | paḷḷ-c-cantam, n. <>id. +. Gift of a village, especially to a Jaina or Buddhist temple; சைனபொத்தக்கோயில்களுக்கு விடப்பட்ட கிராமம். (S. I. I. ii, 386.) |
