Word |
English & Tamil Meaning |
|---|---|
| பள்ளிச்சாணார் | paḷḷi-c-cāṇār, n. <>id. +. A division of the Cāṇār caste around Madras; சென்னைப்பக்கமுள்ள சாணார்வகையினர். |
| பள்ளித்தாசரி | paḷḷi-t-tācari, n. <>id. +. Non-Brahmin Tamil-speaking Vaiṣṇava mendicant; பிச்சையெடுக்குத் தமிழ்த்தாதன். Loc. |
| பள்ளித்தாமம் | paḷḷi-t-tāmam, n. <>id. +. Garland of flowers for the idol. See திருப்பள்ளித்தாமம். (பெரியபு. எறிபத்த.40) . |
| பள்ளித்தேவாரம் | paḷḷi--t-tēvāram, n. <>id. +. Nā. 1. Deity or idol worshipped in a palace; அரண்மனையில் வணங்குந் தெய்வம். 2. worship of the deity in a palace; |
| பள்ளித்தொங்கல் | paḷḷi-t-toṅkal, n. <>id. +. Golden necklace; பொன்ன்£லாகிய கழுத்தணிவகை. (I. M. P. Cg. 1104.) |
| பள்ளித்தோழமை | paḷḷi-t-tōḷamai, n. <>id. +. School companionship; பள்ளிக்கூடத்துநட்பு. அவனுக்குப் பள்ளித்தோழமை பலித்தபடி (ஈடு, 2, 1, 6). |
| பள்ளிப்பிள்ளை | paḷḷi-p-piḷḷai, n. <>id. +. Pupil, student; மாணாக்கன். Colloq. |
| பள்ளிப்பீடம் | paḷḷi-p-pīṭam, n. <>id. +. See பள்ளிக்கட்டில். (T. A. S. iv, 125.) . |
| பள்ளிபடு - த்தல் | paḷḷi-paṭu-, v. tr <>id. +. To perform the last rites of burial or cremation, as of a deceased king; அரசர் முதலியோர்க்கு ஈமக்கடன் செய்தல். இனைந்திரங்கிப் பள்ளிபடுத்தார்களே (சீவக.292). |
| பள்ளிபடை | paḷḷi-paṭai, n. <>id. +. 1.Performance of the last rites or burial or cremation, as of a deceased king; அரசர் முதலியோர்க்குப் புரியும் ஈமக்கடன். பள்ளிபடைப் படலம். (கம்பரா) 2. Temple erected in memory of kings; |
| பள்ளிமண்டபம் | paḷḷi-maṇṭapam, n. <>id. +. See பள்ளிமாடம் . |
| பள்ளிமாடம் | paḷḷi-māṭam, n. <>id. +. Sleeping room, especially of gods or kings; துயிலிடம். பள்ளிமாட மண்டபம்.(சிவக.146). |
| பள்ளிமிசுக்கு | paḷḷi-micukku, n. <>id. +. Computation of the estimated value of a crop; விளைச்சலின் மதிப்புக்கணக்கு. Loc. |
| பள்ளியந்துலா | paḷḷi-y-antulā, n. <>id. + prob. ஆந்தோளி. Palanquin fitted for sleeping; சயனதண்டிகை. பள்ளியந்துலா வேறுவர் (மதுரைப் பதிற்.19) |
| பள்ளியம்பலம் | paḷḷi-y-ampalam, n. <>id. +. See பள்ளிமாடம். ஓர் பள்ளி யம்பலத்துள்ளினிதிருந்து (பெருங். வத்தவ, 13, 3) . |
| பள்ளியயர் - தல் | Paḷḷi-y-ayar-, v. intr. <>id. +. To sleep; நித்திரைசெய்தல். ஒள்ளிழை மகளிர் பள்ளி யயர (மதுரைக்.623) |
| பள்ளியறை | paḷḷi-y-aṟai, n. <>id. +. Bed chamber; துயிலிடம். இற்றைக் கடியேன் பள்ளியறைக் கெய்துவாரோ (அருட்பா, iii, குறியா.10) |
| பள்ளியெழுச்சி | paḷḷi-y-eḻucci, n. <>id. +. 1. Rising from sleep, as of a deity or great person; துயில் நீங்குகை. 2. Hymn, daily sung to awaken the deity; See திருப்பள்ளியெழுச்சி. 3. A poem sung to awaken princes or other great persons from sleep; |
| பள்ளியெழுச்சிமுரசம் | paḷḷi-y-eḻucci-muracam, n. <>பள்ளியெழுச்சி +. Morning drum signifying the rising of a king from his sleep; அரசர் துயில்நீங்கி யெழுதலைக் குறிக்கும் முரசு. (W.) |
| பள்ளியோடம் | paḷḷ-y-ōtam, n. <>பள்ளி+. A kind of boat; படகுவகை (சிலப், 14, 74, உரை.) |
| பள்ளியோடவையம் | paḷḷiyōṭa-vaiyam, n. <>பள்ளியோடம்+ . A boat-like cart; பள்ளியோடம்போன்ற வண்டி. திண்டேர்ப் புரவியைப் பள்ளியோட வையத்திற் பூட்டி (பரிபா.20, 14, உரை). |
| பள்ளிவளர் - தல் | paḷḷi-vaḷar-, v. intr. <>பள்ளி+. See பள்ளியயர்-. (யாழ்.அக.) . |
| பள்ளிவாசல் | paḷḷi-vācal, n. <>id. +. Mosque; முகம்மதியர் மசூதி. |
| பள்ளிவாளம் | paḷḷivāḷam, n. A kind of poisonous insect; விஷப்பூச்சிவகை. (சித்தர்சிந்து.) |
| பள்ளிவேட்டை | paḷḷ-vēṭṭai, n. <>பள்ளி+. A mock-hunt in the temple-festival at Trivandrum in which the maharajah takes the chief part; திருவனந்தபுரத்துப் பத்மநாபசுவாமி கோயில் உற்சவத்தில் மகாராஜாவை முதன்மையாகக் கொண்டு சுவாமி வேட்டையாடுவதாக நிகழ்த்துந் திருவிழா. Nā. |
| பள்ளு | paḷḷu, n. See பள். . |
| பள்ளுவிலி | paḷḷuvili, n. prob. பள்ளு. A caste; ஒருசாதி. (J.) |
| பள்ளை | paḷḷai, n. cf. பள்ளம். [O. K. padde.] 1. That which is short and stocky, as a person or an animal; குள்ளம். 2. Sheep or goat; See பள்ளையாடு. 4. Pot-bellied animal; |
