Word |
English & Tamil Meaning |
|---|---|
| பன்மா | Paṉmā, adv. <>பல்+. See பன்மாண். பன்மா நாடுகெட வெருக்கி (பதிற்றுப். 83, 7). . |
| பன்மாண் | Paṉ-māṇ, adv. <>id.+. In many ways; பலபடியாக. பன்மாண் பாலில் வருமுலை சுவைத்தனன். (புறநா.160). |
| பன்மாஹேசுவரர் | Paṉ-māhēcuvarar, n.<>id. +. Company of šaiva-devotees ; சிவனடியார் கூட்டம். பன்மாஹேசுவர ரிரக்ஷை (S.I.I.iii,95,158). |
| பன்மினி | Paṉmiṉi, n. <>padminī. 1.The first of the four classes of women . See பதுமினி. . 2.Lotus. See தாமரை. |
| பன்முறை | paṉ-muṟai, n. <>பல்1¢+. 1.Many times; பலதடவை. பன்முறை யதிசயித்து (திருவாலவா.27,40). 2. Many kinds; |
| பன்மை | paṉmai, n. <>id. 1. (Gram.) Plural, opp. to orumai; ஒன்றல்லாதது.தானறி பொருள்வயிற் பன்மைகூறல் (தொல்.சொல்.23). 2. Plurality, multitude; 3. Inconsistency, inconstancy; 4. Indefiniteness; 5. Anything of middling quality; 6. Connivance; |
| பன்மைப்பால் | paṉmai-p-pāl, n. <>பன்மை+. (Gram.) Plural number; பலர்பால் பலவின்பால்கள். பன்மைப்பாலாற் கூறுதல் (தொல். சொல்.62, இளம்பூ.) . |
| பன்மைபண்ணு - தல் | Paṉmai-paṇṇu-, v. intr. <> id. +. To connive at a fault; to reprove or punish slightly; பார்த்தும் பாராதது போலிருத்தல்.(J.) |
| பன்மைபற்றியவழக்கு | Paṉmai-paṟṟiya-vaḻakku, n. <> id.+ பற்று -+. Usage following the major number of cases; ஒரு கூட்டத்திற் பலரின் அல்லது பலவற்றின் இலக்கணத்தைக்கொண்டு கூட்டத்தையே அவ்விலக்கணமுடையதாக வழங்கும் வழக்கு. வேற்றுமையென்பது பன்மைபற்றிய வழக்கெனினுமமையும் (தொல்.சொல்.62, சேனா.). |
| பன்மையியற்பெயர் | paṉmai-y--iyaṟ-peyar, n. <>id. +. 1.Name generally denoting a species or group; ஓரினப்பலபொருளைக் குறிக்கும் இயற்பெயர். (தொல்.சொல். 176, 182 சேனா.) 2. Name denoting objects of serveral pāl; |
| பன்மொழித்தொகை | paṉ-moḻi-t-tokai, n. <>பல்1+மொழி+. A compound made up of more than two nouns; இரண்டுபெயருக்கு மேற்பட்ட பெயர்களாலாகிய தொகை (தொல்.சொல்.420, உரை.) |
| பன்றி | paṉṟi, n. [T.K. pandi, M. panni, Tu. paji.] 1. Hog, swine, pig, sus indicus; விலங்குவகை. (தொல்.பொ.553.) 2. A kind of hog-shaped machine; 3. See பன்றிநாடு. |
| பன்றிக்கரணம் | paṉṟi-k-karaṇam, n. <> பன்றி+. [M.pannikkaraṇam] (Astrol.) A division of time. See கௌலவம். . |
| பன்றிக்கலவாயன் | paṉṟi-k-kala-vāyaṉ, n. prob. id.+. A sea-perch, light brownish-red, attaining 1 ft. in length, serranus stoliczkae; பழுப்புநிறமுள்ளதும் ஒரடி வளர்வதுமான கடல்மீன் வகை. |
| பன்றிக்கிடை | paṉṟi-k-kiṭai, n. <> id.+. Pig-sty; பன்றிகள் அடையுமிடம். (W.) |
| பன்றிக்கிளி | paṉṟi-k-kiḷi, n. prob. id.+. Carrot wrass, green, prendoscarus rivulatus; பச்சைநிறமுள்ள கடல்மீன்வகை. |
| பன்றிக்குத்தி | paṉṟi-k-kutti, n. prob. id.+. Compound cymed mangrove, s. tr., Ceriops candolleana; சிறுமரவகை. (L.) |
| பன்றிக்குருவி | paṉṟi-k-kuruvi, n. prob. id. +. White-headed babbler, malacocircus griseus; குருவிவகை. (M.M. 185.) |
| பன்றிக்குறும்பர் | paṉṟi-k-kurumpar, n. A section of the Kuṟumpar caste; குறும்பர்சாதி வகையினர். பன்றிக் குறும்பர் பன்னிருவரென்னச் சிறந்தார் படிமீது (திருவாலவா. 59, 18) . |
| பன்றிக்குறும்பு | paṉṟi-k-kuṟumpu, n. A plant. See நிலப்பனை. (மலை.) . |
| பன்றிக்குறுவை | paṉṟi-k-Kuṟuvai, n. perh. பன்றி +. 1. Anthrax fever; சுரவகை. (C.E.M. 248.) 2. A kind of paddy ; |
| பன்றிக்கூழ்ப்பத்தர் | paṉṟi-k-kūḻ-p-pattar, n. <> id.+கூழ்+. See பன்றிப்பத்தர், 1. பன்றிக்கூழ்ப் பத்தரிற் றேமா வடித்தற்றால் (நாலடி.257). . |
| பன்றிக்கொடி | paṉṟi-k-koṭi, n. <> id. +. The banner of the hog belonging to Caḷukkiya kings of vēl-pulam; வேள்புலவரசராகிய சளூக்கியரது பன்றிக்குறிகொண்ட கொடி. (திவா.) |
