Word |
English & Tamil Meaning |
|---|---|
| பா | pā . The compound of ப் and ஆ. . |
| பா - த்தல் | pā- 11 v. tr. cf. பகு-. To divide, distribute; பகுத்தல். பாத்துண்பதுமிலர் (திருநூற். 89). |
| பா - தல் | pā- perh. 4 v. tr. See பா2. (தொல். பொ. 58, உரை.) . |
| பா 1 | pā n. <>பாவு-. 1. Expanse; பரப்பு. பாவடி யானை (புறநா. 233). 2. The central platform of a chariot; 3. Verse, stanza, poem; 4. Rafter; 5. Warp; 6. Cotton thread; 7. Shadow; 8. Gnomon or needle of a sun-dial; |
| பா 2 | pā n. <>pā. 1. Protection; காப்பு. பன்னு பாவென்ற றூய்மை பருகுதல் காப்புங் கூறும் (காஞ்சிப்பு. திருவேகம். 48) 2. Drinking; |
| பா 3 | pā n. perh. pū. 1. Purity, holiness; தூய்மை. பன்னுபாவென்ற றூய்மை (காஞ்சிப்பு. திருவேகம். 48). 2. Beauty; |
| பா 4 | pā n. (சங். அக.) 1. Snake; பாம்பு. 2. Cowhage. |
| பாக்கட்டு - தல் | pā-k-kaṭṭu- v. intr. <>பா 4+. (Weav.) To join the broken threads of the warp; நெசவுப்பாவில் அற்ற இழையை இணைத்தல். |
| பாக்கம் | pākkam n. perh. பா 2-. 1. Sea-side village; நெய்தனிலத்தூர். கொழும்பல்குடிச் செழும்பாக்கத்து (பட்டினப். 27). 2. [T. K. pāka.] Town; village; 3. Royal residence; |
| பாக்கல் | pā-k-kal n. <>பா4+. Paving stones, slabs for flooring; பாவுகல். (யாழ். அக.) |
| பாக்கழி 1 | pākkaḷi n. perh. பாக்கம். (Mus.) A secondary melody-type of the marutam class; மருதயாழ்த்திறன்களுள் ஒன்று. (பிங்.) |
| பாக்கழி 2 | pākkaḷi n. prob. பா 4. (Weav.) Yarn; நெசவு நூல். Loc. |
| பாக்களவு | pākkaḷavu n. <>பாக்கு1+அளவு. An insignificant quantity; சிற்றளவு (W.) |
| பாக்கன் | pākkaṉ n. 1. Cat; பூனை. (திவா.) 2. Wild cat; |
| பாக்கால் | pākkāl n. [M. pākkāl.] See பாக்கானூல். Nā. . |
| பாக்கானூல் | pā-k-kāṉūl n. <>பா4 + கால்1 + நூல். Surplus thread in a weaver's chain while putting it into the loom; நெசவுப்பாவில் நெய்தபிறகு அச்சில் மிஞ்சிய நூல். (W.) |
| பாக்கி | pākki n. <>U. bāqī. 1. Balance, outstandings, arrears; நிலுவை. 2. Remainder; |
| பாக்கிகைபீது | pākki-kaipītu n. <>U. bāqi-kaifīyat. Statement or account of outstanding balances (R. F.); நிலுவைக்கணக்கு. |
| பாக்கிசாக்கி | pākki-cākki n. Redupl. of பாக்கி 1. See பாக்கி. . 2. A little extra quantity. |
| பாக்கிதார் | pākki-tār n. <>பாக்கி+. Revenue defaulter; one who is in arrears (R. F.); வரிமுதலியன செலுத்தாதிருப்பவன். |
| பாக்கியச்சீட்டு | pākkiya-ciṭṭu n. <>பாக்கியம்1+. Lottery; அதிர்ஷ்டச் சீட்டு. Loc. |
| பாக்கியசாலி | pākkiya-cāli n. <>bhāgya-šālin. Fortunate, blessed person; நல்வினையாளன். (W.) |
| பாக்கியத்தானம் | pākkiya-t-tāṉam n. <>bhāgya+. (Astrol.) The ninth house from the ascendant, regarded as the sign of prosperity; சென்ம லக்கினத்தானத்திற்கு ஒன்பதாவதும் பாக்கியத்தைக் குறிப்பதுமான தானம். குருத்தான பாக்கியத்தானவாதி (வீமே. உள். 263). |
| பாக்கியம் 1 | pākkiyam n. <>bhāgya. 1. Lot, destiny; விதி. 2. Happy destiny, good fortune, auspicious fate; 3. Prosperity, riches; 4. The 15th of the 15 divisions of day; 5. See பாக்கியத்தானம். (வீமே. உள். 263.) |
| பாக்கியம் 2 | pākkiyam n. <>pākya. Decoction, infusion; கஷாயம். (சங். அக.) |
| பாக்கியலட்சுமி | pākkiya-laṭcumi n. <>bhāgya+. The Goddess of Wealth or Fortune; தனலட்சுமி. |
| பாக்கியவதி | pākkiyavati n. <>bhāgya-vatī. Fortunate, blessed woman; wealthy woman; சம்பத்துள்ளவள். |
| பாக்கியவந்தன் | pākkiyavantaṉ n. <>bhāgya-vantah nom. masc. pl. of bhāgya-vat. Fortunate, blessed man; wealthy man; சம்பத்துள்ளவன். Colloq. |
