Word |
English & Tamil Meaning |
---|---|
ஆற்றுப்பித்தல் | āṟṟu-p-pittal n. <>id.+. Side or bank of a river; ஆற்றோரம். (W.) |
ஆற்றுப்பூத்தான் | āṟṟu-p-pūttāṉ n. <>id.+ பூ-. Cowhage. see பூனைக்காலி. (மூ.அ.) |
ஆற்றுப்பூவரசு | āṟṟu-p-pūvaracu n. <>id.+. River portia, m.tr., Trewia nudiflora; மரவகை. (மூ.அ.) |
ஆற்றுப்பொடி | āṟṟu-p-poṭi n. <>id.+. River minnow; ஆற்றிலுள்ள சிறுமீன். |
ஆற்றுமரி | āṟṟumari n. <>id.+ உமரி. Cyprus tamarisk. See நீருமரி. (மூ.அ.) |
ஆற்றுமல்லிகை | āṟṟu-mallikai n. <>id.+. A water plant; நீர்ப்பூடு வகை. (மூ.அ.) |
ஆற்றுமுள்ளி | āṟṟu-muḷḷi n. <>id.+. 1. A very prickly plant with diffuse branches. See கண்டங்கத்தரி. (மூ.அ.) 2. Holly-leaved bear's breech. See கழுதைமுள்ளி. |
ஆற்றுமேலழகி | āṟṟu-mēl-aḻaki n. <>id.+. A common weed,Celsia coromandeliana; பூடுவகை. (மூ.அ.) |
ஆற்றுல்லம் | āṟṟullam n. <>id.+ உல்லம். Variety of 'hilsa' fish, Clupea ilisha; உல்லமீன்வகை. (W.) |
ஆற்றுவரி | āṟṟu-vari n. <>id.+. Kind of ancient song on a river; ஒருவகை வரிப்பாடல் (சிலப்.6. 35, உரை.) |
ஆற்றுவாய்முகம் | āṟṟu-vāy-mukam n. <>id.+. Mouth of a river; நதிசங்கமுகம். ஆற்றுவாய் முகத்திற் றேக்கி யுமிழ்வதே யொக்கும் (கம்பரா.இராவணன்கள.25). |
ஆற்றுவாளை | āṟṟu-vāḷai n. <>id.+. A fresh-water fish, Wallago attu; ஏரிவாளை மீன். (W.) |
ஆற்றுவைப்பு | āṟṟu-vaippu n. <>id.+. Lands that have become cultivable owing to the natural turning of the course of a river (R.F.); நதியின் ஒதுக்கத்தால் சாகுபடிக்குத் தகுதியாகும் நிலம். |
ஆற்றொழுக்கு | āṟṟoḻukku n. <>id.+ ஒழுக்கு. 1. Flowing of a river, current of a river or stream; ஆற்றின் நீரோட்டம். 2. The most natural order of words which clearly brings out the meaning, one of four cūttira-nilai, q.v.; |
ஆறக்கட்டு - தல் | āṟa-k-kaṭṭu- v.intr. <>ஆறு-+. To prevent, by charm or spell, an evil spirit possessing a person from doing further mischief to the victim; பேய்க்கோளை மேற்செல்லவொட்டாமல் தடுத்தல். Loc. |
ஆறங்கம் | āṟaṅkam n. <>ஆறு3+ aṅga. The six sciences auxiliary to the Vēda. See வேதாங்கம். (தேவா.1159. 1.) |
ஆறத்தணிய | āṟa-t-taṇiya adv. <>ஆறு-+. Calmly, leisurely; அமைதியாய். Colloq. |
ஆறதீகம் | āṟatīkam n. Asbestos; கல்நார். (மூ.அ.) |
ஆறப்போடு - தல் | āṟa-p-pōṭu- v.tr. <>ஆறு-+. To allow a work to abate or relax by postponing it; தாமதப்படுத்துதல். Colloq. |
ஆறல்பீறல் | āṟal-pīṟal n. prob. redupl. of பீறல். That which is useless; உபயோகமற்றது. தன்னோடொக்க ஆறல் பீறலாயிருப்பதொரு தேவதையைப் பற்றி (ஈடு, 7,4,8). |
ஆறலை 1 - த்தல் | āṟalai- v.tr. <>ஆறு1+அலை2-. To rob on the highway; வழிப்பறித்தல். வன்கண்ண ராட்டிவிட் டாறலைக்கு மத்தம் (ஐந்.ஐம்.34). |
ஆறலை 2 | āṟalai n. <>id.+. Highway robbery; வழிப்பறி. (பிங்.) |
ஆறவமர | āṟa-v-amara adv. <>ஆறு-+அமர்1-. Calmly and patiently; அமைதியாய். Colloq. |
ஆறவிடு - தல் | āṟa-viṭu- v.tr. <>id.+. See ஆறப்போடு. . |
ஆறறிவுயிர் | āṟaṟivuyir n. <>ஆறு3+அறிவு+உயிர். Human beings as possessing six organs of knowledge, viz., the five senses and the mind; ஐம்பொறியுணர்வோடு மனவுணர்வுடைய மக்கள். மக்கடாமே யாறறி வுயிரே (தொல்.பொ.588). |
ஆறன்மட்டம் | āṟaṉ-maṭṭam n. <>id.+. (Mus.) Variety of time-measure; தாளவகை. (சிலப்.3. 16, அரும்.) |
ஆறாட்டம் | āṟāṭṭam n. prob. ஆறா(த)+ஆட்டம். [T.ārāṭamu.] Agony of extreme sickness; நோயுற்றோர் படும் அவஸ்தை. |
ஆறாட்டு | āṟāṭṭu n. <>ஆறு1+ஆடு-. [M. āṟaṭṭu.] Bath of an idol followed by the bath of the worshippers in a river or a tank at the close of a festival; தீர்த்தவாரியுற்சவம். (குற்றா.தல.வடவருவி.37.) |
ஆறாடி | āṟāṭi n. <>id.+. Vagabond, worthless fellow; நிலைகெட்டவன். (W.) |
ஆறாடு - தல் | āṟāṭu- v.intr. <>id.+. [M. ārāṭu.] To bathe at the close of a festival, said of a temple idol and its worshippers; தீர்த்தவாரி மூழ்குதல். ஏழுநாள் திருவிழாச்செய்து பங்குனிவியாகம் ஆறாடுவதாகவும். (T.A.S. i, No. 1, 6.) |
ஆறாதாரம் | āṟātāram n. <>ஆறு3+ ā-dhāra. (Yōga.) Six cakras or dynamic Tattvik centres which are nerve-plexuses in the body, viz., மூலாதாரம், சுவாதிட்டானம். மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை. |