Word |
English & Tamil Meaning |
---|---|
ஆறாதூறு | āṟātūṟu n. [T. ārudūṟu.] Slander, calumny; அவதூறு. Loc. |
ஆறாமாசம் | āṟā-mācam n. <>ஆறு3+ஆம்+ māsa. Ceremony among Brāhmans generally in the sixth month after marriage, when the bridegroom has his shave for the first time after his marriage; விவாகத்திற்குப்பின் ஆறாமாதத்தில் மணமகன் செய்துகொள்ளும் தீக்ஷா விஸர்ச்சனச் சடங்கு. Brāh. |
ஆறாமீன் | āṟā-mīṉ n. <>id.+id.+. Pleiades, as containing six stars; கார்த்திகை. |
ஆறாமீனறவோட்டு | āṟā-mīṉ-aṟa-v-ōṭṭu n. <>id.+. Passage of the sun through the segment of the Zodiac occupied by Pleiades, regarded by seamen as a period when rough weather is to be anticipated; கார்த்திகையில் சூரியன் பிரவேசிக்குங்காலம். (W.) |
ஆறாயிரப்படி | āṟāyira-p-paṭi n. <>id.+. The first commentary on the Tiruvāymoḻi by Tiru-k-kurukai-p-pirāṉ Pillāṉ, containing 6,000 granthas; திருவாய்மொழி வியாக்கியானங்களுள் முந்தியது. (உபதேசரத்.41. வ்யாக்.) |
ஆறாரச்சக்கரம் | āṟāra-c-cakkaram n. <>id.+āra+cakra. Stanza of four lines so composed that it can be written in the form of a wheel with six spokes, some of the letters being repeated in readings as one goes on reading the lines from spoke to spoke, a variety of cakkara-pantam; மிறைக்கவியுள் ஒன்று (மாறன.282, உரை.) |
ஆறியகற்பு | āṟiya-kaṟpu n. <>ஆறு-+. Chastity guarded by patience under affronts, dist. fr. சீறியகற்பு; அறக்கற்பு. ஆறிய கற்பிற் றேறிய நல்லிசை (பதிற்றுப்.90. 49; சிலப்.பதி.42, உரை). |
ஆறிருகரத்தோன் | āṟiru-karattōṉ n. <>ஆறு3+இரு+. Skanda, who has twelve arms; முருக்கடவுள். (பிங்.) |
ஆறிலொன்று | āṟil-oṉṟu n. <>id.+. One-sixth of a crop, as the proportion due to the Crown; அரசனுக்குரிய ஆறிலொருபாகம். |
ஆறு 1 | āṟu n. prob. அறு2-. 1. cf. யாறு. [T.ēṟu, M. āṟu.] 1. River, brook; நதி. (திவா.) 2. Way, road, path; 3. Side; 4. Result; 5. Religion; 6. Morality, virtue, path of righteousness; 7. Means, device; 8. Mode, manner, method; 9. Nature; |
ஆறு 2 - தல் | āṟu- 5 v.intr. [T.K.M.Tu. āru.] 1. To be appeased, alleviated, mitigated; தணிதல். ஆறுவது சினம். (ஆத்திச்சூடி). 2. To abate, cool, grow cold; 3. To be preserved with patience, as chastity; 4. To heal, as a wound; 5. To be suppressed; |
ஆறு 3 | āṟu n. [T.K.M. āṟu, Tu. āji.] The numeral 6; சு என்னும் எண். |
ஆறுகட்டி | āṟu-kaṭṭi n. <>ஆறு3+. 1. Breed of neat cattle that have not more than six teeth; ஆறு பற்களுக்கு மேல் முளையாத மாடு. Loc. 2. Pendant of six rudrākṣa beads, worn round the ear by Saivas; |
ஆறுகட்டு - தல் | āṟu-kaṭṭu- v.intr. <>ஆறு1+. (W.) 1. To build a dam across a river; நதியில் அணைகட்டுதல். 2. To embank a river; |
ஆறுகாட்டி | āṟu-kāṭṭi n. <>id.+. Guide, pilot; வழிகாட்டி. (W.) |
ஆறுசூடி | āṟu-cūṭi n. <>id.+. Siva whose head adorns the Ganges; சிவன். (நல்.பாரத.மருத்து.94). |
ஆறுதல் | āṟutal n. <>ஆறு-. Consolation, solace; மனச்சமாதானம். Colloq. |
ஆறுநோன்பு | āṟu-nōṉpu n. <>ஆறு3+. Muhammadan fast following peru-nāḷ, and continuing for six days; மகமதியர் பண்டிகைகளுளொன்று. |
ஆறுமணிப்பூ | āṟu-maṇi-p-pū n. <>id.+. Evening primrose, Oenothera tetraptera, for it blossoms at about 6 p.m.; மாலையில் மலரும் மலைப்பூவகை. Loc. |
ஆறுமாசக்கடன்காரன் | āṟu-māca-k-kaṭaṉ-kāraṉ n. <>id.+. Tallyman, pedlar, esp. among Muhammadans, who travels about from village to village selling household articles for credit, and appearing again for payment after six months; ஆறுமாசத் தவணைக்குக் கடனாகப் பண்டங்களை விற்கும் வியாபாரி. |
ஆறுமாசத்தண்டு | āṟu-māca-t-taṇṭu n. <>id.+. Species of Amarantus; கீரைவகை. |
ஆறுமாசமூட்டைக்காரன் | āṟu-māca-mūṭṭai-k-kāraṉ n. See ஆறுமாசக்கடன்காரன். . |