Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாகம் 2 | pākam n. <>bhāga. 1. Sharing, dividing; பகுக்கை. (சூடா.) 2. Share, part, portion; 3. Half, moiety; 4. (Math.) Degree; 5. Side, place; 6. Injury; 7. Alms, charity; 8. cf. vāhika. A kind of drum; |
| பாகம் 3 | pākam n. <>bāha. 1. Arm; புயம். (W.) 2. Measure of the arms extended=4 cubits; |
| பாகம்போடு - தல் | pākam-pōṭu- v. tr. <>பாகம்3+. To measure by the arm; கைப்பாகத்தாலளவிடுதல். (W.) |
| பாகமா 1 - தல் | pākam-ā v. intr. <>பாகம்1+. 1. To be fit for use, as food; உணவு முதலியன சித்தமாதல். 2. To reach a fitting condition, as medicine; |
| பாகமா 2 - தல் | pākam-ā v. intr. <>பாகம்2 +. To be divided, partitioned; பங்கு பிரிக்கப்படுதல். |
| பாகர் | pākar n. perh. பா4. 1. Wooden balustrade in a car; தேரின் மேற்றட்டைச்சுற்றியுள்ள மரக் கைப்பிடிச்சுவர். (சிறுபாண். 258). 2. Car; |
| பாகரப்பிரபை | pākara-p-pirapai n. <>bhā-kara+. Splendour of the sun; சூரியப்பிரபை. பாகரப் பிரபைபோலப் படரொளிப் பவணவேந்தர் (மேருமந். 1073). |
| பாகல் 1 | pākal n. Jack. See பலா. கோளிப்பாகற் கொழுங்கனித் திரள்காய் (சிலப்.16, 24). |
| பாகல் 2 | pākal n. prob. பாவு-. [k. hāgal M. pāval.] Balsam-pear, climber, Momordica charantia; கொடிவகை ஒருநாட் பாகற்கொடியே பலவறுப் பான் (திருவாரூ. 421). |
| பாகலம் | pākalam n. <>pākala. Fever affecting elephants; யானைக்குவரும் சுரநோய் வகை. (சூடா.) |
| பாகலவடா | pākalavaṭā n. Apron of the dam; அணைக்கட்டின் முற்றம். Loc. |
| பாகவதகோஷ்டி | pākavata-kōṣṭi n. <>bhāgavata +. Assembly of devotees reciting hymns in praise of God; பகவானைக்குறித்துப் பசனைசெய்யும் அடியார்களின் கூட்டம். |
| பாகவதநடனம் | pākavata-naṭaṉam n. <>id.+. A religious dance performed by Vaiṣṇava devotees; வைஷ்ணவ அடியார்கள் செய்யும் நடனம். (W.) |
| பாகவதபுராணம் | pākavata-purāṇam, n. <>id.+. 1. A chief Purāṇa in Sanskrit, one of patiṉeṇ-purāṇam, q.v.; வடமொழியிலுள்ள பதினெண்புராணத்தொன்று. 2. A metrical translation of Sanskrit Bhāgavata in Tamil by Cevvai-c-cūṭuvār; 3. A Tamil adaptation of another Purāṇa about Viṣṇu. |
| பாகவதம் | pākavatam n. <>bhāgavata. See பாகவதபுராணம். . |
| பாகவதர் | pākavatar n. <>bhāgavaia. 1. Vaiṣṇavas, worshippers of Viṣṇu; திருமாலை முதற்கடவுளாகக்கொண்டு வழிபடுஞ் சமயத்தோர். (பிங்.) பாகவதப் பிரமசாரி (திருவாலவா. 31, 2). 2. Those who expound religious stories to the accompaniment of music; 3. Masters of music, music teachers; |
| பாகன் 1 | pākaṉ n. cf. vāhaka & Mhr. pāgā. [M. pāvān.] 1. Elephant driver, mahout; யானைப்பாகன். யானை யறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் (நாலடி, 213). 2. Charioteer, muleteer, horseman, rider; 3. The planet Mercury; |
| பாகன் 2 | pākaṉ n. <>pāka One who has attained moral or spiritual ripeness; பக்குவம் பெற்றவன். பவத்திடை மூழ்கும் பாக ரல்லவர் (கந்தபு. அடிமுடி. 98) . |
| பாகன் 3 | pākaṉ n. <>bhāga. 1. Person who has anything at his side; partner; ஒரு பக்கத்திற்கொண்டவன். நாரி பாகன் (தேவா.1172, 9). 2. cf. பாங்கன். Agent; 3. Pimp; |
| பாகனம் | pākaṉam n. <>bhāganam. Year; வருஷம். (யாழ். அக.) |
| பாகஸ்தன் | pāka-staṉ n. <>bhāga-stha. Share-holder, partner; பங்காளி. Colloq. |
| பாகாத்து | pākāttu n. See பாகாயதி. . |
| பாகாயத்து | pākāyattu n. See பாகாயதி. (C. G.) . |
| பாகாயதி | pākāyati n. <>U. bāgāyat. Fenced plot of ground fit for garden cultivation; தோட்டம் வைத்தற்கேற்ற வேலியடைப்புள்ள நிலம். (C. G.) |
