Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாகார் | pākār n. <>prākāra. cf. பாகர். [K. pāgal.] (அக. நி.) 1. Fort-wall; கோட்டை மதில். 2. Place; |
| பாகாரம் | pākāram n. prob. bhāgahara. (Math.) Division, one of aṭṭa-kaṇitam, q. v.; அட்டகணிதத்துள் ஒன்றாகிய வகுத்தல். (பிங்.) |
| பாகி - த்தல் | pāki- 11 v. tr. <>பாகம்2. To divide, apportion; பங்கிடுதல். |
| பாகி 1 | pāki- n. <>pākin. Competent, eligible person; தகுதியானவன். (W.) |
| பாகி 2 | pāki- n. Fem. of பாகன்1. A female rider; சாரத்தியஞ் செய்யும் பெண். கலைப்பாகிகொண்டுவளாய் நின்றாள் (திவ். பெரியாழ். 1, 3, 9). |
| பாகி 3 | pāki- n. Dog; நாய். (W.) |
| பாகிகுஜஸ்தா | pāki-kujastā n. <>U. bāqīguhash. Balance due for the past month, as of rent; சென்றமாதத்து நிலுவை. |
| பாகிடு - தல் | pākiṭu- v. <>பாகு2 +.tr. See பாகி-. (W.)-intr. To give alms; பிச்சையிடுதல். பாகிடுவான் சென்றேனை. (தேவா, 54, 4). |
| பாகியம் | pākiyam n. <>bāhya. 1. That which is external; புறம்பானது. பூசை பாகிய மாப்பியந் தரமென விரண்டாகும் (சூதசங். சிவமா. 5, 2). 2. Evacuation; |
| பாகினேயன் | pākiṉēyaṉ n. <>bhāginēya. Sister's son; உடன்பிறந்தாள் மகன். பாகினேயரான கீழையகத்தாழ்வார் (கோயிலொ.95) . |
| பாகீடு | pākīṭu n. <>பாகிடு-. Share, portion, allotment; பங்கிடுகை. (W.) |
| பாகீரதி | pākīrati n. <>bhāgīrathī. The Ganges, the daughter of Bhagīratha; கங்கை பாகீரதி கிருபா சமுத்திர (திருப்பு. மூன்றாம்பாகம்,. 996). |
| பாகு 1 | pāku n. <>pāka. [T. pāgu.] 1. Any liquid food; குழம்பான உணவு. (திவா.) பொரிக்கறி பளிதம்பாகு புளிங்கறி (பிரபுலிங். ஆரோகண. 34). 2. Treacle, molasses, sugar syrup; 3. Coarse sugar, palm sugar; 4. Milk; 5. Areca-nut; 6. The second nakṣatra. See பரணி. (அக. நி.) |
| பாகு 2 | pāku n. <>bhāga. 1. Share, portion, lot, division; பகுதி. (W.) 2. Alms; 3. Bank; 4. šiva's consort; |
| பாகு 3 | pāku n. <>பாகன்1. 1. See பாகன்1, 1, 2. பாகுகழிந்தி யாங்கணும் பறைபட வரூஉம் வேகயானை (சிலப். 15, 46). . 2. Art, ability; |
| பாகு 4 | pāku n. <>bāhu. Arm; கை. |
| பாகு 5 | pāku n. U. pāga. Turban; தலைப்பாகை. பத்துவராகன். பெறவோர் பாகீந்தான் (விறலிவிடு.1008). |
| பாகு 6 | pāku n. <>T. bāgu. Beauty, charm; அழகு. பாகா ரிஞ்சிப் பொன்மதில் (கம்பரா. ஊர்தே. 82). |
| பாகுடம் | pākuṭam n. <>Pkt. pāuda <>prābhrta. [k. pāvudda.] 1. Gift, present; கையுறை. நரிப் படைக்கொரு பாகுடம்போலே (திவ். பெரியாழ். 4, 5, 8). |
| பாகுடி | pākuṭi n. Long distance; வெகுதூரம். பாகுடிப் பார்வற் கொக்கின் (பதிற்றுப்.16). |
| பாகுபடு - தல் | pāku-paṭu- v. intr. <>பாகு2+. To be classified; பிரிவுபடுதல். அவை இனைத்துப் பாகுபடுமென்றும் (தொல். சொல். 427, சேனா.). |
| பாகுபந்து | pākupantu n. <>U. bādband. Joint interest in the property of a village or persons associated (R. F.); ஒரு கிராம நிலத்திலுள்ள கூட்டுரிமை. |
| பாகுபந்துமிராசு | pākupantu-mirācu n. <>பாகுபந்து+. Occupancy of land in coparcenery especially by members of the same family (R. F. ); ஒரு குடும்பத்திலுள்ள பாகஸ்தர்களுக்கு உண்டான நிலக்கூட்டுரிமை. |
| பாகுபாடு | pākupāṭu n. <>பாகுபடு-. Division, sub-division, class; பிரிவு படுகை. |
| பாகுலம் | pākulam n. <>bāhula. The month of Kārttikai=November-December; கார்த்திகை மாதம். (W.) |
| பாகுவலயம் | pāku-valayam n. <>bāhu+valaya. Armlet; தோள்வளை. (S. I. I. ii, 163.) |
| பாகுவன் | pākuvaṉ n. <>pākuka. Cook; சமையற்காரன். (யாழ். அக.) |
| பாகுளி | pākuḷi n. perh. bāhulī. Full moon in the month of Puraṭṭāci; புரட்டாசி மாதத்துப் பௌர்ணமி. அதைப் பாகுளி யென்று (விநாயகபு. 37, 81) ). |
