Word |
English & Tamil Meaning |
---|---|
ஆனந்தபரவசம் | āṉanta-paravacam n. <>id.+. A state of being transported with joy; மகிழ்ச்சியால் தன்னைமறக்கை. (கோயிற்பு.இரணிய.55.) |
ஆனந்தபாஷ்பம் | āṉanta-pāṣpam n. <>id.+. Tears of joy; ஆனந்தக்கண்ணீர். |
ஆனந்தபைரவம் | āṉanta-pairavam n. <>id.+. A medicated mineral powder, Plumbi oxidumrubram; சிந்தூர வகை. ஆனந்தபைரவம்... வருதிரிதோஷம் போமே (பதார்த்த.1209). |
ஆனந்தபைரவி | āṉanta-pairavi n. <>id.+. A specific musical mode; ஓரிராகம். |
ஆனந்தம் 1 | āṉantam n. <>ā-nanda. 1. Supreme felicity, rapturous joy, bliss; பேரின்பம். ஆனந்தம்மே யாறா வருளியும் (திருவாச.2. 106). 2. Death; 3. Fault or blemish in poetry, of six kinds, viz., எழுத்தானந்தம், சொல்லானந்தம், பொருளானந்தம், யாப்பானந்தம், தூக்கானந்தம், தொடையானந்தம்; |
ஆனந்தம் 2 | āṉantam n. Greater Galangal. See அரத்தை. (மூ.அ.) |
ஆனந்தமயகோசம் | āṉanta-maya-kōcam n. <>ā-nanda+maya+. (Phil.) Innermost or causal body, 'the sheath of bliss,' one of paca-kōcam, q.v.; பஞ்ச கோசத்துள் ஒன்று. (சி.சி.பர.மாயா.8.) |
ஆனந்தமயம் | āṉanta-mayam n. <>id.+. 1. That which is full of bliss, unalloyed happiness; இன்பநிறைந்தது. ஆனந்த மயமான வாதியை (தாயு.திருவருள்வி.3). 2. Innermost sheath of the soul. See ஆனந்தமயகோசம். |
ஆனந்தமூலி | āṉanta-mūli n. <>id.+. Hemp, for it produces joy by intoxication; கஞ்சா. (சங்.அக.) |
ஆனந்தரியம் | āṉantariyam n. <>ānantarya. The order in which subjects of study should succeed one after another; இவை ஆராய்ந்தபின் இதுகேட்கற்பாற் றென்னும் யாப்பு. (நன்.சிறப்பு.விருத்.) |
ஆனந்தவருவி | āṉanta-v-aruvi n. <>ā-nanda+. Tears of joy, flowing in streams; ஆனந்தக்கண்ணீர்ப்பெருக்கு. |
ஆனந்தவல்லி 1 | āṉanta-valli n. <>ā-nanda-vallī. The second portion of the Taittirīya Upanisad; தைத்திரிய உபநிடத்தின் ஒருபாகம். |
ஆனந்தவல்லி 2 | āṉantavalli n. A prepared arsenic; கோழித்தலைக்கந்தகம். (மூ.அ.) |
ஆனந்தவாதி | āṉantavāti n. A prepared arsenic; கௌரிபாஷாணம். (மூ.அ.) |
ஆனந்தவுவமை | āṉanta-v-uvamai n. <>ā-nanda+. Fault of comparing great things with small; மிகவும் இழிந்தபொருளோடு ஒப்பிடுதலாகிய உவமைக்குற்றம். (புறநா.60, உரை.) |
ஆனந்தவோமம் | āṉanta-v-ōmam n. <>id.+hōma. Homa ceremony performed on the tenth day after a death, as marking the close of mourning; தசாகத்தன்று தீட்டுக்கழியச் செய்யுஞ் சடங்கு. |
ஆனந்தன் | āṉantaṉ n. <>id. 1. Siva, Himself being the Supreme Bliss; சிவன். அத்தரானந்தர் (திருவாச.17. 3). 2. Arhat; |
ஆனந்தி - த்தல் | āṉanti- 11 v.intr. <>id. To feel joy or happiness; மகிழ்வடைதல். |
ஆனந்தை | āṉantai n. <>ā-nandā. 1. Pārvatī, as Supreme Bliss; உமாதேவி. 2. A secondary melody-type of the Kuṟici class; 3. Indian globe-thistle. See கொட்டைக்கரந்தை. |
ஆனம் 1 | āṉam part. Term used to designate some letters of the Tamil alphabet for facility of pronunciation; எழுத்துச்சாரியை. (தொல்.சொல்.298,உரை.) |
ஆனம் 2 | āṉam n. cf. pāna. Toddy, any intoxicating liquor; கள். (திவா). (W.) |
ஆனம் 3 | āṉam n. <>yāna. 1. Raft, float; தெப்பம். (திவா). 2. Ship, vessel, boat; |
ஆனமட்டும் | āṉa-maṭṭum adv. <>ஆ-+. As much as one can, as far as practicable; கூடியவரை. உன்னா லானமட்டும் பார். |
ஆனமானமாய் | āṉa-māṉam-āy n. prob. redupl. of மானம். Properly, in a proper manner, excellently; சிறப்பாய். காரியத்தை ஆனமானமாய்ச் செய்யவில்லை. Loc. |
ஆனமானவன் | āṉamāṉavaṉ n. prob. id. Worthy, respectable person; சிறந்தவன். (W.) |
ஆனவன் | āṉavaṉ n. <>ஆ-. 1. Expletive ending of nouns, masc. sing. nom; ஆண்பால் எழுவாய் வேற்றுமைச் சொல்லுருபு. தாதையானவன் முன்னரெய்தி (கந்தபு.மார்க்க.8). 2. Friend; |
ஆனவாசி | āṉa-vāci adv. <>id.+. Since, for that reason; ஆகையினாலே அவன் புத்திமானான வாசி உன்சூதைக் கண்டுகொண்டான். Loc. |
ஆனன் | āṉaṉ n. <>ஆன்1. Siva, the rider on the bull; சிவன். (தேவா.1029,2). |