Word |
English & Tamil Meaning |
---|---|
ஆனனம் | āṉaṉam n. <>ānana. Face; முகம். (பிங்.) |
ஆனா | āṉā adj. prob. அகல்-. 1. Unceasing; நீங்காத. 2. Imperishable; 3. Boundless; 4. Innumerable; |
ஆனாமை 1 | āṉāmai n. neg. of ஆன்றல். 1. Not ceasing; நீங்காமை. ஆனாமை யாயகில நிகில பேத மனைத்தினுள்ளுந் தானாகி (தாயு.பன்மாலை.5). 2. Not decaying or perishing, perpetual; |
ஆனாமை 2 | āṉāmai n. The 21st nakṣatra. See உத்தராடம். (W.) (W.) |
ஆனாயநாயனார் | āṉāya-nāyaṉār n. <>ஆனாயன்+. A canonized Saiva saint, one of 63; அறுபத்துமூவர் நாயன்மாருள் ஒருவர். (பெரியபு.) |
ஆனாயன் | āṉāyaṉ n. <>ஆன்1+ஆயன். Man of the cowherd caste; மாட்டிடையன். ஆனாயனானானை. (திவ்.பெரியதி.5, 6, 3). |
ஆனால் | āṉāl conj. <>ஆ-. 1. But; ஆயின். 2. Because; |
ஆனாலும் | āṉālum conj. <>id. However; ஆயினும். (தாயு.சுகவாரி.5.) |
ஆனி 1 | āṉi n. 1. The third month of the Tamil calender year (June-July); மூன்றாமாதம். 2. The 19th nakṣatra. See மூலம். 3. The 21st nakṣatra. See உத்தராடம். |
ஆனி 2 | āṉi n. <>ஆன்1. A river near Karūr. See ஆன்பொருநை. (பிங்.) |
ஆனி 3 | āṉi n. <>hāni. Harm, injury, destruction, ruin; கேடு. நின்பிள்ளை மேனிக்கொரானிவந் திலது (கம்பரா.இரணிய.84). |
ஆனிக்கருந்தலை | āṉi-k-karun-talai n. <>ஆனி1+. Close of the month of Aṉi, which marks the end of the harvest season; ஆனிமாதக்கடைசி. |
ஆனிக்காலாவதி | āṉi-k-kālāvati n. <>id.+kāla+ava-dhi. 1. Harvest season which extends down to the end of Aṉi; ஆனிமாதத்தோடு முடியும் அறுவடைக்காலம். 2. The end of the month of Aṉi being the limit of time for redeeming usufructuary mortgages on lands; |
ஆனித்தூக்கம் | āṉi-t-tūkkam n. <>id.+. Calm prevailing on the sea in the month of Aṉi; ஆனிமாதத்திற் கடலி னமைதி. (J.) |
ஆனியம் 1 | āṉiyam n. <>ahani. (loc. sing. of ahan). 1. Solar day from sunrise to sunrise; நாள். (பிங்.) 2. Lunar day; 3. Season; |
ஆனியம் 2 | āṉiyam n. <>ahan-ya. Daily allowance, batta; நாட்படி. இரட்டி ஆனியம் பெறுவதாகவும். (Insc.) |
ஆனிரை | āṉirai n. <>ஆன்1+நிரை. Herd of cows; பசுக்கூட்டம். ஆனிரை மேய்க்கநீ போதி (திவ்.பெரியாழ்.2, 7, 1). |
ஆனிலன் | āṉilaṉ n. <>ānila. 1. Hanumān, being a son of vāyu; அனுமான். (W.) 2. BhIma being another son of Vāyu; |
ஆனிலை | āṉilai n. <>ஆன்1+நிலை. 1. Cowstall, cowshed; பசுக்கொட்டில். அனிலை..உமிழ்வோ டிருபலனுஞ் சோரார் (ஆசாரக்.33). 2. Name of the Siva shrine at karūr; |
ஆனிலையுலகம் | āṉilai-y-ulakam n. <>id.+. See ஆனுலகு. மேல தானிலை யுலகத் தானும் (புறநா.6). |
ஆனீர் | āṉīr n. <>id.+ நீர். Urine of the cow; கோமூத்திரம். ஆனீர் கண்கழூஉக் காணப்பட்டான். (இரகு.யாக.98). |
ஆனுகூலியம் | āṉukūliyam n. <>ānu-kūlya. Suitableness, agreement of minds, friendliness; அனுகூலமுடைமை. |
ஆனுபூர்வி | āṉupūrvi n. <>ānupūrvi. Order, sequence; சிரமமான தொடர்ச்சி. (சீவக.3076, உரை.) |
ஆனும் | āṉum <>ஆயினும். adv.; conj. Also, at least; Either.... or; ஆயினும். ஐந்தை யனைத்தானு மாற்றிய காலத்து (நாலடி.329). ஆவது. எட்டானும் பத்தானு மில்லாதார்க்கு (சீவக.1549). |
ஆனுலகு | āṉ-ulaku n. <>ஆன்1+. A part of heaven, called kōlōkam, identified with Krṣṇa's heaven; கோலோகம். (அக.நி.) |
ஆனேறு | āṉ-ēṟu n. <>id.+. Bull, as male of the cow; எருது. ஆனேறூர்ந்தோன் (சிலப்.30. 141). |
ஆனை | āṉai n. <>யானை. [T. ēnuga, K. Tu. āne, M. āna.] 1. Elephant; யானை. ஆனையாய்க் கீடமாய் (திருவாச.8. 14). 2. Red-wooded fig tree. See அத்தி. |
ஆனைக்கண் | āṉai-k-kaṇ n. <>id.+. Round, black spots appearing on fruits when they are over-ripe or spoiled; அளிந்தபழத்தில் விழும் கறுப்புப்புள்ளி. பலாப்பழம் ஆனைக்கண் பட்டது. (W.) |
ஆனைக்கரடு | āṉai-k-karaṭu n. <>id.+. Hard soil occupied by large Bermuda grass; ஆனையறுகு பற்றிய கரட்டுநிலம். Loc. |