Word |
English & Tamil Meaning |
---|---|
இந்தப்படிக்கு | inta-p-paṭikku adv. <>id.+. A term used in writing documents, and meaning 'in confirmation of which'. See இப்படிக்கு. இந்தப்படிக்கு என் மனோராஜியில் எழுதிக் கொடுத்த அடைமான பத்திரம். |
இந்தம் | intam n. <>T. ciṇta. Tamarind. See புளி. (மூ.அ.) |
இந்தளங்குறிஞ்சி | intaḷaṅ-kuṟici n. cf. hindōla. (Mus.) An ancient melody-type; ஒருபண். (திவ். திருவாய்.) |
இந்தளம் 1 | intaḷam n. cf. indhana. Incensory, censer; தூபமுட்டி. (சீவக.558, உரை.) |
இந்தளம் 2 | intaḷam n. cf. hindōla. (Mus.) An ancient secondary melody-type of the marutam class; மருதயாழ்த்திறவகை. (பிங்). |
இந்தனம் | intaṉam n. <>indhana. Fuel, firewood; விறகு. இந்தனத்திற்றீ (வேதா.சூ.154). |
இந்தா | intā int. [Tu. indā.] 1. An exclamation expressive of calling a person's attention to something; lo! behold!; இதோ. (சீவக.1232, உரை). 2. (pl. இந்தாரும், இந்தாருங்கள். Courteous forms.) Come here!; 3. An interjection used in the sense of 'Here! take this'; |
இந்திடம் | intiṭam n. <>இந்த+இடம். This place; இவ்விடம். வேதிய ரோதிட முந்திட மிந்திடமே (திருக்கோ. 223). |
இந்தியம் | intiyam n. <>Pkt. indiya. <>indriya. 1. Sense organ; இந்திரியம். கண்முத லிந்தியத்துக்கும் பரனாய் (மணி.29, 299). 2. Semen; |
இந்தியன் | intiyaṉ n. <>E. Indian, native of India; இந்தியாதேசத்தான். Mod. |
இந்தியா | intiyā n. <>L. india <>Sindhu. India; பரதகண்டம். Mod. |
இந்திரகணம் | intira-kaṇam n. <>indra+gaṇa. (Poet.) Foot of three nēr(- - -), as தேமாங்காய், considered as auspicious at the commencement of a poem; செய்யுட்கணத்தொன்று. (இலக்.வி.800, உரை). |
இந்திரகாளியம் | intira-kāḷiyam n. Name of an ancient Tamil treatise dealing with icai-t-tamil, written by Yāmalēntirar; ஓர் இசைத்தமிழ் நூல். (சிலப்.உரைப்பாயி). |
இந்திரகோடணை | intira-kōṭaṇai n. <>indra+ghōṣanā. A festival celebrated in ancient days in honour of Indra, the Lord of the celestials; இந்திரவிழா. (மணி.7, 17). |
இந்திரகோபம் | intira-kōpam n. <>id.+gōpa. Cochineal insect, Coccus cacti; தம்பலப் பூச்சி. இந்திரகோபங் கௌவி யிறகுளர்கின்ற மஞ்ஞை (சீவக.1819). |
இந்திரசாபம் | intira-cāpam n. <>id.+cāpa. Rainbow, poetically described as the bow of Indra; வானவில். தாலந்தனில் வந்ததொரிந்திரசாப மென்ன (அரிச்.பு.நாட்டு.10). |
இந்திரசாலம் | intira-cālam n. <>id.+. Literally, magic that cannot be detected by the senses; jugglery; legerdemain; மாயவித்தை. அதிலாசை யொழிந்தா ரிந்திரசால மெனா (பாரத.நச்.19). |
இந்திரசாலி | intira-cāli n. prob. indra+jāla. Sage-leaved alangium, having fruits which have the magic power to leave and return to the three on dark nights; அழிஞ்சில். (மலை). |
இந்திரசித்து | intira-cittu n. <>indra+jit. Mēghanāda, Rāvaṇa's eldest son, who vanquished Indra; இராவணுனுடைய மூத்த மகன். (கம்பரா.பாசப்.38). |
இந்திரசிறப்பு | intira-ciṟappu n. <>id.+. A religious ceremony performed before the midday meal, consisting in the offering of small portions of cooked food to Indra and other gods; வைசுவதேவம். இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர் (மணி.11. 88). |
இந்திரசுகந்தம் | intira-cukantam n. Indian sarsaparilla. See நன்னாரி. (மலை). |
இந்திரஞாலம் | intira-ālam n. <>indra+jāla. 1. Magic art; மாயவித்தை. இந்திர ஞாலங்காட்டிய வியல்பும் (திருவாச.2, 43). 2. Specious doctrines, such as those of heretics; 3. Name of the chariot of Sūra-Padma; |
இந்திரதனு | intira-taṉu n. <>id.+dhanuṣ. Rainbow, the bow of Indra; வானவில் இந்திரதனுவென விலங்கக ழுடுத்து (மணி.28, 22). |
இந்திரதிசை | intira-ticai n. <>id.+. The cardinal direction of the east, of which the guardian deity is Indra; கிழக்கு. (திவா). |
இந்திரதிருவன் | intira-tiruvaṉ n. <>id.+ திரு. Person of great affluence, having the wealth of Indra; இந்திரனைப்போற் செல்வமுடையவன். இந்திர திருவன் சென்றினி தேறலும் (மணி.19,116). |