Word |
English & Tamil Meaning |
---|---|
இந்திராபதி | intirā-pati n. <>indirā+pati. Viṣṇu, the consort of Laksmī; திருமால். (பாரத.இந்திரப்.14). |
இந்திரி 1 | intiri n. <>aindrī. The eastern cardinal direction, as Indra's quarter; கிழக்கு. இந்திரி முதற்றிசை யெட்டுங் கேட்டன (கம்பரா.வாலிவதை.9). |
இந்திரி 2 | intiri n. A sensitive-plant, l. sh., Mimosa hamata; செடிவகை. |
இந்திரியக்காட்சி | intiriya-k-kāṭci n. <>indriya+. (Log.) Sense-perception; ஆன்மா பொறிபூதங்களுடனேகூடி நிருவிகற்பமாய் அறியும் அறிவு (சி.சி.அளவை.6). |
இந்திரியக்கொடி | intiriya-k-koṭi n. Sensitive-plant, mimosa; சுண்டி. (L.) |
இந்திரியஞானம் | intiriya-āṉam n. <>indriya+. Sensation. See இந்திரியக்காட்சி. (சி.சி.அளவை.6). |
இந்திரியநிக்கிரகம் | intiriya-nikkirakam n. <>id.+ Spiritual inhabition of the organs of sense; பொறியடக்கம். |
இந்திரியம் | intiriyam n. <>indriya. 1. Organ of sense; பொறி. 2. Semen; |
இந்திரியவம் | intiri-yavam n. <>indra+yava. Seeds of Holarrbena antidysenterica; வெட்பாலையரிசி. (தைலவ.தைல.116). |
இந்திரியஸ்கலனம் | intiriya-skalaṉam n. <>indriya+skhalana. Spermatorrhea; வீரியங் கழலுகை. |
இந்திரியஸ்கலிதம் | intiriya-skalitam n. <>id.+skhalita. See இந்திரியஸ்கலனம். . |
இந்திரேபம் | intirēpam n. prob. indra-pāda-pa. Conessi bark. See வெட்பாலை. (மலை). |
இந்திரேயம் | intirēyam n. Pavetta. See பாவட்டை. (மலை.). |
இந்திரை | intirai n. <>Indirā. Laksmī; இலக்குமி. (கம்பரா.இராவணன்வதை.120). |
இந்திரைக்குமூத்தாள் | intiraikku-mūttāḷ n. <>id.+. The goddess of ill-luck, the elder sister of Laksmī; மூதேவி. (சூடா.) |
இந்திரைகேள்வன் | intirai-kēḷvaṉ n. <>id.+. Viṣṇu, the consort of Laksmī; திருமால். (கந்தபு.திக்குவிசய.89). |
இந்தீவரம் | intīvaram n. <>indīvara. 1. Blue nelumbo. See கருங்குவளை. இந்தீவர வல ரொக்கு மிடற்றார் (வெங்கைக்கோ.286). 2. Blue Indian water-lily. See கருநெய்தல். |
இந்து 1 | intu n. <>indu. 1. Moon; சந்திரன். அருக்கனெச்சன் இந்துவனல் (திருவாச.13, 4). 2. Camphor cinnamon. See கர்ப்பூரமரம். 3. The fifth nakṣatra. See மிருகசீரிடம். |
இந்து 2 | intu n. <>sindhu-ja. Rock-salt; இந்துப்பு. (தைலவ). |
இந்து 3 | intu n.. <>U. hindu <>sindhu. 1. The river Indus; சிந்துநதி. (W.) 2. Hindu, as one who professes Hinduism; |
இந்து 4 | intu n. 1. A prepared arsenic; கௌரிபாஷாணம். (மூ.அ). 2. Strychnine tree. See எட்டி. |
இந்துகமலம் | intu-kamalam n. <>indu+. The blossom of the white lotus; வெண்டாமரைப்பூ. (மலை.) |
இந்துகாந்தம் | intu-kāntam n. <>id.+kānta. Moonstone. See சந்திரகாந்தம். (நீதிவெண்.50). |
இந்துசிகாமணி | intu-cikāmaṇi n. <>id.+. Siva, so called because He wears the moon as a jewel on His head; சிவன். (திருவாச.49, 7). |
இந்துசேகரன் | intu-cēkaraṉ n. <>id.+šēkhara. Siva, so styled because He wears the moon on the crest of His head; சிவன். (தேவா.485, 5). |
இந்துதேசம் | intu-tēcam n. <>U. hindu+. The country of India; பரதகண்டம். Mod. |
இந்துப்பு | intuppu n. <>sindhu+ உப்பு. Rock salt or sodium chloried used in medicine, so called because it was brought from Sindh; மருந்துப்புவகை. (பதார்த்த.1096). |
இந்துமராம் | intu-marām n. cf. இந்துளம். Common cadamba. See கடம்பு. (மலை.). |
இந்துரேகை | intu-rēkai n. <>indu+. (Aston.) Digit of the moon; சந்திரகலி. (W.) |
இந்துவாரி | intuvāri n. <>indīvarī. A common climber with many thickened fleshy roots. See தண்ணீர்விட்டான். (மலை.). |
இந்துவி | intuvi n. <>U. hinduvī. The Hindī language; ஹிந்தி பாஷை. |
இந்துவோடிரவிகூட்டம் | intuvōṭiravikūṭṭam n. <>indu+ ஓடு part.+ இரவி+. New moon, the day when the moon is in conjunction with the sun; அமாவாசை. (சூடா.). |
இந்துள் | intuḷ n. cf. இந்துளி. Emblic myrobalan. See நெல்லி. (மலை.). |
இந்துளம் | intuḷam n. cf. இந்துமராம். Common cadamba. See கடம்பு. (திருப்பு.192). |