Word |
English & Tamil Meaning |
---|---|
இமிசை | imicai n. <>himsā. Annoyance, torment, injury, harm; தீங்கு. பொய்யிலாரிமிசை செய்யார் (நல்.பாரத.ஆசார.30). |
இமிர் - தல் | imir- 4 v.intr. <>இம். 1. To sound, hum; ஒலித்தல். சுரும்பிமிர்ந் திம்மென (கலித்.119, 8). 2. To blow; |
இமில் | imil n. cf. சிமிழ். Hump on the withers of an Indian bull; hump of the zebu; எருத்துத்திமில். எழிலேற் றிமிலின் னேற்ப முடித்தான். (சீவக.2437). |
இமிழ் 1 - தல் | imiḻ - 4 v.intr. <>இம். 1. To sound; ஒலித்தல். புள்ளின மிமிழும் புகழ்சால் விளை வயல் (புறநா.15, 4). 2. To buzz; to make a low continued sound, as the strings of yāz; 3. To sprout, shoot forth; To bind, as by an order; to restrain; |
இமிழ் 2 - த்தல் | imiḻ- 11 v.intr. <>id.; tr. To sound, hum; To fasten or tie; ஒலித்தல். (பிங்.); கட்டுதல். இரண்டுட னிமிழ்க கொளீஇ (சீவக.1835). |
இமிழ் 3 | imiḻ n. <>இமிழ்-. 1. Sound, hum, roar; ஒலி. தொரியிமிழ் கொண்டநும் மியம்போ லின்னிசை (மலைபடு.296). 2. Tie; bond, as of love or devotion; 3. Cord; |
இமிழிசை | imiḻi-cai n. <>id.+. See இயமரம். (பதிற்றுப்.50). |
இமை 1 - த்தல் | imai- 11 v.tr.; intr. To wink.; 1. To glitter, twinkle, shine; 2. To diminish, shrink; இமைகொட்டுதல். அழித்திமைப்பின் (குறள்.775).; ஒளிவிடுதல். (திவா.).; சுருங்குதல். இயமயா வருங்கடன் (கல்லா.7). |
இமை 2 | imai n. <>இமை-. [K. Tu. ime, M. ima.] 1. Eyelid; கண்ணிமை. 2. Winking of the eye; 3. Time spent winking; |
இமை 3 | imai n. 1. Bear; கரடி. (அக.நி). 2. Peacock; |
இமைக்குரு | imai-k-kuru n. <>இமை2+. Sty; இமையிலுண்டாகும் சிறுகட்டி. |
இமைகொட்டு - தல் | imai-koṭṭu- v.intr. <>id.+. To wink; கண்ணீதழ் சேர்தல். |
இமைப்பளவு | imaippaḷavu n. <>இமைப்பு+அளவு. Time taken in winking; a moment; கண்ணிமைப்போது. இமைப்பளவுந் துன்பமொன்றில்லாத (சூளா.துற.221). |
இமைப்பு | imaippu n. <>இமை-. 1. See இமைப்பளவு. இழைபக விமைப்பி னெய்திட்டு (சீவக.1680). 2. Dazzling brilliance; |
இமைப்பொழுது | imai-p-poḻutu n. <>id.+. Brief moment of time, as the twinkling of an eye; க்ஷணம், இமைப்பொழுது மென்னெஞ்சினீங்காதான் றாள்வாழ்க (திருவாச.1, 2). |
இமைபிற - த்தல் | imai-piṟa- v.intr. <>id.+. To wink, as the eyes; இமைத்தல. உம்ப ரிமை பிறப்ப (பரிபா.17, 31). |
இமைபொருந்து - தல் | imai-poruntu- v.intr. <>இமை2+. To sleep, close one's eyelids; நித்திரையடைதல். (திவ்.நாய்ச்.5, 4). |
இமையவர் | imaiyavar n. <>id. Celestials who have characteristic eyelids; தேவர். (திவ்.பெரியாழ், 4,7,4). |
இமையாடு - தல் | imai-y-āṭu- v.intr. <>id.+. To wink, as the eyes; கண்கொட்டுதல். |
இமையார் | imaiyār n. <>இமை-+ஆ neg. The gods, who never wink their eyes; தேவர். (குறள்.906). |
இமையிலி | imai-y-ili n. <>இமை2+. Garuda, on whom Viṣṇu rides, so called because he is represented to be always wakeful and never winking; கருடன். (பிங்). |
இமையோர் | imaiyōr n. <>id. See இமையவர். (தொல்.பொ.248). |
இய - த்தல் | iya- 12 v.tr. <>இக-. To pass beyond, excel, transcend; கடத்தல். உணர்ந்துரு வியந்தவிந் நிலைமை (திவ்.திருவாய்.1,3,6). |
இயக்கம் 1 | iyakkam n. <>இயங்கு-. 1. Motion; moving about, as showing signs of life; இயங்குகை. (குறள்.1020). 2. Expression, as of the eyes; 3. Way, path; 4. A musical composition, of four different kinds, viz., முதனடை, வாரம், கூடை, திரள்; 5. Pitch of three kinds, viz., வலிவு, மெலிவு, சமன் or high, low and middle; 6. Greatness, excellence; 7. Excrement; |
இயக்கம் 2 | iyakkam n. <>yakṣa. The north quarter, which is the abode of the Yakṣas; வடதிசை. (W.) |
இயக்கர் | iyakkar n. <>id. Yakṣas, a class of celestials; one of patineṇ-kaṇam, q.v.; பதினெண் கணத்துளொரு கணத்தார் . (கம்பரா.தாடகை.26). |