Word |
English & Tamil Meaning |
---|---|
இயமான் | iyamāṉ n. <>yajamāna. See இயமானன,1. நான்மறையோனுமகத் தியமான்பட (திருவாச. 14, 14). |
இயமானகணம் | iyamāṉa-kaṇam n. <>id.+. (Pros.). Foot of three nēr (- - -). See இந்திரகணம். (வெண்பாப். முதன்மொழி, 20, உரை.) |
இயமானன் | iyamāṉaṉ n. <>yajamāna. 1. Sacrificer; யாகத்தலைவன். இயமானனாம் விமலா (திருவாச. 1, 36). 2. Life, soul; |
இயர் | iyar part, Vbl. opt. ending; வியங்கோள்விகுதி. பொய்யா கியரோ பொய்யா கியரோ (புறநா. 233). |
இயல்(லு) 1 - தல் | iyal- 3 and t v.intr. 1. To be possible; கூடியதாதல். இயல்வது கரவேல் (ஆத்திசூ.) 2. To befall, happen; 3 To be associated with; 4. To abide; 5. To be made of, constituted; 6. To dance, frisk about; 7. To go on foot; to move forward; 8. To walk about gaily;1. [M. iyal.] To accept, agree to;2. To draw near, approach; 3. To resemble; to be like unto; 1. [ M.iyal.] To accept, agree to; 2. To draw near, approach; 3. To resemble: to be like unto; |
இயல் 2 | iyal n. <>இயல்-. 1. Nature , property, quality; தன்மை. ஈண்டுசெலன் மரபிற் றன்னியல் வழாஅது (புறநா. 25,2). 2. [M. iyal.] Fitness, worth; 3. Delicacy, softness, tenderness; 4. Good conduct; conduct appropriate to one's caste, rank or office; 5. Affection continued from birth to birth; 6. Pace; gait, as of a horse; 7. Likeness, similitude; 8. Literary Tamil. See இயற்றமிழ். 9. Treatise, esp. the Agama works; 10. Section of a work containing chapters treating of a series of subjects or things in order; chapter; 11. Chanting in a chorus the Tivya-p-pirapantam constituting the Vaiṣṇava sacred hymns. |
இயல்(லு) 3 - தல் | iyal- 3 and 5 v.intr. <>இகல்-. To compete, wager; போட்டிபோடுதல். இயலு மாலொடு நான்முகன் (தேவா. 601, 8). |
இயல் 4 | iyal n. <>id. Rivalry, competition; மாறுபாடு. இயலாடிய பிரமன்னரி யிருவாக்கறிவரிய (தேவா. 979, 9). |
இயல்பளவை | iyalpaḷavai n. <>இயல்பு+. Determination of the meaning of a word from the context; one of four kinds of judgement; சொல்லின் பொருளைச் சந்தர்ப்பத்தினால் நிச்சயிக்கும் பிரமாணம். (சி.சி. அளவை, 1.) |
இயல்பாகவேபாசங்களினீங்குதல் | iyalpākavē-pācaṅkaḷiṉīṅkutal n. <>id.+. Freedom, by nature, from all dross or other impurities which fetter souls; one of civaṉ-eṇ-kuṇam, q.v.; சிவனெண்குணத் தொன்று. (குறள், 9, உரை.) |
இயல்பாயிரு - த்தல் | iyalpāy-iru- v.intr. <>id.+. To be influential or powerful; செல்வாக்கோடிருத்தல். (W.) |
இயல்பு | iyalpu n. <>இயல்-. 1. Nature, property, quality; சுபாவம். இயல்புகாண் டோற்றி மாய்கை (சி. சி. 1.3). 2. Proper behaviour, good conduct; 3. Goodness; 4. Propriety, regularity, genuineness; 5. Prescribed code of conduct; 6. Circumstances, account; |
இயல்புநயம் | iyalpu-nayam n. <>id.+. One of nayaṅkaḷ-nāṉku, or four principles of life according to Buddhism; நயங்கள் நான்கினுள் ஒன்று. (மணி. 30, 218.) |
இயல்புபுணர்ச்சி | iyalpu-puṇarcci n. <>இயல்பு+. (Gram.) Combination of words without augmentation, change or elision; விகாரமின்றிச் சொற்கள் புணர்வது. (நன். 153, உரை.) |
இயல்புவழக்கு | iyalpu-vaḻakku n. <>id.+. (Gram.) Denoting a thing by the word that usage has sanctioned as its natural name, which usage is of three kinds, viz., இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉ, as dist. fr. தகுதி வழக்கு; எப்பொருளுக்கு எப்பெயர் இயல்பிலமைந்ததோ அப்பெயராலேயே அப்பொருளைக் கூறுகை. (நன். 267.) |
இயல்புளி | iyalpuḷi adv. <>id.+ உளி. In accordance with the established custom or order; விதிப்படி. இயல்புளி வழிபட்டு (காஞ்சிப்பு. அபிராமி 4). |
இயல்பூதி | iyal-pūti n. prob. இயல்1- +būti. 1. Bael tree. See வில்வம். (மலை.) 2. A sticky plant growing in sandy places. See நாய்வேளை. |