Word |
English & Tamil Meaning |
---|---|
இயற்படமொழிதல் | iyaṟ-paṭa-moḻital n. <>id.+. (Akap.) A woman's expatiation of her lover's good qualities; தலைவன் குணங்களைத் தலைவி புகழ்ந்துகூறும் அகத்துறை. (திருக்கோ. 378.) |
இயற்பலகை | iyaṟ-palakai n. <>id.+. The miraculous seat-board of the last Tamil Sangam in Madura. See சங்கப்பலகை. (திருவாலவா. 56, 10.) |
இயற்பழித்தல் | iyaṟ-paḻittal n. <>id.+. (Akap.) Theme of the companion of the heroine belittling the hero's qualities; தலைவன் குணங்களைத் தோழி இகழ்ந்து கூறும் அகத்துறை. (திருக்கோ. 376.) |
இயற்பா | iyaṟ-pā n. <>id.+. Name of a section of the Tivya-p-pirapantam; திவ்யப்பிரபந்தத்துள் ஒரு பகுதி. |
இயற்பெயர் | iyaṟ-peyar n. <>id.+. Proper name, naturally or arbitrarily given; வழங்குதற்கு இடப்பட்ட சிறப்புப்பெயர். (தொல். சொல். 176.) |
இயற்றமிழ் | iyaṟṟamiḻ n. <>id.+. Literary Tamil, poetry or prose, conforming to the rules of Tamil grammar; one of mu-t-tamiḻ, q.v.; a broad division of Tamil literature embracing all belles-lettres except dramas and musical compositions; முத்தமிழுள் ஒன்று. (பிங்.) |
இயற்றல் | iyaṟṟal n. இயற்று-. Effort, exertion, endeavour; முயற்சி. (திவா.) |
இயற்றளை | iyaṟṟaḷai n. <>இயல்+தளை. See இயற்சீர்வெண்டளை. (காரிகை, ஒழிபி. 4.) |
இயற்றி | iyaṟṟi n. <>இயற்று-. 1. Effort, exertion; முயற்சி. (பிங்.) 2. Position of ease, comfort and happiness; strength; |
இயற்று 1 - தல் | iyaṟṟu- 5 v.tr. caus. of இயல்-. 1. To do, make, perform, effect, execute; செய்தல். இசையா தெனினு மியற்றியோ ராற்றால் (நாலடி. 194). 2. To cause to act, direct or control the movements of; 3. To acquire; 4. To create; 5. To compose; to write, as a book; |
இயற்று 2 | iyaṟṟu n. <>இயற்று-. Implement, utensil; any hollow vessel, as a cup or a coconut shell; பாத்திரம். (J.) |
இயற்றுதற்கருத்தா | iyaṟṟutaṟ-karuttā n. <>id.+. (Gram.) Direct agent who does a thing, as in the sentence தச்சன் தேரை யமைத்தான்; dist. fr. ஏவுதற்கருத்தா; பயனிலைச்செயலை நேரே செய்யும் வினைமுதல். (நன். 297, உரை.) |
இயன்மகள் | iyaṉ-makaḷ n. <>இயல்+. Sarasvatī, goddess of letters; சரசுவதி. (பிரமோத். 8, 20.) |
இயன்மொழி | iyaṉ-moḻi n. <>id.+. See இயன்மொழிவாழ்த்து. (தொல். பொ. 90, உரை.) |
இயன்மொழிவாழ்த்து | iyaṉ-moḻi-vāḻttu n. <>id.+. 1. (Purap.) Theme of glorifying a hero by attributing to him all the noble deeds of his ancestors; தலைவன் குலத்தோர் செய்திகளை அவன் மேலேற்றி வாழ்த்தும் புறத்துறை. (தொல். பொ. 90.) 2. (Purap.) Theme of requesting one to emulate the noble example set by the great benefactors of olden times; 3. (Purap.) Theme of extolling the high qualities of the king; |
இயனம் | iyaṉam n. cf. ஏனம். A bag which loosely hangs down from the waist beltof a toddy drawer, containing implements which he may require for climbing trees and for cutting branches, etc., கள்ளிறக்குவோனது கருவிபெய் புட்டில். (J.) |
இயனெறி | iyaṉeṟi n. <>இயல்+நெறி. Path of approved conduct; even path of rectitude; நல்லொழுக்கம். இயனெறியுங் கைவிடாது (நாலடி. 294). |
இயாகம் | iyākam n. cf. šamyāka. Cassia; கொன்றை. (மலை.) |
இயாத்திரை | iyāttirai n. <>yātrā. Journey, pilgrimage. See யாத்திரை. (நன். 147, மயிலை.) |
இயாத்து | iyāttu n. <>Arab. iyadat. Visiting the sick; வியாதிஸ்தரைப்பார்க்கை. இயாத்துச் செய்யவேண்டியது முஸ்லிம்களின் கடமை. Muham. |
இயாதகம் | iyātakam n. Country mallow. See துத்தி. (மலை.) |
இயாதம் | iyātam n. <>yāta. Elephant goad; யானைத்தோட்டி. (பிங். Ms. ) |
இயுசாவியம் | iyucāviyam n. Cassia; கொன்றை. (மலை.) |
இயூகம் | iyūkam n. <>ஊகம். Black monkey; கருங்குரங்கு. (பெருங். வத்தவ. 17, 14.) |
இயேசு | iyēcu n. <>Gr. 'Iesoūs <>Heb. Yēshu'a. The Tamil form of the personal name of Jesus Christ; கிறிஸ்து நாதரின் இயற்பெயர். |
இயேசுநாதர் | iyēcu-nātar n. <>id.+. Lord Jesus. See இயேசு. . |
இயை 1 - தல் | iyai- 4 v.intr. 1. To be agreeable, palatable; பொருந்துதல். என்போடியைந்த வமிழ்து (நாலடி. 210). 2. To agree, harmonise; 3. To become quite full; To resemble; |