Word |
English & Tamil Meaning |
---|---|
அசலர் | acalar n. <>அயல்1. Neighbours, strangers; அயலார். அசலருஞ் செச் செச் செச் செயென (திருப்பு. 418). |
அசலன் | acalaṉ n. <>a-cala. 1. One who is motionless; அசைவிலாதவன். இந்த ஆன்மா அசரீரியுமா யசலனுமாய் (சி. சி. 8,6, மறைஞா.) 2. God, as motionless; 3. Arhat; |
அசலை | acalai n. <>a-calā. 1. Earth; பூமி. அசலை மங்கை (கந்தபு. இரணியன்யு. 56). 2. Pārvatī; |
அசவல் | acaval n. Gnat; கொதுகு. (சூடா.) |
அசவாகனன் | aca-vākaṉaṉ n. <>aja+. Agni, as riding a goat; அக்கினிதேவன். |
அசவை | acavai n. <>a-japā. Hamsa mantra. See அஜபை. (W.) |
அசற்காரியம் | a-caṟ-kāriyam n. <>a-sat+. Bad or improper deed; தகாதசெய்கை. |
அசற்காரியவாதம் | a-caṟ-kāriya-vātam n. <>id.+. Creationistic doctrine of causation according to which the effect does not exist before its production; உற்பத்திக்குமுன் இல்லமலே காரியந் தோன்றுமென்னுங் கொள்கை. (சித். மர. கண். 11.) |
அசற்சரக்கு | acaṟ-carakku n. <>U.aṣl+. 1. Goods of the first quality; முதற்றரமான பண்டம். 2. Pure article, opp. to adulterated, as ghee; 3. Natural drug, opp. to வைப்புச் சரக்கு; |
அசற்சீட்டு | acaṟ-cīṭṭu n. <>id.+. Original bond. . |
அசற்சூத்திரர் | a-caṟ-cūttirar n. <>a-sat+. Sūdras who do not abstain from animal food and are not religious; மாமிச பக்ஷணமொழியாது சமயாசாரமின்றி யிருக்குஞ் சூத்திரர். (சி. போ. பா. சிறப்புப் புது.) |
அசற்பாத்திரம் | a-caṟ-pāttiram n. <>a-sat+.. Unworthy recipient; தானம்பெறத் தகுதியற்றவன். |
அசற்பிரதி | acaṟ-pirati n. <>U.aṣl+. 1. The original; மூலப்பிரதி. 2. Fair copy; |
அசறு | acaṟu n. cf. அயறு. 1. Mud, mire; சேறு. (பிங்.) 2. Dandruff, scurf; 3. Scab in sheep and goats; 4. Minute insect that sticks on leaves and injures plants; |
அசறுபாய் - தல் | acaṟu-pāy- v.intr. <>அசறு+ To trickle; அசும்பொழுகுதல். (திவ். பெரியாழ். 5,4,8, வ்யா.) |
அசன் 1 | acaṉ n. <>a-sat. (Log.) Fallacy of illustrating the invariable concomitants between the middle term and the major term with a non-existent thing; திருஷ்டாந்தப்போலிகளு ளொன்று. சன்னு மசன்னு மென்றிரு வகையாம் (மணி. 29, 362). |
அசன் 2 | acaṉ n. <>a-ja 1. Being without birth, as the Deity; பிறப்பிலி. (W.) 2. Name of the father of Dasaratha. See அயன். |
அசன்றிகா | acaṉṟikā n. Species of Cleome. See தைவேளை. (மலை.) |
அசனபன்னி | acaṉa-paṉṉi n. <>asana-parṇi. Common sesban. See சிற்றகத்தி. (மலை.) |
அசனம் 1 | acaṉam n. <>ašana. 1. Food; உணவு. கொடுப்பி னசனங் கொடுக்க (நான்மணி. 81). 2. Boiled rice; 3. Hunger; 4. Fat; |
அசனம் 2 | acaṉam n. cf. amsa. 1. Portion; பகுதி. (பிங்.) 2. Measure; |
அசனம் 3 | acaṉam n. <>asana. Indian kino-tree. See வேங்கை. (பிங்.) |
அசனவேதி | acaṉa-vēti n. prob. ašana-bhēdin. 1. Cumin. See சீரகம். (இராசவைத். 37.) 2. Digestive; |
அசனாமிர்ததைலம் | acaṉāmirta-tailam n. <>asana+amrta+. Unguent made of the bark of Pterocarpus marsupium, Tinospora cordifolia and other herbs; வேங்கைப்பட்டை சீந்தில் முதலியவற்றினின்றும் வடிக்கும் ஒருவகைத் தைலம். (தைலவ. தைல. 47). |
அசனி | acaṉi n. <>ašani, 1. Thunderbolt; இடி. பெருவிற லசனி (ஞானா. 19). 2. Weapon of Indra; 3. Frankincense leaf; |
அசனிபாதம் | acaṉi-pātam n. <>id.+ pāta. Stroke of lightning; இடியின்வீழ்ச்சி. (சி.சி. 11, 7, சிவாக்.) |
அசனியேறு | acaṉi-y-ēṟu n. <>id.+. Thunderbolt; இடியேறு. அசனியேறென வுரப்பி (கூர்மபு. அந்தகா. 61). |
அசா | acā n. <>அயா. Languor, faintness; தளர்ச்சி. அசாஅத்தா னுற்ற வருத்தம் (நாலடி. 201). |
அசாக்கிரதை | a-cākkiratai n. <>a-jāgrattā. Inattentiveness, heedlessness, carelessness. . |
அசாகளத்தனம் | acā-kaḷa-t-taṉam n. <>ajā+gala+stana. Nipple or fleshy protuberance hanging down from the neck of goats; ஆட்டின்கழுத்திற் றொங்குஞ் சதை. அசாகளத்தனம் போல அதிக சங்கியை கொள்வது எற்றிற்கு? (சிவசமவா. 39). |